சுய ஒழுக்கமே வெற்றியாளரின் சிறப்பு 


வணக்கம் நண்பர்களே !


ஒரு நல்ல பழக்கம் என்பது அனைவரிடத்திலும் பார்க்கமுடியாது ... அது ஒரு  சிலருக்கு மட்டும் மிக அபூர்வமாக இருக்கும் ... இதற்கான காரணம்  என்ன என்று கேட்டால் ... ஒரு தீர்க்கமான வைராக்கியம் , லட்சியம் மற்றும் ஒழுங்கு போன்ற விசயத்தில் அவர்கள் மிக ஆழமாக அதில் தங்களை ஈடுபடுத்திக்கொள்வார்கள் . ஆனால் இது போன்ற பழக்கம் சுகம், லாபம் ,எதிர்பார்ப்பு , பேராசை மற்றும் சுயநல எண்ணங்களுக்கு இருக்காது !

வெற்றியாளர்களின் ரகசியமே ஒழுங்கு ,அடக்கம் ,நல்லபழக்கம், கட்டுப்பாடு ஆகியவை தான் ... அவர்களிடத்தில் நாம் ஒன்று முக்கியமான ஒன்றை கற்றுக்கொள்ளவேண்டும் ... அதுதான் சுயஒழுக்கம் ஆகும் !

இது நமது பள்ளிக்கூடங்களால் கூட சொல்லித்தரமுடியாத விசயம் ஆகும் !
அது வெறும் , மற்றவரிடத்தில் வேலைசெய்ய கற்றுக்கொடுமே தவிர தன்னுடைய சுயமேம்பாடு பற்றி எல்லாம் சொல்லித்தராது !

வெறும் புத்தகத்தை சுமபத்தோடு நம் வேலை முடிந்தது என்று இல்லாமல் வெற்றியாளர்கள் தன்னுடைய  ஆர்வத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள் ...சுய ஒழுக்கத்தை வளர்த்துக்கொள்ள பழகுவர் .

ஆனால் இதுபோன்றவற்றை நமது பள்ளிக்கூடத்தில் காணமுடியாது ... நாம் கற்ற பாடம் எல்லாம் பள்ளியிலிருந்து வந்தாலும் .... நமது ஆர்வம் எல்லாம் நமது சூழலால், விருப்பத்தால் மற்றும் செயலால் வருபவை ஆகும் ....இந்த ஆர்வத்தை எப்படி வளர்த்து சாதிக்கவேண்டும் என்று வெற்றியாளர்களிடம் கற்றுக்கொள்ளுங்கள் .


வெறும் வாழ்க்கையில் நிறைய பொருள், பணம் சம்பாதிப்பு மட்டுமே இல்லை .... அது ஒன்றும் பெரிய சாதனை கிடையாது ... சாதனை சுயஒழுக்கத்திலிருந்து வருகிறது. அதில் ஒரு 11 பழக்கங்கள் இருக்கிறது அவை 

1. அதிகாலை எழும் பழக்கம் , நல்ல உடற்பயிற்சி செய்து நம் உடலை ஒரு  ஒழுங்கான சீரான அளவுடன் பராமரித்து  எடை காப்பது , 

2. நல்ல ஆரோக்கியமான உணவு உட்கொள்வது.

3. மன அமைதிக்கு மற்றும் திறமையான செயலுக்கு நல்ல தியானம் 
மற்றும் மூச்சுப்பயிற்சி செய்வது , 

4. சுத்தமாக இருந்து ஆடைகளை ஒழுங்காக உடல்முழுவதும்  கவரும்படி அணிவது ... 

5. செய்யும் செயலில் சுத்தமாக இருப்பது , உன்னை சுற்றி சுத்தமாக வைப்பது.

6. ஒரு வேலையை முழுமையாக செய்துமுடிக்கும் பழக்கம் கொள்வது .

7. மற்றவரிடத்தில் வீண் பேச்சுகளால் நேரத்தை வீணாக்காமல் இருப்பது மற்றும் மற்ற அனாவசிய செயலில் ஈடுபடாமல் மௌனமாக இருப்பது .

8. தன்னடக்கம் காப்பது .

9. கண்ணியம் மற்றும் கட்டுப்பாடுடன் இருப்பது ... பெரியவர்கள் முன் அடக்கமாக பணிவுடன் நடந்துகொள்வது , மற்றும் பொறுமையாக இருப்பது .

10. கால அட்டவணை போட்டு அதற்கேற்றாற்போல் உங்கள் வேலையில் ஈடுபடுவது . சுய தேவை மற்றும் தன்னுடைய  வேலையை தானே செய்வது 

11. யாருடைய தயவு இல்லாமல் ஒரு சுய தொழிலில் ஈடுபடுவது .

இது போன்ற பழக்கம் ஒருவனுக்கு சிறந்த எதிர்காலத்தை அமைக்கிறது ...

எல்லாருக்கும் ஒரு எண்ணம் இருக்கும் , அது முதலில் சுகத்தை அனுபவிக்கவேண்டும் பிறகு துன்பத்தை அனுபவிக்கலாம் என்று ...ஆனால் அதுவே மிக பெரிய தவறாக முடியும் ...அதாவது அது உங்களை காலம் முழுவதும் உங்களை துன்பத்தில் மூழ்கச்செய்துவிடும் 

ஆனால் வெற்றியாளர்கள் முதலில் தங்களை சுயஒழுக்கத்தில் மற்றும் லட்சியத்திற்கு முதலில் முக்கியத்துவம் கொடுப்பார்கள்  . இதுபோன்ற சுயஒழுக்கமும் வைராக்கியமும் முதலில் கஷ்டத்தையும் ...வளர்ச்சியும் தரும் பிறகு எதிர்காலத்தில், முழு சுகத்தையும் வாரிக்கொடுக்கும் !

முதலில் சுகம் பிறகு துன்பமா ? அல்லது முதலில் சுயஒழுக்கம் பிறகு நல்ல எதிர்காலமா ? என்று நீங்கள் தான் முடிவெடுக்க வேண்டும் !

முதலில் சுயஒழுக்கம் பழகுவது, பிறகு நமக்கு பிடித்த நல்ல லட்சியத்தில் தொடர்ந்து செயலாற்றுவது என்பது கடினம் தான்...முதலில் எல்லாம் கடினமாகத்தான் இருக்கும் ...எதுவும் சீக்கிரம் பழகமுடியாது பல தடைகள் ,மற்றும் தோல்விகள் வரும் ...ஆனால் ஒரு தீர்க்கமான வைராக்கியத்தில் செயல்படவேண்டும் .

இதுபோன்ற நல்ல சுயபழக்கம் மற்றும் சுயமுனேற்றத்திற்காக பாடுபடுவது எல்லாம் ஒரு சிறிய காலத்திற்கு மட்டுமே தான் ! பிறகு நீங்கள் வாழ்நாள் முழுவதும் நல்ல அமைதியான வாழ்க்கையை சந்தோசமாக வாழ்வீர்கள் .

ஓர் ... வருடமோ அல்ல சில 10 அல்லது 15 வருடமோ ...மட்டும் தான் உங்களது கடின உழைப்பு ..பிறகு உங்கள் வாழ்நாள் முழுதும்  எல்லாம் சுகமே ! 

வெறும் படித்து ஒரு நல்ல வேலையில் சம்பாதிப்பது மட்டும் உனக்கு நல்ல வாழ்க்கை மற்றும் சிறந்த எதிர்காலம் அமையாது ,  அதிலும் ஒரு அமைதி மற்றும் நிம்மதி இல்லாமல் போகும் ...


இந்த குறிகிய காலத்தில் நீங்கள் உங்களது சுயமுனேற்றத்திற்காக பாடுபட தயாரா ? உங்களை நீங்கள்  நல்ல எதிர்காலத்திற்காக கொடுக்க தயாரா ? மிக உற்சாகமாக சொல்லுங்கள் நான் தயார் என்று !!

ஒரு சில வருடத்திற்கு மட்டும் கஷ்டத்தை தாங்கி நல்ல எதிர்காலத்தை அமைத்து வாழ்நாள் முழுவதும் சுகத்தை அனுபவிக்கப்போகிறீர்களா ? அல்லது இப்பொழுது சுகத்தை அனுபவித்து பிறகு வாழ் நாள் முழுவதும் துன்பத்தை அனுபவிக்கப்போகிறீர்களா?

நீங்களே யோசித்து முடிவு எடுங்க.

நன்றி
-----------------------------------------------

Post a Comment

Previous Post Next Post