எழுந்தவுடன் கடைபிடிக்கவேண்டிய சில விஷயங்கள் 


வணக்கம் நண்பர்களே ,


நாம் கற்றுக்கொள்ளும் மற்றும் தினமும் செய்யும் சிறிய விசயம் கூட மிகப்பெரிய வெற்றியை தரலாம் , அதனால் சிறிய விசயம்தானே என்ற அலட்சியம் வேண்டாம் 


ஒவ்வொரு நாளுமே நமக்கு புதுசு தான் அதனால் இவ்வளவு நாள்போனது  நான் எதுமே சாதிக்கவில்லையென்று இன்னும் காலத்தை வீணாக்காமல் இனிமேலும்என்னால்  சாதிக்கமுடியும் என்று  போறது தான் வெற்றியை தரும்

இதுவரை எப்படி இருந்தாலும் பரவாயில்லை ஆனால்,  இனிமேலும் அப்படியே இருக்கக்கூடாது அப்படியும் இருந்தா வாழ்க்கை தோல்வில்  தான் போய்முடியும் .

காலையில் எழும்போதே இன்னைக்கு நான் ஏதாவது என்னுடைய வெற்றிக்காக அல்லது வீட்டுக்காக செய்யவேண்டும் என்ற நல்ல மனதோடு ஒரு ஊக்கமாக எழவேண்டும். அதைவிட்டுட்டு ஐயோ இன்னைக்கு எதுக்கு தான் எழுறோம்னு இருந்தா ஒண்ணுமே பண்ணமுடியாது


உண்மையை சொல்லனும்னா ஒருநாளுக்கான நல்லது கெட்டது , வெற்றி தோல்வி எல்லாமே நாம் அதிகாலையில் எழும் மனநிலையை பொறுத்தேதான் இருக்கும் , அதுனால தான் சீக்கிரம் எழுந்து நல்ல ஆரோக்கியமான மனதோடு ஒவ்வொரு நாளையும் ஆரம்பிக்கவேண்டும் 

நீங்க ஒருநாள் எழும்போது நல்ல மனதோடு எழுந்து பாருங்க நிறைய வித்தியாசத்தை உணரலாம் 

காலையில் எழுந்தவுடன் சிலநேரம் தியானம் மற்றும் வாழ்க்கையில் வெற்றிபெற்ற சாதனையாளர்களின் பேச்சு , அல்லது ஆன்மீக மஹான்களின் கருத்துகளை கேட்டு அந்த நாளை ஆரம்பித்தால் உறுதியாக அந்த நாள் முழுவதும் ஊக்கமாகத்தான் இருக்கும்.


மேலும் படிக்கவும்:-ஒவ்வொரு நாள் காலையும் எழும்போதும் ஒன்றை மட்டும் நல்லா மனதில் ஏற்றிக்கொள்ளுங்கள் அதாவது இன்னும் நாம்  உயிரோடு தான் இருக்கோம் இறைவன் நமக்கு இன்னொரு வாய்ப்பை கொடுத்திருக்கார் என்று 

அதை எப்படி சரியா பயன்படுத்தலாம் என  பார்க்கணுமே தவிர திரும்பவும் வீணடிக்கக்கூடாது 

காலையில் மட்டும்தான் மனம் அமைதியாக சரியாக இருக்கும் அதனால் அந்த நேரத்தில் தேவையில்லாத விசயத்தை நினைக்காமல் நல்லதை மட்டும் நினையுங்கள் 

கடைசியாக,

இப்ப சொல்லுறது ஏதாவது சாதிக்கனுன்னு நினைக்கிறவங்களுக்கு,

📌 உங்க அலாரம் நேரத்தை 4 to 6 மணியா மாற்றுங்கள்  , தினமும் 5 நிமிடமாவது தியானம் பண்ணுங்கள் , காலையில் வெற்றிக்கான எண்ணத்தை மட்டும் விதையுங்கள் .வெற்றி உறுதி 

📌 ஒவ்வொரு நாளும் நமது திறமையை காட்ட , இந்த பிறவியை அறிய மற்றொரு வாய்ப்பு , அத சரியா பயன்படுத்துங்க .


நன்றி .

தினமும் காலையில் நீங்க நினைக்கும் முதல் விசயம் எது ? comment பண்ணுங்கள் 

---------------------------------------------

Post a Comment

Previous Post Next Post