உடனே தவிர்க்கவேண்டிய சில கெட்ட எண்ணங்கள் 


வணக்கம் நண்பர்களே,

நம்முடைய மனதை கெடுக்கும் செயல்கள் எது என்று பார்த்தால் அது பொறாமை , வெறுப்பு , கோபம் , பயம் , காமம் , பண ஆசை , பிறரை ஏமாற்றுதல் , இந்த மாதுரி அசுத்தமான எண்ணங்கள்தான் மனதின் சீரான அமைதியான நிலையை கெடுத்து விருப்பு வெறுப்பு போன்றவற்றை நம் மனதில் உருவாக்கும். இது எல்லாமே இருக்கும் வரை ஒருவரால் நிம்மதியோடு சந்தோசமாக இருக்கவே முடியாது.
இன்னும் தெளிவாக பார்த்தால் நாம் மனதை கட்டுப்படுத்த என்னதான் முயற்சி செய்தாலும் அது கட்டுக்குள் வராது ஏனென்றால் ஏற்கனவே நமது மனம் கெட்ட செயல்களால் நிரம்பி இருக்கு.

அடுத்தவன் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தால் நாம் ஒன்றுமே செய்யாமல் சும்மா உட்காந்து அவன் வளர்ச்சியை பார்த்து பொறாமை படுவோம் அடுத்தவன் விஷயத்தை மனதுக்குள் நுழைக்கவேண்டிய அவசியம் என்ன ? அதையே நினைப்பதால் அவன் வளர்ச்சி குறையாது நம்முடைய நிம்மதி போய் நாம் தான் வாழ்வில் ஒரு நல்ல நிலையை அடையாமல் போவோம் , எனவே பிறரை பார்த்து பொறாமை படுவதை முதலில் நிறுத்தவேண்டும்.

அடுத்து இந்த அருமையான வாழ்க்கையை சரியாக பயன்படுத்தாமல் என்னடா வாழ்க்கை இது எனக்கு ஒண்ணுமே பண்ணல என்று இந்த அருமையான வாழ்க்கையை வெறுப்பது , இப்படி இருந்தால் எப்படி மன நிம்மதி வரும் , அனைவருக்குமே ஏதாவது தனி திறமை இருக்கும் அதை அறிந்து உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழ கற்றுக்கொள்ளுங்கள் அதுபோதும் அப்போது இந்த வாழ்க்கையின் மீது வெறுப்பு வராது

அடுத்து எதற்கு எடுத்தாலும் , ஒரு சின்ன விஷயமாக இருந்தாலும் கூட கோபப்பட்டு நம்முடைய நிம்மதியை நாமே இழப்பது , சற்று நேரம் மௌனமாக இருந்தால் அந்த பிரச்சனை சரி ஆகிரும் ஆனால் அதுவரை பொறுமை இல்லாமல் ஏதவாது வார்த்தையை சொல்லி கோபப்பட்டு பின் அதையே நினைத்து மன நிம்மதியை இழக்கவேண்டாம் , அதிக கோபம் மனதை பெரிதும் பாதிக்கும்.


அதேபோல , இந்த வாழ்க்கையை பார்த்து பயப்படுவது , எங்கே நாம் தோற்றுவிடுவோமா என்ற பயம் ,  அதிகமான காம எண்ணம் , தேவைக்கு அதிகமான பண ஆசைப்பட்டு ,  அதனால் தவறான பாதைக்கு செல்வது , குறுக்கு வழியில் முன்னேற பிறரை ஏமாற்றுவது இது எல்லாமே மனதை கெடுக்கும் செயல்கள் இதில் ஏதேனும் ஒன்று அதிகமாக இருந்தாலும் நிம்மதியாக இருக்கமுடியாது.


மேலும் படிக்கவும் :-

மனதை வலிமைப்படுத்த இரண்டு வழிமுறைகள்

அதிகப்படியான கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி

ஆழ்மனதின் அற்புதசக்தி பற்றி தெரியுமா ?


இது எல்லாமே வெறும் வார்த்தைகள் இல்லை நமது வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயம் எனவே சரியாக கேட்டு இது சரி செய்யவேண்டியது அவசியம். சும்மா ஒரு வீடியோ என்று பார்க்கவேண்டாம் நண்பர்களே சற்று நல்லா  சிந்திச்சு உடனே இதை சரி செய்யப்பாருங்கள் , இந்த கெட்ட  எண்ணங்கள் எல்லாமே நம்மை நிம்மதியாக இருக்கவிடாது , மன அழுத்தம் வந்து இந்த வாழ்க்கையே வேண்டாம் என்று சொல்லுமளவுக்கு மாற்றிவிடும்.

எனவே அதிக கவனம் எடுத்து இதை மாற்றிக்கொள்ளுங்கள்

நன்றி .

-----------------------------------------

Post a Comment

Previous Post Next Post