தோல்வியை ஏற்றுக்கொள்ள  பழகு.வணக்கம் நண்பர்களே !


நேரத்தின் முக்கியத்துவம் மற்றும் சுய முன்னேற்றம் பற்றி வாழ்க்கையில் வென்றவர்கள் அருமையாக சொல்லுறாங்க அதைப்பற்றித்தான் இந்த பதிவில் பார்க்கப்போறோம் உறுதியாக இளைஞர்களுக்கு ஊக்கத்தை கொடுக்கும் சரி வாங்க பார்ப்போம் 
எல்லாரும் கேட்பதுண்டு என்னால் மட்டும் ஏன் எதிலும் சரியாக வெல்ல முடியல , ஏன் என்னால் எதையும் சாதிக்கமுடியல , 
எது உன்னை தடுக்கிறது ?...தோல்வி பயமா ?... காசு பணமா ? சொல்லுங்கள் !  இல்லை மற்றவர்கள் என்ன சொல்லுவார்களோ என்ற அச்சமா ? ...இல்ல வேற எதாவுதா ? .. எது உங்களை தடுக்கிறது ...

 உங்களை தவிர எதும் உங்களை தடுக்கப்போறது இல்லை 

ஆமாம் !...உன் இலட்சியத்தை நோக்கி நீயே உன்னை செல்லவிடாமல் தடுக்கிறாய் ... நீயே காரணமாக இருக்கும்போது எதற்கு மற்றவை மீது பழிபோடுகிறாய் ?....இது போன்று வீணான சந்தேகங்கள் , சிந்தனைகள் வைத்துக்கொண்டால்  எப்படி முன்னேறிச்செல்வது ? ...

நம்பிக்கை இல்லையா ?  பயமா ? ... ஒன்றை தெரிந்துகொள் ! உன்னை தவிர யாராலும் உன்னை வீழ்த்தமுடியாது !... நீ நினைத்தால் வெற்றி ! அல்லது தோல்வி ! முடிவு உன்கையில் !...

தெளிவு தான் வாழ்க்கை !... தண்ணீர் தெளிவில்லாமல் இருந்தால் யாருக்கும் பயன்படாது !... அது போல உங்கள் மனதை நீங்கள் தெளிவுபடுத்துங்கள் ! தைரியத்தையும், விவேகத்தையும், நம்பிக்கையும், வளர்த்துக்கொள்ளுங்கள் ! அது போதும் உங்கள் மனத்தெளிவுக்கு !

மனம் தெளிவடைந்தால் வாழ்க்கையை நமக்கு ஏற்றார் போன்ற சோலைவனமாக மாற்றிக்கொள்ளலாம் !..


காரணங்கள் சொல்லுவதற்கு முதலில் நன்றாக தான் இருக்கும் !... பிறகு அதுவே உங்களை உங்கள் மீதே பரிதாபம் ஏற்படவைக்கும் !...நீங்களே உங்களை தாழ்த்திக்கொள்வீர்கள் !...மத்தவங்ககிட்ட பரிதாபமான  நபராக நீங்கள் உங்களை கட்டிக்கொள்வதனால் ஒரு பயனும் இருக்காது !...
அதுவே,.. மற்றவர் உன்னை ஏளனமாக பார்க்கவைக்கும் !... மற்றவரின் விமர்சனங்களுக்கு நீ ஆளாவாய் ! இது உனக்கு தேவையா ?...யோசி !


உங்களுக்கு என்ன இல்லனு இப்படி.... பண்றீங்கன்னு புரியல  !...எல்லாமே உங்களுக்குள்ள தான் இருக்கு !... அதை எப்படி தட்டி எழுப்பணும்னு நீங்க தான் அதுக்கான வழியை கண்டுபிடிக்கணும் தவிர யாரும் உங்களுக்கு உதவமாட்டார்கள் !


மேலும் படிக்கவும்:-

உன்னை நீ நம்பு ~ Best Tamil Motivational lines

மனதை வலிமைப்படுத்த இரண்டு வழிமுறைகள்


எல்லாருக்கும் ஒரு பழக்கம் இருக்கு அது தான் 
யாரோ அல்லது உங்கள் நண்பனோ அவன் உங்களை விட முன்னேறிவிட்டால் உடனே பொறாமை கொள்வது !...அதென்ன பழக்கம் ?  அவனது தேவைக்காக அவன் பாடுபட்டான் அடைந்தான் !
ஆனால் நீ என்ன செய்தாய் உன்னுடைய  சுயமுனேற்றத்துக்கு ? ஒன்றும் செய்யவில்லை .. 

அப்படி இருக்கும் போது உனக்கென்ன  தகுதி இருக்கு அவன் மீது பொறாமை கொள்ள ?....எந்த தகுதியும் இல்லை !

அதனால் உனக்கு என்ன தேவையோ உனது முயற்சியில் பாடுபட்டு அதை பெற்றுக்கொள் !...உன்னால் முடியும் ! உன்னை நம்பு ! மற்றவரை பார்ப்பதை விடுங்கள் 

உங்களுக்கு அப்படி என்ன குறை ... உங்களுக்கு உங்களின் திறமை இருக்கிறது .. உங்களிடத்தில் சுயஒழுக்கம் இருக்கிறது ... உங்களிடத்தில் நல்ல பண்பும் அறிவும் இருக்கிறது ... அதை வைத்துக்கொண்டு முன்னேற பழகு !

யாரும் சுலபமாக சாதிக்கவில்லை ... எந்த சாதனையும் பிரச்சனை இல்லாமல் கிடைக்காது ... யாருடைய மடியிலும் சுலபமாக வெற்றிக்கனி விழுவதில்லை ... 

அனைத்து வெற்றிக்கும் சாதனைக்கும் பல பிரச்சனைகள் வந்தே தீரும் ! அதை யாராலும் மாற்றமுடியாது ! உனக்கு திறமை இருந்தால் அதை தாண்டி சாதித்து காட்டு ! நீ யார் என்பதை உன் வெற்றி சொல்லும் !

உன்னுள் இருக்கும் வைராக்கியம் என்னும் மிருகத்தை தட்டி எழுப்பு !... இது உனக்கான காலம் ! உனக்கான நேரத்தை பயன்படுத்து !... தைரியமாக செயலை செய்ய தொடங்கு !... இந்த காலமும் சூழலும் உங்களுக்காக அமைக்கப்பட்டவை ....அவை உனக்காக மாற்றிக்கொள்ள பழகு ...

உங்களுக்கு வாழ்க்கையில் பிரச்சனையா ? சூழலில் சிக்கி தவிக்கிறீர்களா ? ஏதாவது செய்து அதிலிருந்து மீண்டு விடு  !.. உனக்கு எது வேணுமோ அது நீயே போய் எடுத்துக்கொள் !...ஆனா முயற்சியை மட்டும் விடாதே !

வெறும் காரணங்கள் சொல்லி தப்பிக்கப்பார்க்காதே ! அது நிஜமில்லை பொய் ! அது நீங்கள் உருவாக்கும் கட்டுக்கதை !...அப்படியென்றால் எது உண்மை என்று தெரிந்துகொள்ளவேண்டுமா ? அதுதான்..... நேரம் !

ஆம்! நேரம் எபபோழுதும் உன்னுடனே பயணித்துக்கொண்டிருக்கிறது ஆகவே அதை நீ விட்டுவிடாதே ... மற்றும் உனக்கு திறமை இருக்கிறது அறிவு இருக்கிறது ...நல்ல நபர்களின் துணையும் , துணிச்சலும் , ஒழுக்கமும் இருக்கிறது சாதிப்பதற்கு ! இதுவே  உனக்குள் இருக்கும் நிஜமான உண்மை ஆகும் ! இதுவே உண்மையான வெற்றிக்கு காரணம் !

ஆகவே ,அனைத்து வெற்றியும் வாய்ப்பும் உன்னைத்தேடி வராது உன் மடியில் வந்து விழாது ... எல்லாமே சுலபாக அமையாது ... உனக்கு வேண்டும் என்றால் நீ போய் எடுத்துக்கொள் !
இது உங்களது நேரம்!... . இது உங்களது வாய்ப்பு !....இது உங்களது இடம் !.

இது என்னுடைய நேரம் ... இது எனக்கான வாய்ப்பு ! நாளை நாளை நாளை என்ற வார்தைக்கே இடமில்லை எதுவாக இருந்தாலும் நான் இருந்து இன்றே செய்வேன் ! ஆம் இப்பொழுதே இன்றைக்கே செய்வேன் என்று வெறியாக இருக்கவேண்டும் 

இது உங்களுடைய கனவு !..உங்களின் லட்சிய எதிர்காலம் !..எழுந்திரு !..இப்பொழுதே  கனவுக்க்கான வேலையை செய் !...போராடு ....துணிந்து போராடடு ! போராட்டம் எப்படி இருக்கும் என்று பல சாதனையாளர்களிடமிருந்து கற்றுக்கொள் ...போராட பழகு !... 

உனது எண்ணம், செயல், சிந்தனை , எல்லாம் லட்சியத்தின் மீது  மிக ஆணித்தரமாக பதியவை !... இப்பொழுதே போ .... இலட்சியத்தை தொடங்கு !...சாதனை உன்னுள்புதைந்திருக்கிறது  !...அதை வெளிக்கொண்டு வா !...

வாழ்க்கையில் வெற்றிபெற நேரத்தை சரியாக பயன்படுத்து என் நண்பா !!!!

நன்றி 

இந்த பதிவை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்

---------------------------------------------------------------------------------------------

Post a Comment

Previous Post Next Post