சுவாமி விவேகானந்தரின் ஆன்மீக சொற்பொழிவு வணக்கம் நண்பர்களே!

சுவாமி விவேகானந்தர் கூறிய கருத்துக்களிருந்து தொகுக்கப்பட்ட கருத்துக்களை பார்க்கலாம் !எல்லா மதங்களும் தியானத்தை வற்புறுத்துகின்றன. தியான நிலையே மனதின் மிக உயர்ந்த நிலை என்று யோகிகள் கூறுகிறார்கள். 

மனம் எப்பொழுது வெளியில் இருக்கும் பொருட்களை இருக்கண்கள் மூலம் பார்க்கிறதோ அல்லது உணர்கிறதோ அப்பொழுது அது தனக்குள் அது உள்வாங்கிக்கொள்கிறது . அதாவது தன்னை அதனுடன் ஒன்றுபடுத்திக்கொள்கிறது .

அந்த பொருட்களின் மீது விருப்பு வெறுப்பு அதுவே உற்பத்திசெய்கிறது ... இதனால் அது அந்த பொருள்களின் மயமாக ஆகிவிடுகிறது .. 

இதை ஒரு தத்துவ ஞானி உவமைப்படுத்தி கூறுகின்றார் ... அதாவது , மனிதனின் ஆன்மா ஒரு பளிங்கு போல் உள்ளது. ( கண்ணாடி போன்று ) இந்த பளிங்கு தன் அருகிலுள்ள எந்த நிறத்தையும் ஏற்றுக்கொள்கிறது ... அது போலவே தான் ஆன்மா எதனுடன் சேர்ந்தாலும் ( அதாவது , உடல் மற்றும் சூழல் ) அதன் தன்மையை அடைகிறது . அதுதான் மிகப்பெரிய கடினமான ஒன்றாகும் . இந்த மாயையோடு உடல் மற்றும் மனம் வழியாக ஆன்மா ஆகிய நாம் ஒன்று சேர்ந்து நமது ஆன்ம ( இறை )தன்மையை மறந்துவிடுகிறோம் .. நாம் தான் இந்த உடல் , இந்த வகை குணம் கொண்ட மனம் என்று நம்மை நாமே அறியாமல் மாற்றி ஏற்றுக்கொள்கிறோம் !

இதனால் தான் நம்மால் நம்முடைய இறைத்தன்மையை உணரமுடியவில்லை ... என்று சுவாமி விவேகானந்தர் கூறுகின்றார் .

தெளிவாக சொன்னால் உதாரணமாக,பளிங்கின் அருகில் ஒரு சிவப்பு மலர் இருப்பதாக வைத்துக்கொள்வோம் , பளிங்கு சிவப்பு நிறம் பெறுகிறது தன்னை மறந்து தான் சிவப்பு என்றே எண்ணுகிறது . 

இதுபோன்று தான் சகோதரர்களே ! நாமும் உடலின் இயல்பிலேயே ஒன்றி நாம் யார் என்பத்தை மறந்து விட்டோம் !.. இது தான் சத்தியமான உண்மை !..அழியக் கூடிய இந்த உடலிலிருந்தே எல்லா துயரங்களும் உண்டாகின்றன . நமது கவலை, சந்தோசம் , சஞ்சலம் , துக்கம் , தொந்தரவு , தவறு, பலவீனம் , திறமை , நன்மை , தீமை இப்படி எல்லாமே நாம் உடம்பே என்று தவறாக எண்ணி ஏமாறுகிறோம். இப்படி நாம் அறியாமையில்  எண்ணுவது தவறாகின்றன. இதுவே சாதாரணமான மனிதனின் இயல்பு.

அருகிலுள்ள மலரின் நிறத்தை தன் நிறமாக கொள்ளும் பளிங்குபோன்றவன் தான் மனிதன். எப்படி பளிங்கு சிவப்பு மலர் இல்லையோ அப்படியே நாமும் உடல்களும் , மனங்களும் இல்லை !

தியானப்பயிற்சி தொடர்ந்து செய்யும்போது , பளிங்கு தான் யாரென உணர்கிறது. தன் சொந்த நிறத்தை அடைகிறது . வேறு எதையும்விட தியானமே நம்மை உண்மைக்கு வெகு அருகில் அழைத்துச்செல்கிறது ....

ஆன்மா தன்னில் நிறைபெற முயற்சிப்பதையே நாம் தியானம் என்று கூறுகின்றோம் . ஆன்மா தன்னிலேயே மூழ்கி தன் மகிமையில் திளைக்கின்ற  நிலை, அதாவது அமைதியான ஒரு பரமானந்த நிலையாக இருக்கவேண்டும் ...இதை அடைய இறைவனை சரணடையவேண்டும் !

எல்லாத்துக்கும் மேலாக பரமாத்மா ஒருவர் உள்ளார். அவரே தனி புருஷன் . அவரே எல்லாம் வல்லவர்; அவர் எல்லாரோடைய இதயத்திலும் உள்ளார். அவருக்கென்று ஒரு தனி உடம்பு இல்லை, அது தேவையும் இல்லை .


மேலும் படிக்கவும்:-

விவேகானந்தர் இறப்பின் மர்மம் என்ன ?

அதிகாலை எழுவதால் கிடைக்கும் 4 நன்மைகள்


தியானத்தால் நீங்கள் அடையக்கூடிய அனைத்தையும் யோகிகளுக்கெல்லாம் யோகியாக உள்ள ஈசுவரனை தியானிப்பதால் அடையமுடியும் ... ஒரு மஹானைத் தியானிப்பதாலும் நீங்கள் அந்த நிலையை அடையமுடியும் ...

இறைவனை நம்புங்கள் ! அனைத்தையும் அடைவீர்கள் ! ... இது போன்று மகான்களின் கருத்துகள் உங்களுக்கு பயன் தரும் என்று நம்புகிறோம் .

இந்த கருத்துக்களை மற்ற சகோதர சகோதரிகளுக்கு அனுப்பி பயன்பெறுங்கள் ...

நன்றி .

-------------------------------------------------------------------------------------------------------------------------

Post a Comment

Previous Post Next Post