25 வயதுவரை வீரியத்தை கட்டுப்படுத்து


வணக்கம் நணபர்களே ,


இன்றைய இளைஞர்கள் எல்லாருக்குமே ஒரு பெரிய சந்தேகம் கலந்த பயம் வரும் அதாவது விந்து விட்டால் அது பெரிய பாவமா மற்றும் இதனால் இறைவனை அடையமுடியதா ? அப்படி விந்து கட்டுப்படுத்தினால் எதுவரை கட்டுப்படுத்தவேண்டும் எத்தனை வருடங்கள் இருக்கவேண்டும் இப்படியெல்லாம் சந்தேகம் வரும்.. என்கிட்ட INSTAGRAM ல நிறைய நண்பர்கள் கேட்பது இதைத்தான் சரி அதற்கான பதிவுதான் இது வாங்க பார்ப்போம்.
முதலில் விந்து கட்டுப்படுத்தும் இளைஞன் எத்தனை நாட்கள் மற்றும் வருடங்கள் என்று பார்க்காமல் உங்களால் முடிகிறது என்றால் நீங்கள் உங்கள் வாழ்நாள் முழுவதும் இருக்கலாம் .. ஏனென்றால் எவ்வளவு வருடங்கள் கட்டுப்படுத்தி இருந்தாலும் அதுவரை அபரிவிதமான நன்மைகள் மட்டுமே இருக்கும் என்பது உறுதி.. அப்படி இல்லையென்றால் நம்முடைய ஆன்மீக பெரியவர்கள் சொல்வது போல ஒரு இளைஞன் 25 வயது  வரையாவது பிரம்மசரியம் கடைபிடிக்கவேண்டும் அப்படி இருந்தால் அவனுக்கு எல்லாவித ஒழுக்கங்களும் , சக்திகளும் , முழு வலிமையும் , நீண்ட ஆயுளும் கிடைத்து சிறப்பாக வாழ்வான் என்கிறார்கள்.

பெரியவர்கள் யாரும் திருமணம் செய்யவேண்டாம் என்று சொல்லவில்லை அவர்கள் சொல்வது திருமணத்திற்கு முன்பு விந்து வீண் செய்யவேண்டாம் என்று தான் சொல்கிறார்கள்..

அடுத்து விந்து விட்டால் பாவமா என்று கேட்டால் ? இறைவன் பாவம் என்று எதையும் சொல்வதில்லை ..ஆனால் நமக்கு தான் அது பிரச்சனை நாம் வெளியேற்றினால் அதற்கான பலனை நாம் அனுபவிக்கவேண்டும் .. அது உறுதியாக கஷ்டமான வாழ்கையாகத்தான் இருக்கும் அதான் முடிந்தவரை சுயகட்டுப்பாடு அவசியம் என்று சொல்வதன் காரணம். பாவம் என்று எதுவும் இல்லை நண்பர்களே முடிந்தவரை கட்டுப்படுத்தி வாழுங்கள் சிறப்பாக வாழ்வீங்க அவ்வளவுதான். நீங்கள் விந்து தினமும் வெளியேற்றினாலும் அடுத்தநாளே இறைவனை தேடுங்கள் ..சிலவருடங்கள் போனபின்பு நீங்கள் இறைவனை மட்டுமே தேடுவீங்க மத்ததெல்லாம் அற்பமாகத்தான் இருக்கும்.
எனவே எதற்கும் கவலைவேண்டாம். அதற்காக வீண் செய்யவேண்டாம் நாம் சொல்வது முற்றிலும் என்னால் முடியவே முடியலை என்று சொல்லும் இளைஞர்களுக்கு தான் மற்றவர்கள் தயவுசெய்து வீண் செய்யாமல் இருங்கள்.

அடுத்து இளைஞர்கள் இதில் அடிமையாக இருக்க பெற்றோர்களும் ஒரு காரணமே , அவர்களுக்கு நன்றாக தெரியும் எந்த வயதில் என்ன மாற்றங்கள் வரும் என்று அப்படி இருக்கும்போது 11 , 12 வயது வரும்போதே ஒரு தந்தை தன் மகனுக்கு இதை பற்றி கண்டிப்பாக சொல்லித்தந்து சரியான பாதையை காட்டவேண்டும்.. ஆனால் அப்படி செய்தால் மகன் சாமியாரா போயிருவானு பயம்.

ஒன்றை மற்றும் தெரிந்துகொள்ளுங்கள் விந்தை கட்டுப்படுத்தும் எந்த ஒரு இளைஞனும் சாமி யார் என்று கேட்கமாட்டான் சாமியாகத்தான் போவான் .. இது சிறந்த ஒன்று இல்லையா கடவுள் நிலை அடைவது அவ்வளவு எளிதா என்ன ? அப்படி போனால்தான் போகட்டுமே .. ஆனால் எந்த தந்தையும் இதை சொல்லித்தருவதில்லை ..  எனவே தயவுசெய்து இனிமேல் 12 வயதுக்குள் இருக்கும் பையனுக்கு இதை பற்றி எடுத்து  சொல்லி வீரியத்தின் சிறப்புகளை சொல்லுங்கள் , தியானம் செய்ய சொல்லுங்கள் இதை செய்தாலே போதும் உங்கள் பையன் உறுதியாக வாழ்க்கையை வெல்வது உறுதி நீங்கள் வேற எதுமே சொல்லவேண்டாம். என்னை பொறுத்தவரை ஒரு பையனுக்கு வீரியத்தின் அவசியம் மற்றும் தியானம் பற்றி சொல்லித்தரும் தந்தைதான் ஒரு சிறந்த தந்தை என்பேன் ..ஏனென்றால் இதில் அடங்காதது எதுவுமில்லை.


மேலும் படிக்கவும்:-

அனைத்து வெற்றியாளர்களின் 10 பழக்கவழக்கங்கள் 

ஆன்மீக வாழ்க்கையில் ஏற்படும் தடுமாற்றங்கள் 

துணையென சிவன் இருக்கும்போது துன்பம் ஏன் ? 
 அவ்வளவு தான் நண்பர்களே நீங்கள் அனைவருமே தாராளமாக உங்களுக்கு விருப்பம் இருந்தால் திருமணம் செய்துகொள்ளுங்கள் அதற்கு ஏதும் தடை இல்லை , ஆனால் அதுவரை அதாவது 25 , 28 வயதுவரை பிரம்மச்சரியம்  இருக்க பழகுங்கள் அதுபோதும்..உங்கள் வாழ்க்கையில் எல்லாமே சிறப்பாக இருக்கும்.

இதை முடிந்தவரை 12 வயது நெருங்க இருக்கும் பசங்களுக்கு சொல்லிக்கொடுங்கள்..அவர்களாவது இதை உணர்ந்து ஒரு யோகி போல ஆரோக்கியமாக , மன நிம்மதியுடன் வாழட்டும் மற்றும் இளைஞர்கள் மேலே சொன்னமாதிரி முடிந்தவரை கட்டுப்படுத்தி வாழுங்கள் உங்கள் வாழ்வில் வெற்றி உறுதி.

நன்றி 

------------------------------------------------

2 تعليقات

إرسال تعليق

أحدث أقدم