மனதின் இயல்பு அன்பார்ந்த சகோதர சகோதரிகளுக்கு வணக்கம் !.
மனதை பற்றி முந்தைய பதிவில் பார்த்தோம் ! இப்பொழுது மனதின் இயல்பு பற்றி பார்க்கலாம் !...

மனம் எங்கிருந்து செயல்பட தொடங்கியது ? என்ற வினாவிற்கு விடை அறிவோம் வாருங்கள் !! ...

மனம் நாம் சிறு குழந்தையிலிருந்து செயல்படத்தொடங்குகிறது  ..ஆம் ! நமக்கு ஐந்து வயது வரும் வரைக்கும் நம்மால் நம்மை பற்றி அறிய முடியாது !... ஒரு சிறு உயிரினம் போல நாம் நான்கு வயது வரை நடந்துகொள்வோம் ...ஐந்து வயதில் தான் ... நம்மால் சுற்றுசூழலை புரிந்துகொள்ள முயற்சி செய்கிறோம் !...

அதன் பிறகு தான் , யார் தாய் யார் நமக்கு தந்தை ,... நமது பெயர் என்ன ? பெற்றோருக்கு நாம் யார் ? மற்றும் உறவினர்கள் பற்றி முதலில் இவை அனைத்தும் உணர்ந்து அறிகிறோம் ! இந்த நிலையில் நினைவுகள் சேர்ந்து ஒரு புதிய மனம் உருவாக தொடங்கும்.. மற்றும் நிறைய வீரியத்துடன் நமது மூளையில் ஞாபகசக்தி திறன் அந்த வயதில் அதிகமாக இயங்கும் ..அதனால் தான் சிறுவயதிலே  நாம் கல்வி கற்க தொடங்குகிறோம் .
அதன் பிறகு  ... ஐம்புலன்களை நாம் உணர்ந்து ... கசப்பு, இனிப்பு, ஒழுக்கம் போன்ற நன்மை தீமை விசயங்களை உணர்ந்து அறிவோம் ...இந்த நிலையில் நமக்குள்  ஒரு குரங்கின் அறிவு போன்று செயல்படத்தொடங்கும்.

...ஒரு பதிமூன்று வயது வரும்வரை ஒரு சுயஅறிவு இல்லாமல் நடந்துகொள்வோம் எது ஆபத்து ...எதில் நாம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று எல்லாம் அப்பொழுது தெரியாது ... யாரை வேண்டுமானாலும்  நாம் சுலபமாக நம்பிவிடுவோம் ! நாம் அனைவரும் அந்த வயதில் நிறைய பிரச்சனைகளை சந்தித்திருப்போம் ! சண்டை , கோபம் , பொறாமை , நல்ல பழக்கம் நல்ல குணங்கள் எல்லாம் அந்த ஐந்திலிருந்து பதிமூன்று வயதுவரை நாம் பழகி அதை நமக்குள் பதிவிடுகிறோம்  ...
அதனால் தான் அந்த வயதில் நமது பெற்றோரின் கண்டிப்பு மிக அதிகமாக இருக்கும் !


பிறகு தான் சுய அறிவு நமக்குள் உருப்பெறும் ...நாம செய்றது தவறா சரியான்னு யோசிக்க ஆரம்பிப்போம்!...நல்ல மற்றும் தீய   எதிர்காலம் எல்லாம் ...
நாம் எப்படி நம் சுயஅறிவை பயன்படுத்துகிறோமோ அதை பொறுத்து அமைகிறது !...


சிறுவயதில் நாம் எதன் மீது ஈர்க்கப்பட்டு அவற்றில் நிலையாக  செயல்படுகிறோமோ அதை பொறுத்து  தான் பதிமூன்று வயதிலிருந்து நமது குணங்களாக மற்றும் பழக்கமாக மாறுகிறது...


ஒரு இருபது வயது வரை அலட்சியமாக , விளையாட்டு தனமாக இருப்போம் ... அந்த வயதிற்கு பிறகு தான் வாழ்க்கையின் நிதர்சனத்தை புரிந்துகொள்வோம் விழிப்புணர்வோடு செயல்பட தொடங்குவோம் !


இப்படி தான் மனம் உருப்பெற்று வளர்ச்சி பெறுகிறது ... இன்றைய பதிவில் நாம் மனதின் தொடக்கம் பற்றி புரிந்துகொண்டோம் !... அடுத்த பதிவில் மனதின் இயக்கத்தை பற்றி அறிவோம் !

வாரத்தில் கேட்கும் கேள்விகளுக்கு  சரியான விடை கமெண்ட் டில் பதிவிடுங்கள் ...ஆன்மீக கல்வியில் ஆன்ம உணர்வுடன் தெளிவாக புரிந்து கற்றுக்கொள்ளவேண்டும் ! அப்போதுதான் சரியான விடைகளை கூறமுடியும் !


இந்த வாரத்திற்க்கான கேள்விகள் !.....

1.எப்படி பார்க்கின்ற கேட்கின்ற விசங்களினால்  மனம் செயல்படுகிறது ?


2. உணர்வுகள், மற்றும் உணர்ச்சிக்கும் என்ன வித்யாசம் உள்ளன ?


3.எது நம்மை கட்டுப்படுத்துகிறது ... மாயையா , ஈர்ப்பா அல்லது மனமா அல்லது ஆன்மா அல்லது இறைவனா ?


4.உண்மையில் நமது வினைக்கும் இறைவனுக்கும் சம்பந்தம் இருக்கிறதா ? உண்மையில் யார் காரணம் ?


5.மனம் , அறிவு எங்கிருந்து செயல்பட தொடங்குகிறது ?


6. ஆன்மீக கல்வியில் முதலில் , ...இறைவனை பற்றி அறியாமல் ,எதற்காக மனம் பற்றி அறியவேண்டும்?

உங்கள் கருத்துக்களை கமெண்ட் பண்ணுங்கள்

நன்றி 

--------------------------------------------

Post a Comment

Previous Post Next Post