முயற்சியே லட்சியத்தின் ஆதாரம்  !!


வணக்கம் நண்பர்களே !

ஒரு நாள் ஒரு அழகிய சிட்டுக்குருவி கூட்டிற்குள் அமர்ந்திருந்தது ...
அதற்கு ஒரு ஆசை ... எப்படியாவது நாம் மரத்தின் உயரத்திற்கு சென்று அங்கிருந்து கீழே அனைத்தையும் பார்க்கவேண்டும் வேண்டும் என்று ஆசை .

அது தன் தாயிடம் , தன்னுடைய விருப்பத்தை சொல்லியது ; தாயோ உன்னுடைய விருப்பத்தை என்னால் நிறைவேற்றமுடியாது நீ தான் அதற்கான முயற்சியை செய்து நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என்று கூறியது ..அதனால் நீ சீக்கிரமாக பறக்க கற்றுக்கொள்ளவேண்டும் என்று கூறியது ...ஆனால் அந்த சிறிய குருவி , எப்படி நாம் பறக்க போகிறோம் நம்மால் முடியுமா என்று அதற்கு பல சந்தேகங்கள் வந்தது 


சில நாள் கழிந்தன அனைத்து குஞ்சுகளும் வளர்ந்துவிட்டது ... தாய் அனைத்திற்கும் பறக்க கற்றுக்கொடுத்தது ...அனைத்து  குஞ்சுகளும் நன்றாக ஓரளவிற்கு பறக்க கற்றுக்கொண்டது ... இறுதியாக இருக்கும் தன் ஆறாவது குஞ்சிடம் , நீ பறக்க தயாரா ? என்று கேட்டது அந்த தாய் பறவை 
அந்த குஞ்சோ,  தாயே அனைவரும் போல நானும் உயரத்திலிருந்து குதித்து பறக்க வேண்டுமா ! எனக்கு பயமாக உள்ளது என்று கூறியது .

நீ தானே இந்த ஆலமரத்தின் உயரத்திற்கு சென்று அமரவேண்டும் என்று ஆசைப்பட்டாய் ! அதற்காகவே நீ முயற்சி செய்யவேண்டும் ... அனைவராலும் முடியக்கூடியது உன்னால் முடியாதா என்று கூறியது , சரி என்று அது கீழே கண்களை மூடி குதித்தது ... உடனே வேகமாக இறக்கைகளை பட பட வென்று அசைத்தது ...ஆரம்பத்தில் பல முறை தடுமாறினாலும் அது விடாமல் ஆர்வமாக முயற்சி செய்தது ;பின் அது தன் சகோதரர்களை விட நன்றாக பறக்க கற்றுக்கொண்டது ! தன் ஆசையை தாய் சொல்லிய படி தானே நிறைவேற்றிக்கொண்டது !

இப்படி தான் நண்பர்களே ! நாமும் முயற்சி செய்யவேண்டும் ! ஒருவேளை உயரத்தின் பயத்தால் அது முயற்சிக்காமல் போனால் கடைசி வரைக்கும் அதனால் ஒன்றும் சாதிக்கமுடியாது !

பயமும் , தயக்கமும் நம் வாழ்வில் ஏற்படும் முன்னேற்றத்திற்கு தடையாக விளங்குகிறது ... இதை நாம் வென்று விட்டால் அனைத்தும் சாத்தியமே !

ஆன்மீகத்தில் கூட அனைவருக்கும் இந்த சிறிய சிட்டுக்குருவி போல பல சந்தேகங்கள் குழப்பங்கள் , பயம் மற்றவர் என்ன சொல்லுவார்களோ என்ற எண்ணமெல்லாம் தோன்றும் ... இதையும் தாண்டி இறைவனை பார்க்கின்ற வாய்ப்பினை நாம் உருவாக்கவேண்டும் ! இது நம்மால் முடியும் !
ஒன்று நீங்கள் கவனித்து பார்த்தால் புரியும் ... மற்ற குருவிகளுக்கு வராத எண்ணம் மற்றும் ஆசையும் அந்த கடைசி ஆறாவது குருவிக்கு வந்தது .. இது போல தான் நமக்கும் யாருக்கும் வராத ஆன்மீக ஈர்ப்பும் இறைவனை அடைய ஆசையும் நமக்குள் ஆன்ம ரீதியாகவே தூண்டிருக்கு . இது நமக்கு கிடைத்த வாய்ப்பாக நினைத்து கஷ்டப்பட்டாவது இலட்சியத்தை அடையவேண்டும் ! 

நன்றாக சிந்தித்து பாருங்கள் !... உங்களால் முடியும் என்று நம்புங்கள் ! ஆன்மீகத்தில் முன்னேறுங்கள் !

நன்றி ,
----------------------

Post a Comment

Previous Post Next Post