மன அழுத்தம் நீங்க இதை படியுங்கள் 


வணக்கம் நண்பர்களே,


👉 இந்த உடலில் நாம் இருக்கப்போவது இன்னும் சில வருடங்கள் மட்டும்தான்
உறுதியாக இங்க யாருமே கடைசிவரை வாழப்போறது இல்லை 


freepik.comஉங்களுக்கு கடவுள் மேல நம்பிக்கை இல்லனாலும் இதான் உண்மை நாம் அனைவருமே இறைவனின் அம்சம் ஏன் இறைவன் என்றே சொல்லலாம்.

உயிராய் இறைவன் இருக்கும்போது நமக்கு எதுக்கு பயம் பதட்டம் இருக்கனும் கொஞ்சம் யோசித்துப்பாருங்க 

எப்போதெல்லாம்  மன அழுத்தமாக இருக்கிறதோ அப்போது  "ஓம் நமசிவாய " அல்லது உங்களுக்கு பிடித்த இறைவனின் மந்திரம் எதுவாக இருக்கட்டும் அல்லது நானே இறைவன் இதை சொல்லுங்க உறுதியாக மன அழுத்தம் நீங்கும் இது மாற்ற முடியாத உண்மை.


👉 மன அழுத்தம் வரும்போது முடிந்தவரை தனிமையை தவிர்ப்பது நல்லது
அதேபோல வீட்டை விட்டு  வெளியே வந்து பாருங்க அங்கே நீங்கள் பார்க்கும்  ஒவ்வொரு மனிதனும் நம்மைவிட அதிக மன அழுத்தத்தில தான் இருக்காங்க இருந்தாலும் வாழ்க்கையை நோக்கி பயணம் பன்னிட்டு தான் இருக்காங்க .

இங்க பிரச்சனை இல்லாத மனிதனே இல்ல , பிரச்சனை இல்லனா அவன் மனிதனே இல்லையே கடவுள் நிலையில இருப்பாங்க👉 எப்போதும் சந்தோசத்தை மட்டுமே எதிர்பாக்காதிங்க அதுதான் இங்க முக்கியமா மன அழுத்தத்திற்கு காரணமா இருக்கு ,  கவலைகளுக்கும் கண்ணீற்கும் தயாரா இருக்கவேண்டும்  ஏனென்றால்  கண்டிப்பா இதைநாம் சந்தித்தே ஆகவேண்டும்.


தினமும் காலையில்  முடிந்தவரை 5 நிமிடமாவது தியானம் பண்ணுங்க

தியானம் பண்ணினா மன அழுத்தமே வராது அப்படினு சொல்லல மன அழுத்தம் வந்தாலும் அதை சமாளிக்க தெரியும் அதுக்குதான் தியானம் ரொம்ப முக்கியம்.


மேலும் படிக்கவும்:-


👉 மன அழுத்தம் என்பது மனதால் தான் வருது உண்மையில் மனம் என்பதே ஒரு மாயை தான் , நீங்கள் அந்த மனம் அல்ல இறைவன் என்பதை மீண்டும் மீண்டும் உங்களுக்குள் நினைத்துக்கொள்ளுங்கள் 

மன அழுத்தம் , கஷ்டம் , துன்பம் , தற்கொலை எண்ணம் எல்லாமே வரத்தான் செய்யும் , ஆனால் அதனால் நமக்கு என்ன பிரச்சனை கொஞ்சம் யோசிங்க அது நம்ம கழுத்தை வந்தா நெறிக்குது ? இல்ல அதுக்கு உருவம் தான் இருக்கா?

நாமதான் அதை விடாம வச்சிக்கிட்டே சுத்துறோம் , அப்படி விடமுடியலயா இதெல்லாம் ஒரு ஓரமா இருந்துட்டு போகட்டும் , நமக்கு நிறைய வேலை இருக்கு அதை  பார்ப்போம் .


உங்களை வந்து யாரும்நேரடியாக  தாக்காத வரைக்கும் கவலைபடாதீங்க மத்ததெல்லாம் சும்மா தான் இப்ப இருக்கும் நாளைக்கு காணாம போயிரும்👉 தினமும் நீங்கள் சிரிக்கும் போது கவலைக்கும் , அழும்போது சிரிப்புக்கும் தயாரா இருங்க , எதையும் சமாளிக்கலாம்


இந்த உடலே நீடிக்காது இதுல இந்த மன அழுத்தம் ,கஷ்டம் , கண்ணீர் இதெல்லாம் நீடிக்கவா போது வா நண்பா பார்த்துக்கலாம்.


அதேபோல தினமும் தயவுசெய்து தியானம்பண்ணுங்கள்  இதான் அனைத்தையும் தீர்க்கும் அற்புத மருந்து இத நான் சொல்லல நீங்க கும்பிடும் சாமி உங்க கஷ்டத்தைபுரிந்து  உங்களுக்கு சொல்வதாக நினைத்து கேட்டுக்கோங்க .

உங்ககிட்ட யாராவது அவங்க கஷ்டத்தை சொன்ன கொஞ்சம் காதுகொடுத்து கேளுங்க அவங்கள தனியாக விடாமல்  முடிந்தவரை அவங்க மனதை மாற்ற பாருங்கள், ஆறுதலாக  நாலு வார்த்தை சொல்லுங்கள் 


👉 நீங்க யாருக்காவது நல்லது செய்யணும்னு எண்ணம் இருந்தா தியானம் செய்ய சொல்லுங்க அது போதும்   இதைவிட பெரிய உதவி எதும் இருக்காது .


நன்றி 
-----------------------------------------------------

Post a Comment

Previous Post Next Post