மனம் பற்றி அறிவோம் !


வணக்கம் நண்பர்களே ,


இனி வரும் பதிவில் நாம் ஆன்மீக கல்வி யை கற்கப்போகிறோம் !... ஆகவே இந்த ஆன்மீக கல்வியில் முதலில் பார்க்கப்போவது மனதை பற்றி அறிவோம் வாருங்கள் !...

முதலில் , மனம் என்றால் என்ன என்ற கேள்விக்கு விடை அறிவோம் !...
மனம் நம் ஐம்புலன்களில் இயங்கக்கூடியவை ஆகும் !

நாம் பார்க்கின்ற கேட்கின்ற விசயத்தில்  எண்ணங்கள் செயல்பட்டு , பின் அது ஒரு நினைவுகளின் குவியலாக மாறுகிறது  அது தான் மனம் !

அதாவது எண்ணங்களின் குவியல் மனம் என்றே சொல்லலாம் !

அந்த நினைவுகளின் மூலமாக தான் மனம் இயங்குகிறது ... இதனுடைய அடிப்படை வைத்து  நாம் நமது மனதில் நல்லதை மற்றும் தீயதை புரிந்து கொண்டு அவற்றை உள்வாங்கிக்கொள்கிறோம் !

இந்த மனம் மூலமாக நாம் பல விசங்களில் நம்மை நாமே ஈடுபத்திக்கொள்வதுண்டு ..அது நல்லதானாலும் சரி தீயதானாலும் சரி ... அதனால் தான் நம் வினைக்கு நமே காரணமாகிறோமே தவிர மற்றவருக்கும் இறைவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ! ஆனால் இதை தெரியாமல் பலர் தன்  கோபத்தில் மற்றவரின் மீது பழிபோடுவர் ...

மற்றொன்று உணர்ச்சிவசப்படுவது :

உணர்ச்சிகளின் மூலமாக நமது மனம் இயங்குகிறது ..ஆம் நம் உணர்ச்சிவசத்திற்கு சுலபமாக கவர்ந்துவிடுகிறோம் ... அது கோபம் , சோகம் சந்தோசம், வேதனை, மற்றும் காமம் முதலியவை சுற்று சூழலுக்கு ஏற்ப  நமக்குள் தூண்டுகிறது ...இதன் அடிப்படையில், நாம் அறியாமல் பல தவறுகள் மற்றும் நன்மைகளுக்கும் காரணமாகிறோம்  !... 

இந்த முதல் பாடத்தில் , நாம் மனதை பற்றி அறிந்துகொண்டோம் ! அடுத்த பதிவில் நாம் மனதின் இயக்கம் அதாவது மனம் எங்கிருந்து செயல்பட தொடங்கியது என்று அடுத்த பதிவில் பார்க்கலாம் !

இந்த ஆன்மீக கல்வி அனைத்து ஆன்மீக ஆர்வத்தில் இருக்கும் அனைவருக்கும் பயன்படும் என்று நம்புகிறோம் !... 

உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கமெண்டில் கேட்கலாம்.


நன்றி .


--------------------------------------------------------------------------------------------------------------------------


Post a Comment

Previous Post Next Post