சோம்பலை விட்டு, உனது பயனை அறிந்துகொள் !


வணக்கம் நண்பர்களே !


ஒரு நாள் புத்தர் கிராமத்து  சுற்றுப்புறத்தில் உலகத்தை மாற்றுவதற்கான கோட்பாட்டை தன் சீடர்களுக்கு சொல்லிக்கொண்டிருந்தார்..

 

அப்பொழுது ,பல வியாதிகளால் அவதிப்பட்ட பெரும் செல்வந்தர் ஒருவர் அவரிடம் வந்தார்..மிக்க பணிவுடன் சென்று புத்தரிடம் கூறினார்..

" புத்தர் பெருமானே!.. மன்னிக்கவும் !! 
பெரும் மன துயரத்தில் உள்ளதால்,..உங்களிடத்தில் சரியான முறையில் மரியாதை செலுத்தமுடியாத நிலையில் நான் உள்ளேன்! ....உடல் பருமன், அதிகப்படியான மயக்கம் மற்றும் பல துன்பங்களால் நான் பெரிதும் பாதிக்கப்பட்டுவருகிறேன் ஆகவே இதனை சரி செய்ய் ஒரு வழி சொல்லுங்கள்"... என்று கேட்டான் .

அந்த மனிதன் அணிந்திருந்த ஆடம்பரங்களைக் கண்ட புத்தர் அவரிடம் கேட்டார் ..
"உங்கள் நோய்களுக்கான காரணத்தை அறிய விரும்புகிறீர்களா?".. என்று .

 செல்வந்தரோ, கற்றுக்கொள்ள தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார், 


உடனே ,புத்தர் கூறினார்: 
"நீங்கள் புகார் செய்யும் நிலையை உருவாக்கும் ஐந்து விஷயங்கள் உள்ளன" 
           1.  செழிப்பான இரவு உணவு
           2.  அதிகமாக தூங்குவதற்கு விரும்புவது 
           3.  அதிக காமம் ( அதிக விந்து வெளியேற்றல் ) /அதிக விந்து இழப்பு. 
          4.  சிந்தனையற்ற தன்மை   

          5. வேலை செய்யமல் இருப்பது ( உடற்பயிற்சி )

ஆகவே , உணவை குறைத்து கொண்டால் அதிக காமம் தூண்டாது இதனால் உங்களின் உயிர்சக்தி இழக்காமல் எப்பொழுதும் சுருறுப்புடன் , உற்சாகத்துடன் இருப்பீர்கள் மற்றும் உங்கள் மனதை எப்பொழுதும் ஒரு நல்ல வேலை செய்வதிலே நிலைத்து வையுங்கள் .. அப்பொழுது தான் தேவை இல்லாத மன இச்சைகளிலிருந்து விலக முடியும் ,மற்றும் உடலுக்கும் நல்ல பயிற்சி ஏற்படும் .


சோம்பலை விரட்டி ,ஒரு லட்சியவாதியாக மாறுங்கள் !...மற்றவர் பின்பற்றும்படியான உங்கள்  திறமையை, ஒழுக்கத்தை, மற்றும் அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள்... அப்போது தான் உங்களுக்கும் மற்றவருக்கும் பயன்பெறும் .

இதை செய்வதால் , உடல் மற்றும் மனம் ஆரோக்கியமாக இருக்கும் ...

இந்த ஆலோசனையைப் பின்பற்றினால்  நீங்கள் உங்கள் ஆயுளை நீடிப்பீர்கள்..

பணக்காரர் புத்தரின் வார்த்தைகளை நினைவு கூர்ந்தார் .. சிறிது காலம் சென்றது ... அந்த பணக்காரர் தன் பொலிவுடன் கூடிய ஒரு சந்தோசம் மற்றும் உடல் ஆரோக்கியத்துடன் மீண்டு , ஒரு புதிய வேகம் கொண்ட  இளம் வீரனை போல மீண்டு வந்தார் ... அவர் இழந்த அவருடைய நல்ல கௌரவம் மற்றும் மரியாதை மீண்டும் கிடைத்தது ...


ஒரு சாதித்த உணர்வுடன் அவர் புத்தரை காண வந்தார் ..


இப்பொழுது, குதிரைகள் மற்றும் ஆடம்பரங்கள் இல்லாமல் அவர் புத்தரிடம்  சாதாரண மனிதனாக வந்து சேர்ந்தார்...பின் புத்தரிடம் பணிவுடன் கூறினார் :

"குருவே! நீங்கள் என் உடல் வியாதிகளை குணப்படுத்தினீர்கள் , மனதின் ஞானத்தைத் தேடுவதற்காக நான் இப்போது உங்களை தேடி வந்தேன்!" என்று கூறினான்! ..

பின், புத்தர் கூறினார்: "உலகம் ஒருவரது உடலை வளர்க்கிறது, ஆனால் ஞானிகள் அவருடைய மனதை நல்ல மார்கத்தில் வளர்க்கிறார்கள்.

தனது பேராசை என்னும் பசியின் திருப்தியில் ஈடுபடும் ஒருவர் தனது சொந்த அழிவை தேடிக்கொள்கின்றனர் . ஆனால் எப்பொழுது ஒருவர் , தனது உள்ளத்தை கட்டுப்படுத்தி நல்லொழுக்கத்துடன் வாழ்கின்றாரோ அவருக்கே அனைத்து நண்மைகளும் தேடி வருகிறது !

ஆனால், இறை பாதையில் நடப்பவருக்கு இவை இரண்டும் இருக்கும்:  
தீமை மற்றும் ஆயுட்காலம் ஆகியவற்றிலிருந்து இரட்சிப்பு"!...அதாவது அவர்களுக்கு எந்த தீமையின் பாவங்களும் , நன்மையின் புண்ணியமும் ஆகிய எதுமே அவர்களை அடையாமல் இறைவன் காப்பார் ... இதனால் இறைவழியில் செல்பவர்களுக்கு எந்த கர்மவிளைவுகளும் அவர்களை தாக்காது " என்று கூறி முடித்தார் !


....புத்தர் என்ன கூறினார் என்று உங்கள் வாழ்க்கையோடு ஒப்பிட்டுப்பாருங்கள் ! அப்பொழுது தான் உங்களுக்கு சரியான தெளிவு கிடைக்கும் !


நீங்கள் வாழ்க்கையில் பார்க்கிறீர்கள்!....

நாம் நம் வயிற்றுக்கும் ஆசைகளுக்கும் உணவளித்தால் மற்றும்  
நீங்கள் அதிகமாக தூங்கினால்....
 நமக்கு என்ன வரும்? ஒன்றும் வராது ... வெறும் துன்பம் தவிர ,

அதனால் ,எந்த எண்ணமும் இல்லாமல் வெளியில் சுற்றி நடந்து இன்பத்தைத் துரத்துங்கள் ..உங்கள் மனதிற்கு சுகத்தை பழகாதீர்கள் ! அமைதியை பழகவையுங்கள் ! உங்கள் மனம் அமைதியில் நிறைந்தால் எதற்கும் நீங்கள் காரணமாக தேவையில்லை !

உங்கள் சமூகத்துக்கோ அல்லது உங்கள் சக மனிதர்களுக்கோ எந்தப் பயனும் இல்லாமல், இருந்தால் .... உங்களுக்கு என்ன வரும்?...


ஓர் உதாரணத்திற்கு ,..நீங்கள் இப்போது ஒரு சிறிய, இளம் வேர் என்றால்,...
நீங்கள் இந்த வழியில் வாழ்ந்தால் நீங்கள் எந்த வகையான மரமாக மாறுவீர்கள்? .. சற்று யோசியுங்கள் !


எப்போதும்  அது இது என்று கண்டுபிடித்து சரியான அளவு தூக்கம், ஊட்டச்சத்து மற்றும் நல்ல சுகத்தை பெருகிகிறீர்கள்! .. ஆனால் , நாம் என்ன இவ்வுலகில் செய்தோம் என்று கண்டுபிடிக்க மறந்துவிடுகிறோம் !

வெறும் சுகம் மட்டுமே வாழ்க்கை இல்லை... லட்சியத்தை  அடைவது அல்லது ஒரு நன்மையாவது , நாம் செய்துவிட்டு செல்லவேண்டும் ...நமது  பயன் என்ன என்று கண்டு உணருங்கள் !

வாழ்க்கையை அனுபவியுங்கள் ! அதற்கு, ஒரு தொழிலையும் கொண்டிருக்க வேண்டும் ..அனைவரது வாழ்க்கையிலும்  ஒரு அர்த்தம் இருக்கிறது! அனைவரது பிறப்பிற்கும் ஓர் பயன் உள்ளது ...


ஆம்! உங்கள் வாழ்க்கைக்கும் அர்த்தம் இருக்கிறது ..அதை நீங்கள் தான் கண்டுபிடித்து உருவாக்கவேண்டும்!.. 

சில குறிக்கோள்களை நீங்களே அமைத்துக் கொள்ளுங்கள், எப்போதும் உங்கள் மனதை வளர்க்க முயற்சி செய்யுங்கள் ..

இந்த பிரபஞ்சத்தில் என்ன நடக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள உங்கள் மனதை வளர்த்துக் கொள்ளுங்கள்!..பற்றற்ற நிலையில் நீங்கள் இருந்தால் ,.. எந்த சோகமும் துயரமும் , ஆசைகளும் உங்களை தாக்காது ..நீங்களும் உங்கள் மனவலிமையோடு ஆனந்தமாக இருப்பீர்கள் !...


இதுவே புத்தர் நமக்கு கூறிய நல்ல பாடமாகும் !...இதை பின்பற்றி நாம் அனைவரும் பலன் பெறுவோம் !


நன்றி .Post a Comment

Previous Post Next Post