இளைஞர்களின் பிரச்சனையை தீர்க்கும் மருந்து


 வணக்கம் நண்பர்களே,


நிறைய நண்பர்கள் , என்னிடம் தினமும் WHATSAPP மற்றும் INSTAGRAM- ல காம எண்ணத்தை கட்டுப்படுத்தனும் , சுய இன்பம் அதிகம் செய்கிறேன் , மனம் எனக்கு சரியில்லை , வீட்டில் பிரச்சனை வாழ்க்கையில் வெற்றி பெற என்ன பண்ணனும் , காதல் தோல்வி அதை மறக்கணும் .இப்படி நிறைய நண்பர்கள் கேள்வி கேட்குறீங்க அதற்கான பதில் இந்த வீடியோவோட கடைசில இருக்கு இருந்தாலும்கேள்வி கேட்கும் நண்பர்கள்கிட்ட நான் ஒரு கேள்வி கேட்கணும் அதாவது முதலில் நீங்க தியானம் பண்ணுறீங்களா ? , சும்மா ஒரு நாள் , ஒரு வாரம் பண்ணினா மட்டுமே இந்த பிரச்சனைகளை தீர்க்க முடியாது கடும் பயிற்சி மற்றும் முயற்சி வேண்டும் அத மறக்காதீங்க , சின்ன சின்ன விசயம்கூட கஷ்டப்படாம கிடைக்காது அப்படி இருக்கும்போது நம்முடைய பழக்கவழக்கத்தை மாற்றும் விசயங்கள் சில நாள் செய்யும் முயற்சியால் மட்டும் மாறும் என்று நினைப்பது சரியா ? கொஞ்சம் யோசித்து பாருங்க.

எல்லாருமே நினைப்பது கஷ்டப்படாமல் உடனே எல்லாமே சரி ஆகணும்னு இது ஒருபோதும் நடக்காத விஷயம் , அதேபோல இதுல எத்தனை பேரு அதிகாலை 4 மணிக்கு எழுந்து குறைந்தபட்சம் ஒரு வாரமாவது தியானம் பண்ணுனீங்க சொல்லுங்க , அதுவும் நாம் சொல்லுவது தியானத்தால்  பிரச்சனைகள் சரி ஆக குறைந்த பட்சம் 6 மாதம் முதல் 1 வருடம் கூட ஆகலாம் ,அதேமாதிரி உங்க பிரச்சனை தீர்ந்தவுடன் தியானம் செய்வதை விட்டுவிட கூடாது நண்பா !!

தியானம் நம்முடைய வாழ்க்கையில் கலந்த ஒன்று நம்முடைய வாழ்வின் கடைசி காலம் வரை தியானம் செய்யவேண்டும் , நாம் தினமும் சாப்பிடுவது
போல தியானமும் செய்து வரவேண்டும் , ஏனென்றால் ஒரு பிரச்சனை போனால் அடுத்து இன்னொரு பிரச்சனை உடனே வரும் இதெல்லாம் சமாளிக்க தினசரி அல்லது வாரத்தில் 3 நாளாவது தியானம் செய்யுங்க நண்பா !!

ஏற்கனேவே நிறைய வீடீயோஸ் upload பன்னிருக்கோம் , அதிலும் ஒரு வீடியோவில் 1000 பிரச்சனைகளை தீர்க்கும் அற்புத மருந்து அது தியானம் மட்டுமே என்றும் சொல்லிருக்கோம் இது வெறும் வார்த்தை இல்லை , அது முற்றிலும் உண்மை தான் , உறுதியாக இறைவன் கொடுத்த இலவசமான மிகவும் அற்புதமான மருந்து அது தியானம் மட்டுமே இதை யாராலும் இல்லை என்று மறுக்கமுடியாது, அதேபோல  அது அவ்வளவு எளிதும் இல்லை , முதலில் ஒரு வாரம் அதிகாலை எழும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள் பின் உங்கள் மேல் ஒரு நம்பிக்கை வரும் அப்போது தியானம் செய்ய START பண்ணுங்க.

உடனே தியானம் கைகூடாது கஷ்டமாகத்தான் இருக்கும் மற்றும் தியானம் செய்யும்போது பல தடைகள் வரும் , இதெல்லாம் பார்த்தால் பின் வாழ்க்கை முழுவதும் துன்பத்தை அனுபவிக்கனும் , சிலபேர் ஒருசில நாட்கள் தியானம் செய்தவுடன் எனக்கு மனம் கட்டுப்பாட்டுக்குள் வரல என்று சொல்லுறாங்க இந்த மாதிரி இல்லாமல் தியானத்திற்கு நேரம் ஒதுக்கி தினசரி பண்ணிட்டு  வாங்க , எடுத்தவுடன் 1 மணிநேரம் செய்யவேண்டும் என்று அவசியமில்லை 10 நிமிடமாவது செய்யுங்கள். அதற்கே அற்புத பலன்கள் இருக்கு .

இப்பவும் சொல்கிறேன் தயவுசெய்து தியானம் செய்யுங்கள் , உங்களுடைய அனைத்து பிரச்சனைகளும் உறுதியாக தீரும் , இளைஞர்களுக்கு உண்டாகும் பிரச்சனைகளை தியானத்தால் மட்டுமே சரிசெய்ய முடியும் , இதை நீங்க நம்பித்தான் ஆகவேண்டும். அதேபோல உங்க வீட்டில் உள்ளவர்கள் , உங்கள் நண்பர்கள் துன்பப்பட்டா அவர்களை தியானம் செய்யச்சொல்லுங்கள் .

ஒரு மாதம் மட்டும் செய்து நிறுத்தாமல் , முடிந்தவரை நமது வாழ்க்கை முழுவதும் செய்து வர முயற்சி செய்யுங்கள் நண்பா.

ஏற்கனவே தியானம் செய்வது எப்படின்னு நிறைய வீடீயோஸ் upload பன்னிருக்கோம் இருந்தாலும் இப்பவும் சொல்லுறோம் அதை கேட்டு சரியாக தியானம் செய்துட்டு வாங்க

** முதலில் அதிகாலை எழும் பழக்கத்தை உண்டாக்குங்கள் , ஏனென்றால் அந்த நேரம் மட்டுமே தியானத்திற்கு மிகவும் அருமையான நேரம் அப்போது மனம் சாதாரணமாகவே அமைதியாக இருக்கும் .

** பின் குறுக்கை வளைக்காமல் ஏதாவது ஒரு ஆசனம் போட்டு உங்கள் மனதை சிறிது நேரம் கவனியுங்கள் பின் மனதில் ஓடும் எண்ணங்களை ஒவ்வொன்றாக நிறுத்துங்கள் உறுதியாக அந்த அமைதியான நேரத்தில் இது சாத்தியமே.

**பின் இரு புருவங்களுக்கு மத்தியில் ஒரு சிறிய புள்ளி இருப்பது போல நினைத்து அந்த புள்ளியில் மட்டுமே கவனம் செலுத்துங்கள் அல்லது உங்கள் வீட்டில் அந்த மாதிரி போட்டோஸ் இருந்தால் அந்த புள்ளியை பாருங்கள் அப்போது மனம் வேற எங்கேயும் இருக்கக்கூடாது.

** அடுத்து உங்கள் மூச்சை சரியாக கவனியுங்கள் இதுவும் அருமையான தியான பயிற்சிதான். மனம் சிதறினாலும் பரவாயில்லை மனம் தளராமல் மீண்டும் மூச்சை கவனியுங்கள் முதல் வாரம் 10 நிமிடம் என்றால் அடுத்தவாரம் 30 நிமிடம் பயிற்சி பண்ணுங்கள்.

** அடுத்து விளக்கு தியானம் , விளக்கு ஏற்றி ஜோதியை மட்டும் பாருங்கள் உங்களால் எவ்வளவு நேரம் செய்யமுடிகிறதோ அவ்வளவு நேரம் செய்யலாம் , உங்களுக்கும் விளக்கிற்கும் ஒரு 4 அடி இடைவெளி தேவை

** அடுத்து ஓம் தியானம் மௌனமாக ஓம் மந்திரம் ஜெபித்துக்கொண்டே தியானம் செய்யுங்கள் சரியாக தினமும் 108 முறை சொல்லிட்டு வாருங்கள் மனம் ஓம்மில் மட்டுமே இருக்கவேண்டும் இது அவசியம்

** இது எல்லாத்துக்கும் சரியான நேரம் அதிகாலை 4 முதல் 6 மணிவரை மற்றும்  மாலை 5 முதல் 7 மணி வரை மட்டுமே இருந்தாலும் அதிகாலை நேரம் மிகவும் சிறப்பானது.

நன்றாக குளிச்சிட்டு , இறைவனிடம்  PRAY பன்னிட்டு தியானத்தில் அமருங்கள் குறுக்கை வளைக்காமல் , தலையும் உடலும் சரியாக ஆடாமல் இருக்கவேண்டும்.


மேலும் படிக்கவும்:-

சுவாமி விவேகானந்தரின் தியான ரகசியம் 

விளக்கு தியானத்தால் ஏற்படும் நன்மைகள் 

தியானத்தில் வரும் தடைகளை நீக்குவது எப்படி 

இதை கடைபிடித்து தினமும் தியானம் செய்யுங்கள் , உங்களின் மனம் சம்பந்தமான பிரச்சனைகள் , அதிக காம உணர்வு , நிம்மதியற்ற நிலை , இது எல்லாமே உறுதியாக சரி ஆகும்.

உங்கள் நண்பனுக்கு ஏதேனும் பிரச்சனை இருந்தால் நண்பா தியானம் செய்யுடா எல்லாம் சரி ஆகும்னு சொல்லுங்க

இளைஞர்களுக்கு இந்த வயதில் வரும் பிரச்சனைகளை தீர்க்க இது மட்டுமே சிறந்த வழிமுறை , பிரச்சனை தீரவேண்டும் என்று விரும்பும் நண்பர்கள் கஷ்டப்பட்டே ஆகவேண்டும்.

உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை இருந்தால் instagram ல கேட்கலாம்

நன்றி  .
----------------------------------------------------------------------------


Post a Comment

Previous Post Next Post