அதிகாலை  எழுவதால் கிடைக்கும் 4 நன்மைகள் 
வணக்கம் நண்பர்களே,

நிறைய வீடியோவில் நாம் அதிகாலை 4 மணிக்கு எழவேண்டும் மற்றும் அதிகாலை எழும் நபர்களின் வாழ்க்கை தோற்காது என்று சொல்லிருக்கோம் அப்படி அதில் என்னதான் இருக்கு மற்றும் அந்த நேரத்தில் எழுந்தால் கிடைக்கும் நன்மைகள் பற்றித்தான் இந்த பதிவில் பார்க்கப்போறோம் , இதற்கப்பறம் நிறைய நண்பர்கள் உறுதியாக அதிகாலை 4 அல்லது 5 மணிக்கு எந்திருப்பிங்க..


1 தூய்மையான காற்று ,

அந்த நேரத்தில் நாம் எழுவதால் நமக்கு தூய்மையான அதாவது மாசுக்கள் இல்லாத காற்று கிடைக்கும் , இதனால் அந்த மூச்சு காற்று நமக்கு உடலில் சென்று அனைத்து உறுப்புகளையும் சுத்தப்படுத்தும் இதனால் உடல் ரீதியான நன்மைகள் பல கிடைக்கிறது. இதனால் தான் அதிகாலை பிராணயாம பயிற்சி செய்ய சொல்வதன் காரணம் மற்றும் நாம் நமக்கு தேவையான சுத்தமான காற்றை இந்தநேரத்தில் மட்டுமே அதிகம் பெறமுடியும்.அதேபோல உடல் நலம் நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்


2 அமைதி ,

ஒருநாளில் எந்த நேரத்தில் பேரமைதி இருக்கும் என்று பார்த்தால் அது உறுதியாக 4 மணியாகத்தான் இருக்கும் நமக்கு உலகமே அமைதியாக இருப்பது போல தோன்றும் இதனால் இயற்கையாகவே நமக்கு அமைதி ஏற்படுகிறது , மன அழுத்தம் , கோபம் , வாழ்க்கை வெறுப்பாக இருக்கு என்று சொல்லும் நண்பர்கள் ஒரு நாள் 4 மணிக்கு எழுந்து பாருங்கள் அப்போது நாம் எப்படி ஒரு வாழ்க்கையை வீணடிக்கிறோம் என்று உணர்வோம்.

மற்றும் மனமும் அமைதியடைவதால் தியானம் செய்யாமலே நமக்கு அமைதி மற்றும் ஒருவித நல்ல அனுபவம் ஏற்படும் அதாவது தினமும் அதிகாலை எழும்போது நாம் உலகத்தை பார்க்கும் விதமே வேறு விதமாக இருக்கும்.


3 அதிக நேரம்,

பொதுவாக எனக்கு நேரமே போதவில்லை  என்று சொல்லும் நபர்களை தான் எங்கும் பார்க்கிறோம் காலை 10 மணிக்கு எழுந்தால் எப்படி நேரம் சரியாக இருக்கும் , ஆனால் 4 அல்லது 5 மணிக்கு எழும்போது நமக்கு அந்த நாளில் அதிகப்படியான நேரம் கிடைக்கும் , என்னதான் அனைத்து வேலைகளையும் பார்த்தாலும் நமக்கு இன்னும் நேரம் இருந்துகொண்டே இருக்கும்.

மற்றும் உங்கள் லட்சியத்தை அடைய நீங்கள் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும் இதற்கு அதிகாலை எழுந்தால் மட்டுமே உங்கள் லட்சியத்தை அடைய அதிக நேரம் கிடைக்கும் , இதை பயன்படுத்தினால் வெற்றி உறுதி.தோல்விக்கு காரணமாக இருக்கும் நாளை பார்த்திக்கொள்வோம் எனும் பழக்கத்தை முறியடிக்கலாம் , நாளை என்ற பேச்சுக்கே இடம் இருக்காது.

மற்றும் உங்கள் எதிர்காலம் , லட்சியம் பற்றி சிந்திக்க மற்றும் செயலாற்ற அதிகநேரம் இருப்பதால் உங்களுக்கு என்ன தேவையோ அதை சிறப்பாக செய்யலாம், அதிகாலை எழும் நபர்கள் ஒருபோதும் எனக்கும் நேரமே போதவில்லை என்று  சொல்லமாட்டார்கள் ஏனென்றால் அவர்களுக்கு 24 மணிநேரம் இல்லாமல் 30 மணிநேரம் இருப்பது போல இருக்கும்.


4 ஊக்கம் பிறக்கும்

இந்த நேரத்தில் எழுவதால் உங்கள் மனம் ஒருவிதமான ஊக்கத்தை பெரும் அதாவது உள்ளுக்குள்--- யாரும் எழாத நேரத்தில் நீ எழுந்திருக்க அதனால் உன்னால் எதையும் செய்து முடிக்கமுடியும் என்று நம்பிக்கை பிறக்கும் மற்றும் உங்களுக்கு எதிரி என்று இருந்தால் அவன் இந்த நேரத்தில் தூங்குகிறான் ஆனால் நீ அப்படி இல்லை நீ மிகவும் சுறுசுறுப்பானவன் என்றெல்லாம் மனம் நம்மை மாற்றும்

இதற்காகவே இந்த confident காகவே சிலபேரு வெறித்தமனாக உழைப்பார்கள்.

இந்தமாதிரி நம்பிக்கை , புது உற்சாகம் பிறக்கும் இதனால் பயங்கர சோம்பேறி கூட தன்னை யாரும் எதிர்பார்க்காத விதமாக மாற்றி அமைத்து வெற்றிபெற முடியும்

இளைஞர்கள் உடற்பயிற்சி  , விளையாடுவது இப்படி தனக்கு பிடித்தமான விஷயத்தை செய்ய அதிகாலை நேரத்தில் எழுந்தால் அதிகமாக plan போட்டமாதிரி செய்துமுடிக்கலாம்.

இன்னும் சொன்னால் , உடல் ஆரோக்கியம் , மன ஆரோக்கியம் , லட்சியத்தை அடைய , நன்றாக படிக்க , தியானம் செய்ய , சந்தோசமான வாழ்க்கை வாழ இது எல்லாத்துக்குமே அதிகாலை நேரமே சிறந்தது

இதை மனதில் ஏற்றுங்கள்  - வாழ்வில் சாதனை படைத்து நமக்கு முன்னோடியாக இருக்கும் தலைவர்கள் அதிகாலை எழும் பழக்கம் உடையவர்களே ...

எனவே இரவு சீக்கிரம் தூங்கி , அதிகாலை எழும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள் உங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்...அதிகாலை எழுவதால் வேற ஏதவாது நன்மை இருந்தால் சொல்லுங்க தெரிந்துகொள்வோம் மற்றும் நீங்கள் தினமும் எத்தனை மணிக்கு எந்திருப்பிங்க கமெண்ட் பண்ணுங்க..

நன்றி திருச்சிற்றம்பலம்.
---------------------------------------------------------

Post a Comment

Previous Post Next Post