மோசமான நிகழ்வுகளை கடந்து  செல்வது எப்படி

வணக்கம் நண்பர்களே !

ஒவ்வொருவரின் வாழ்விலும் , ஒவ்வொரு நாளும் பல துன்பங்கள்  துயரங்கள் வருகிறது ... அதுவும் அது நாம் பெரும் இன்பத்தை விட மிகவும் மனதில் இடம் பிடிக்கிறது ...இதிலிருந்து நாம் எப்படி விடுபடுவது  என்பதை பார்க்கலாம் ...

ஒரு நாள் குரு ஒருவர் தன் சீடர்களுக்கு முன் சென்று பூமியின் சிறு மண்ணை கையில் எடுத்து  கொண்டு கேட்கிறார்  ...  "பூமியின் துண்டு பெரியதா அல்லது அருகில் இருக்கும் மலை பெரியதா"? என்று கேட்டார் ..சீடர்கள் அனைவரும் " இதை ஒப்பீட்டு பார்த்தால் மலை குன்று தான் பெரியது"! என்று கூறினர் ... 

குருவும் "ஆம் நீங்கள் சொல்வது சரியே ... இது போன்று தான் நாம் அனைவரும் தர்மத்தை கற்று வாழ்வில் அனுபவிக்கும் துன்பத்தை விட அறியாமையில் இருக்கும் மக்கள் மிகவும் அதிக துன்பத்தை சந்திக்கின்றனர்..

ஒருவன் மீது அம்பு எய்தினால் அவனுக்கு வலி ஏற்படுகிறது அதே காயத்தில் மறுபடியும் அம்பு எய்தால் வலி இரு மடங்கு அதிகரிக்கிறது இன்னொரு அம்பும் எய்தினால் வலி மிகவும் மூன்று மடங்கு அதிகரித்து தாங்கமுடியாத வேதனை தருகிறது ... இது போன்று தான் நாம் முன்பு அனுபவித்த துன்பத்தை மீண்டும் மீண்டும் நினைத்து பார்த்து இந்த தாங்க முடியாத வேதனையை அனுபவிக்கிறோம் !

ஆனால் ஒரு அறிவாளி , தன் துன்பத்தை பற்றி கவலை கொள்ளமாட்டான்!
ஏனென்றால் , இந்த உணர்வுகள் மற்றும் உடல் வலி எல்லாம் நாம் இல்லை... இதுவும் கடந்து போகும்,, என்று அவனுக்கு தெரியும் .. ஆகவே அவன் முன்பு அனுபவித்த துன்பத்தை எண்ணிப்பார்க்காமல் அமைதியாக இருப்பான் .

இன்று அவன் அனுபவிக்கிற துன்பமும் அவன் வேடிக்கையாக பார்ப்பான், தன் உணர்வுகள் எப்படி செயல்படுகிறது என்று பார்ப்பான் தவிர அது அவனுக்குள் ஏற்றுக்கொள்ளமாட்டான்" ! என்று குரு கூறி முடித்தார் .

இது போன்று தான் நண்பர்களே ! நாமும் நம் வாழ்வில் இருக்கவேண்டும் .

ஒரு பாறை எப்படி சூழ்ந்திருக்கும் கடல் அலைகளை தாங்குகிறதோ மற்றும் சிறிது நேரத்தில் அலைகள் ஓய்ந்துவிடும்... ஆனால் பாறை அங்கேயே நிமிர்ந்து நிற்கிறது...

அது போன்று தான் நாம் ஒரு பாறை போன்று வலிமையோடு இருக்கவேண்டும் நாம் சந்திக்கின்ற துன்பம்அனைத்துமே  கடக்கின்ற மேகக்கூடங்கள் தான் !
அனுபவிக்கிர  வலிகள் கூட நீடிக்காது .. அனைத்துமே மாயை தான் இதை கண்டுகொள்ளாமல் நாம் நம் வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துசெல்வது  நல்லது .


மேலும் படிக்கவும்:-


சோம்பலை விரட்ட புத்தரின் அருமையான கதை

சுவாமி விவேகானந்தரின் ஆன்மீக சொற்பொழிவு

இருப்பதை வைத்து சிறப்போடு வாழ ~ அருமையான ஒரு குட்டி கதை


ஏனென்றால் வலிகளும் துன்பங்களும் நீங்கள் இல்லை,  நீங்கள்  மனமும் இல்லை , நீ ஒரு இறைவனின் அம்சம்( ஆன்மா ) ,  அதை யாராலும் ஒன்றும் செய்யமுடியாது...

நீங்கள் உங்கள் துன்பத்தை கண்டுகொள்ளாமல் இருந்தால் அது உங்களை தாக்காது ஒருவேளை கண்டுகொண்டால் உங்களை முழுவதும் ஆக்கிரமித்து ஆட்டிப்படைக்கும் இதை நினைவில் வையுங்கள் !

ஆம் நீங்கள் ஒவ்வொருவரும் ஆன்மா ...உங்களுக்கு உணர்வும் இல்லை வலிகளும் இல்லை ...ஒரு பாறை போன்று எழுந்து நிமிர்ந்து நில்லுங்கள் உங்களை யாராலும் ஒன்றும் செய்யமுடியாது ...  நேற்று சந்தித்த துன்பங்கள் இன்று இல்லை ஏனென்றால் எல்லாம் கடந்து போகும் கவலைப்படாதே

அனைவருக்கும் வாழ்வில் இறைவனின் ஆசிர்வாதம் இருக்கட்டும் ...


நன்றி.

-----------------------------------------

Post a Comment

Previous Post Next Post