தியானம் என் வாழ்வை எவ்வாறு மாற்றியது ?


வணக்கம் நண்பர்களே, 

தியானம் ஒருவரின் வாழ்வை எவ்வாறு மாற்றும் , நாம் நிறைய பதிவில் தியானம் செய்தால் உங்கள் வாழ்க்கை அமைதியாக மற்றும் நிம்மதி கிடைக்கும் ஏன் உங்களின் வாழ்க்கையை மாற்றும் என்றும்  பல வீடியோவில் சொல்லிருக்கோம் இது உண்மையா அப்படி உண்மையா இருந்தா அது எப்படி என்று பார்ப்போம் வாங்க
இங்கே என் வாழ்வில் நடந்த ஒரு அனுபவத்தை நான் ஷேர் பண்ணுறேன் அதாவது தியானம் என் வாழ்வை எவ்வாறு மாற்றியது என்றும் பார்க்கலாம்
ஒரு 4 வருடங்களுக்கு முன்பு நான் சென்னையில் வேலை செய்துகொண்டிருந்தேன் அது ஒரு MNC கம்பெனி எனவே எல்லாருக்கும் இருப்பது போல எனக்கும் அந்த கம்பெனியில் நல்லா சம்பாதிக்கணும் நல்ல நிலைக்கு வரணும் இப்படி மிகப்பெரிய கனவு இருந்தது , என்னால் முடிந்தவரை நான் HARDWORK செய்தேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு இருந்தாலும் என்னால் அங்கே எதும் பெரிதாக சாதிக்க முடியவில்லை என்ற ஒரு எண்ணம் எப்போதும் இருக்கும்


ஆனால் அப்போதும் எனக்கு தியானம் செய்யும் பழக்கம் இருந்தது , நான் தியானம் செய்யும்போதெல்லாம் எனக்குள் ஒரு உத்வேகம் வரும் அதாவது எப்படியாவது நாம் சாதித்து காட்டவேண்டும் என்று, ஏனென்றால் தியானம் செய்யும் பழக்கம் உள்ளவருக்கு எதையும் சாதித்து காட்டமுடியும் என்ற எண்ணம் அதிகமே இருக்கும்  இருந்தாலும் வேலை செய்யும் இடத்தில்  மீண்டும் அதேநிலை தான் ஏற்பட்டது , அதாவது ஒரு முன்னேற்றமும் இல்லாத நிலைதான் அது

அதேபோல  எனக்குள் அப்ப அப்ப இங்க இருக்காத உனக்கான இடம் இது இல்லை போ மீண்டும் உன் ஊருக்கு போ என்று உள்ளுக்குள் யாரோ சொல்வது போல எப்போதுமே இருக்கும் , இந்த மாதுரி பல முறை எனக்குள் வந்திருக்கு, அதனால் ஒரு கட்டத்தில் துணிந்து நான் முடிவு செய்து அந்த வேலையை விட்டு மீண்டும் ஊருக்கு வந்துட்டேன். அடுத்து எந்த வேலை என்று நான் முடிவு செய்யவே இல்லை இருந்தாலும் நம்பிக்கை அதிகம்

அப்போது எனக்குள் தோன்றிய எண்ணம் நீ தியானம் செய்யும் பழக்கம் உள்ளவன் உன்னால் இது இல்லை என்றால் என்ன எதிலாவது நிச்சயம் சாதிக்க முடியும் என்று ,அந்த நம்பிக்கையில் நான் வேலையை விட்டு வந்து தொடர்ந்து ஒரு மாதத்திற்கும் மேலாக அதிகாலை 4 மணிக்கு எழுந்து தியானம் செய்தேன் அப்போது தான் எனக்கு என் சரியான வாழ்க்கை பாதை புரிந்தது அதுதான் ஆன்மீகம்

ஆம் எனக்கு அந்த MNC வாழ்க்கை  சரியான பாதை இல்லை , ஆன்மீகமே என்பதை தியானம் புரிய வைத்தது அதன்படி நான் செயல்பட தொடங்கினேன் இப்போது எனது கடமையை நான் சிறப்பாக செய்கிறேன் என்று 100% நம்புகிறேன் மற்றும் பல மாற்றங்கள் தியானம் செய்ததால் ஏற்பட்டது

இது எல்லாமே உண்மை நண்பர்களே

தியானம் குழப்பான நிலையில் இருக்கும்போது நமக்கான சரியான பாதையை தெளிவாக காட்டும் , நமக்கு பிடிக்காத வேலையை செய்தால் அதிலிருந்து விலக செய்து இதுதான் உனக்கானது என்று தெளிய வைக்கும்

தியானத்தால் உங்கள் வாழ்க்கை மாறும் என்றவுடன் நிறைய பணம் புகழ் இப்படித்தான் மாறும் என்ற எண்ணம் வேண்டாம் , அதுவும் உறுதியாக நடக்கும் இருந்தாலும் , இவருக்கு இதுதான் சரி , இந்த திசையில் போனால் பிரச்சனை அதிகம் இருக்கும் என்றால் அதை நமக்கு உணர்த்தி சரியான திசையில் செல்லவைக்கும் , அதில் பணம் , புகழ் , ஆன்மீகம் இப்படி எதுவேண்டுமானாலும் இருக்கலாம் , ஆனால் சரியான ஒன்றாக மட்டும்தான் இருக்கும்.

தியானம் செய்யும்போது மனம் ஒன்றை மட்டுமே நினைக்க தொடங்கும் அதனால் குழப்பான சூழ்நிலை வரும்போது சரியான முடிவு எடுப்போம் , நம்பிக்கை அதிகரிக்கும் , எதையும் பார்ப்போம் என்று தைரியம் ஏற்படும் . சரியான நண்பர்கள் அமைவார்கள் அதாவது உங்களை போன்றே மனம் படைத்த நண்பர்கள் அமைவது உறுதி இதனால் தேவை இல்லாத நட்பால் பிரச்சனை ஏற்படாது. இந்த மாதுரி  நிறைய விசயங்கள் நமக்கு ஏற்றது போல நடக்க தொடங்கும் .


மேலும் படிக்கவும்:-

 அதிகாலை எழுவதால் கிடைக்கும் 4 நன்மைகள்

மனதை வலிமைப்படுத்த இரண்டு வழிமுறைகள் 

மனம் என்றால் என்ன ? 


 

இது எல்லாத்தையும் விட இறைவனை பற்றிய புரிதல் அதிகம் ஏற்படும் .

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் , இதனால் தான் தியானம் உங்கள் வாழ்வை மாற்றும் என்று சொல்வதன் அர்த்தம்.

உங்களுக்கும் தியானம் செய்ததால் வாழ்வில் மாற்றம் வந்திருக்கும் அதை உங்களுக்கு விருப்பம் இருந்தால் கமெண்ட் ல சொல்லுங்க அனைவர்க்கும் அதை பற்றிய புரிதலை ஏற்படுத்தும்

தியானம் பற்றிய சந்தேகம் இருந்தால் தாராளமாக கேளுங்கள்.

தியானம் செய்யுங்கள் உங்கள் வாழ்க்கை மாறும்

நன்றி .

-----------------------------------------------------------------------------

Post a Comment

Previous Post Next Post