விவேகானந்தர் இறப்பின் மர்மம் என்ன ?


வணக்கம் நண்பர்களே,   

நிறைய இளைஞர்கள் மற்றும் இந்தியாவில் பல ஆன்மீக சிங்கங்களை உருவாக்கிய சுவாமி விவேகானந்தரை பற்றி இன்னமும் நிறைய மக்கள் தவறாகவே சொல்லிட்டுதான் இருக்காங்க அதாவது அவர் விந்தை வெளியேற்றாமல் இருந்தாரு மற்றும் முழு துறவியாக இருந்த காரணம் தான் அவர் இளம் வயதிலே இறக்க காரணம் என்று நம்புறாங்க, அதுவும் இதில் என்ன வேதனை என்றால் அவர் எந்த நாட்டில் ஆன்மீக விதை தூவினாரோ அந்த பாரத நாட்டு மக்களும் அவர் இறந்ததை தவறாக நினைப்பது தான்.சுவாமி விவேகானந்தரின் குருவான பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் எப்போதுமே மற்ற சீடர்களிடம் ஒன்று சொல்லுவாராம் அதாவது நரேன் வேற யாரும் இல்லையப்பா அந்த சிவபெருமானே என்பாராம் ,,அப்படிப்பட்ட ஆன்மீக சிங்கத்தை பற்றி தெரியாத வெளிநாட்டவர் பேசினாலும் பரவாயில்லை நமது நாட்டில் பேசுவது மிகவும் தவறு.

குறிப்பாக நிறைய இளைஞர்கள் மத்தியில் ஒரு பேச்சு இருக்கும் அதாவது விந்தை கட்டுப்படுத்தி வெளியேற்றாமல் இருந்தால் நாம் இளம்வயதில் இறந்துவிடுவோம் அதற்கு உதாரணமாக ஸ்வாமி விவேகானந்தரை சொல்லுவார்கள் .. எப்படிபட்ட மஹான் இதற்கு உதாரணமா ? வேதனையான விஷயம் .


ஒன்றை தெரிந்துகொள்ளுங்கள் நண்பர்களே , இப்போது ஒரு உண்மை குருவிடம் தீட்சை வாங்கும் ஒரு சீடனுக்கே குருவானவர் சரியான யோக பயிற்சி செய்து விந்தை சரியாக மேலேற்றுவதை சொல்லித்தருவார் அப்படி இருக்கும்போது அதை ஸ்ரீ ராமகிருஷ்ணர் சொல்லித்தராமலா இருப்பார் ? இல்லையென்றால் சிவனின் அம்சமாக வந்த விவேகானந்தர்க்கு தெரியாமல் தான் போகுமா என்ன ?? சற்று யோசித்து பாருங்க.இதை பற்றியெல்லாம் குருவிடம் தீட்சை வாங்கியிருக்கும் ஒரு சீடனுக்கு மட்டுமே தெரியும்.

அவர் அதிக நம்பிக்கை வைத்து யார் இந்த மண்ணில் நமக்கு பின் ஆன்மீகத்தை விதைப்பார்கள் என்று நினைத்தாரோ அந்த இளைஞர்களே நீங்கள் தவறாக பேசவேண்டாம் . அவர் முழுவதும் உங்கள்மேல் மட்டுமே நம்பிக்கை  வைத்தார் என்பதை மறக்கவேண்டாம். நாம் விவேகானந்தரை மட்டும் சொல்லவில்லை ஆன்மீக பயிற்சி செய்யும் எந்த ஒரு இளைஞனுக்கும் இந்த மாதுரி விந்தை கட்டுப்படுத்துவதால் மரணம் வராது. அனைத்து யோகிகளும் விந்து சக்தியை ஓஜஸ் இருக்கும் இடத்தில் சரியாக சேர்ப்பார்கள். இதை பற்றி தெரியாதவர்கள் நினைப்பது போல விந்து பை நிரம்பி மரணம் வருவதெல்லாம் கற்பனைக்கு தான் நல்லா இருக்கும் .

ஸ்வாமி விவேகானந்தர் உடல் நல குறைவால் இறந்தது உண்மையாக இருக்கலாம். அது எப்படி யாருக்காக எல்லாம் நமக்கு தான் இறைவன் கொடுத்த தன் கடமையை தன் உடல் நலத்தில் கவனம் செலுத்தாமல் சரியாக உணவு உண்ணாமல் , சரியாக தூங்காமல் தன் கடமையில் மட்டுமே செலுத்தினார், இப்படி இருந்தால் உடல் சரியில்லாமல் தான் போகும் .

எந்த ஒரு மஹானும் தன்னை ஒரு மகானாக, யோகியாக நினைத்து வாழ்வதில்லை அவர்கள் தன் உடலை மறந்து இருப்பார்கள் , அவர்கள் இந்த உடல் தான் முக்கியம் என்றால் அவர்களால் எந்த ஒரு நோயும் வராமல் மிக எளிதாக தடுக்க முடியும், ஒரு யோகிக்கு இதெல்லாம் சர்வ சாதாரணம். மற்றும் அவர்கள் இந்த உடலை பற்றி சிறிதும் கவலை பட்டால்கூட இறைவன் உடனே சரிசெய்து விடுவார் என்பது அவர்களுக்கு தெரியும் . இருந்தாலும் அப்படி அவர்கள் நினைக்ககூட மாட்டார்கள். மற்றும் எந்த ஒரு உண்மையான மஹானும் தன்னுடைய சக்தியை தனக்காக பயன்படுத்தமாட்டார்கள்..

அதேபோல பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் அடிக்கடி சொல்வதுண்டு நரேன் அடிக்கடி சமாதியில் மூழ்குகிறான் இப்படியே இருந்தால் நம்மை விட்டு விரைவில் சென்று விடுவான்.. இப்படி இருக்கும் போது இவரால் எப்படி நீண்ட காலம் இருக்கமுடியும் .. இறைவன் வருவது போவது அவர்களுக்குத்தான் தெரியும் . இதை சாதாரண மனிதனால் அறியமுடியுமா என்ன ?


மேலும் படிக்கவும்:-

ஆன்மீகத்தில் குரு ஏன் தேவைப்படுகிறார் ?  

வள்ளலாரின் அருமையான 10 கொள்கைகள் 

வீரியமே ஒவ்வொரு இளைஞனின் சொத்து 

இங்கே இளைஞர்கள் சரியாக உணரவேண்டிய விசயம் , காமத்தை கட்டுப்படுத்தி இருந்தால் விந்துப்பை வெடித்தெல்லாம் மரணம் வரும் என்று பயம்வேண்டாம் ..சாதாரண ஒருவனால் அதை கட்டுப்படுத்தி இருக்கமுடியாது அப்படி இருக்கும் ஒருவனுக்கு இறைவனே துணையாக இருப்பார் என்பது சத்தியமான உண்மை. இதனால் உங்கள் நண்பன் உங்களை  பற்றி அறிந்து இப்படியெல்லாம் சொன்னால் தயவுசெய்து நம்மவேண்டாம் ..அவனால் கட்டுப்படுத்தி இருக்கமுடியவில்லையெண்டால் உங்களை காமத்தில் சிக்கவைப்பான் அதை அறிந்து அப்படிப்பட்ட நண்பனிடம் சற்று விலகியே இருங்கள். நீங்கள் இறைவன் மேலே நம்பிக்கை வைத்து சரியாக கட்டுப்படுத்தி வாருங்கள் உங்கள் ஆன்மீக வாழ்வும் சரி இல்லறமும் சிறப்பாக இருக்கும் என்பது உறுதி.

இனிமேல் யாராவது சொன்னால் அதை காதில் வாங்காமல் நீங்கள் உங்கள் ஆன்மீக பயிற்சியில் மட்டும்  கவனம் செலுத்துங்கள் அதுபோதும் . இதை தான் ஸ்வாமி விவேகானந்தரும் விரும்புவார்.


நன்றி .   
----------------------------------------------------

Post a Comment

Previous Post Next Post