உன்னை நீ நம்பு ! நிச்சயமாக நீ சாதிப்பாய் !...


வணக்கம் நண்பர்களே !நம் வாழ்வில் நாம் எத்தனையோ நபர்கள் பல ஆசைகள் மற்றும் கனவுகள் கொண்டிருப்போம் அதே சமயத்தில் ... அதை நாம் துணிந்து  தொடங்கும்போதே நாம் நினைப்பதுண்டு , நம்மால் முடியுமா ? இந்த கனவு எனக்கு தகுதியானதா ? என்று ...இந்த சமயத்தில் .... ஒன்றை தெரிந்துகொள்ளுங்கள் .... நம் குடும்பத்தார்கள் தான் முதலில் இதற்கு முற்றுக்கட்டையாக இருப்பார்கள் ....ஆம் ! ஆறுதல் என்ற பெயரில் ...அவர்களின் வார்த்தைகளில் ஒரு சுய ஊக்கத்திற்கான வழி இருக்காது ... வெறும் அவர்கள் கூறும் வார்த்தை ... விலகி விடு !... அப்படி சாதித்து என்ன  செய்யப்போகிறாய்...விட்டுவிடு பரவாயில்லை ....என்று மட்டுமே இருக்கும் !...

அதற்காக நான் உங்கள் குடும்பத்தினரை எதிர்க்க சொல்லவில்லை ... 

அவர்களுக்கு அவர்களின் பிள்ளைகள் பிரச்சனை இல்லாமல் வாழவேண்டும் என்றே எண்ணுவார்கள் ..

நீ உன் குடும்பத்தாரிடம் ஆலோசனை மற்றும் உன்னுடைய  கஷ்டத்தை கூறுவதை விட ... சுயமாக நீயே முன்னேற பழகவேண்டும் .

ஆம் ! கஷ்டமாக தான்  இருக்கும் ... நம் வேதனை வெளியில் கூறமுடியவில்லையே என்று .... அதை கூறினால் மட்டும் மற்றவர்களால் உனக்கு சரியான எதிர்காலம்  கிடைக்குமா ?...

நீ அவ்வாறு உன்னோடைய இலட்சியத்தை பற்றி மற்றவரிடம் கூறினால் ஏன் உன் சொந்த தாய் தந்தையிடம் கூறினால் ... என்ன நடக்கும் தெரியுமா ?... முதலில் , உன்னை உன் லட்சியத்தின் மீதுள்ள நம்பிக்கையை உடைப்பார்கள் ... பின் உன்னையும் உன் லட்சியத்தையும் பிரிக்கபார்ப்பார்கள்  

மற்றும்  சில நபர்கள் ,உன்னை பார்த்து.......
 " இவன் எப்படியெல்லாம் கனவுக்கோட்டை கட்டியிருந்தான்!.. ஆனால் இப்போது அவனால் அடையமுடிந்ததா ? இல்லை ! இதற்க்கு தான் கனவு லோகத்தில் வாழக்கூடாது என்பார்கள் !"   உனக்கு உன் மீதுள்ள நம்பிக்கையை உடைப்பார்களே  தவிர அவர்களால் எந்த பிரயோஜனமும் உனக்கு கிடைக்காது அது உன்னை பெற்றவராக இருந்தாலும் சரி !... இதுவே உண்மை !...

ஒன்றை தெரிந்துகொள் !.... கனவு இல்லாதவர்கள் அதாவது கனவை காணமுடியாதவர்களால் ... உன்னை பற்றியும் லட்சியத்தின் மகத்துவம் ( (மதிப்பை )பற்றியும் புரிந்து கொள்ள முடியாது .. 

அவர்களுக்கு தெரிந்தது ஒன்று தான் ..... உன்னை போன்று இருக்கும் லட்சியவாதிகளை ... அவமதிப்பது , கேலியும் , கிண்டலும் செய்வது , உன்னை வீழ்த்துவது ... இது மட்டுமே அவர்களுக்கு தெரிந்த ஒன்று ...

அதனால் தான் உன்னை பற்றியும் உன் இலட்சியத்தை பற்றியும் யாரிடமும் கூறாதே ! என்று உரைப்பதற்கான காரணம் ..

நீ சற்று தளர்ந்துவிட்டால் போதும் ... பிறகு அவர்களால் இன்னும் உனக்கு உன்மீது உள்ள நம்பிக்கை குறைந்து விடும் ... சற்று அவர்களுக்கு நீ இடம் கொடுத்து விட்டால்  பிறகு மனிதவெடி குண்டு போல உன்னை நீயே சிதைப்பதற்கு சமம் !..

விடாதே ! யாரையும் உன் வழியில் விடாதே ! உன்னை பற்றி கேலி செய்வதற்கு , உன்னை பற்றி அவநம்பிக்கையாக  பேசுவதற்கும் நீ விடாதே ! 

யாரிடமும் நீ உன் இலட்சியத்தை பற்றி கூறாதே !... நீ என்ன செய்கிறாய் என்று தெரியாமல் தவித்து சாகட்டும் !  அதுபற்றி கவலைகொள்ளாதே !

மௌனமாய் இருந்து நீ சாதித்து காட்டு .... அதுவே நீ அவர்களுக்கு தரும் சவுக்கடி ஆகும் !  

தொடர்ந்து போராடு ! ஒரு விசயத்தை முடிக்கும் வரை அடுத்த விசயத்திற்கு போகாதே !... ஒன்றை பிடித்தால் விடாமல் இருந்து முடித்துக்காட்டு  !...தொடர்ந்து முயற்சி செய் !

அதேபோல முழு நம்பிக்கையை யாராவது தருவார்களா ? நமக்கு யாராவது  ஆறுதல் சொல்லுவார்களா என்று ஏங்காதே அதுவே உன் லட்சியத்திற்கு உன்னை அடையவிடாமல் செய்துவிடும் ...

நீ இருக்கும்வரையில் நீ யாரை  எதிர்பார்கிறாய்?.. ..... அப்படியென்றால் உன் மீது உனக்கு நம்பிக்கை இல்லையா ? என்ன ? ... உன்னால் முடியும்!...  தொடர்ந்து சொல்


தைரியமாக இரு !... என்ன பின்னடைவு வந்தாலும்,  யார் உன்னை பேசினாலும் கண்டுகொள்ளாமல் இரு .... அவர்களை உன் மனதிலிருந்து தூக்கியெறிந்துவிட்டு தொடர்ந்து உன் இலட்சியத்தை நோக்கி செல் ...


இந்த தைரியம் உன்னை அனைத்திலிருந்தும் உன்னை மீண்டு வரவைக்கும் !! அப்போது சொல்லுங்கள் !... நான் யாரையும் சார்ந்து இல்லை ... எனக்கு யாருடைய தயவும் தேவை இல்லை என்று !....

 ஒருவேளை உனக்கு சிலர் ஊக்கம் அளித்தால் அது சரிதான் !...ஆனாலும், உன்னை நீயே முன்னேற்ற பழகுவது சிறந்தது !...

தன்முன்னேற்றத்திற்கு சிறந்த உதாரணம் .... இயற்கை தான் அதை கவனித்தால் உங்களுக்கு புரியும் .... அதில் இருக்கும் உயிர்கள் எப்படி எல்லாம் ஒவ்வொரு சவாலையும் சமாளிக்கிறது என்று ....

 அப்படி இருக்கும்போது ....அதே இயற்கை உனக்குள்ளும் இருக்கிறது ....அப்படி என்றால் உன்னாலும் முடியும் .... உனக்கிருக்கும் மனதை வைத்து எப்படி எல்லாம் சவால்களை சமாளிக்க முடியும் என்று யோசி !... சவால்களை சந்திக்க பழகிக்கொள்!... எதையும் தைரியமாக சந்திக்க பழகு !..
தீமை எப்போதுமே துன்பத்தையும் , துயரத்தையும் தரும் ... அதற்கு உன்னை பற்றி எந்த கவலையும் இருக்காது அது எப்படி வேணாலும் உன்னை சோதித்துகொன்டே இருக்கும் ! .... அதை பற்றியெல்லாம் நீ கண்டுகொள்ளாதே .... 

நீ எப்போது சவால்களை சமாளிக்க கற்றுக்கொள்கிறாயோ அப்போது உனக்கு எந்த கவலையும் இருக்காது ... அதனால் கற்றுக்கொள் ... தனியே இருக்க பழகு ....உன் மனதை எப்படி கட்டுப்படுத்தவேண்டும் என்று நீ முடிவெடு ..யாரையும் உன் மீது ஆதிக்கம் செலுத்த விடாதே ... உன்வாழ்க்கையை உன் குடும்பத்தாரிடமும் ..மற்றவரிடம் கொடுக்காதே ... உன்வாழ்கை நீ தான் முடிவெடுக்க வேண்டும் !!

இவற்றில் நீ கைதேர்ந்து விடு ! பிறகு தைரியமாக கூறு.....  

"என்னால்அனைத்து  சவால்களையும் அனைத்து பிரச்சனைகளையும் சமாளிக்க தெரியும் .... என்னால் எனது இலட்சியத்தை எப்படி அடையவேண்டும் என்று எனக்கு தெரியும்...... என்று ..

 பிறகு அவர்களிடத்தில் நீ தைரியமாக சொல் ! .... என்னால் என் மனதையும் என் லட்சியத்தையும் எப்படி  கட்டுப்படுத்த முடியும் என்று எனக்கு தெரியும் !

இது உங்கள் வாழ்க்கை முதலில் உங்களை நம்புங்கள் நிச்சயமாக சாதித்துக்காட்டமுடியும் நன்றி . 

Post a Comment

Previous Post Next Post