கடவுள் என்பவர் யார் ? 


வணக்கம் நண்பர்களே,

கடவுள் என்பவர் யார் மற்றும் கடவுள் எப்படி பட்டவர் மற்றும் இந்த உலகை ஏன் இறைவன் படைத்தார் ? என்றுதான் இந்த பதிவில் பார்க்கப்போறோம் சரி வாங்க பார்க்கலாம். உறுதியாக இறைவனை பற்றி நிறைய விஷயங்களை நாம் அறிந்துகொள்ளலாம்.இதை சொன்னது ஸ்ரீ ராமகிருஷ்ணரின் சீடர் ஒருவர் தான்.

ஒன்றே இறைவன் , நாம் மதரீதியாக பிரித்துப்பார்க்கும்படி பல கடவுள்கள் இல்லை கடவுள் ஒருவர்தான். சச்சிதானந்தம் அவருடைய இயல்பு அதாவது சத்- என்றால் என்றும் இருப்பது சித் - என்றால் பிரபஞ்ச உணர்வு , ஆனந்தம் - நிறைவான மகிழ்ச்சி ,  உலகை படைத்தவர் கடவுள் ,

இறைவன் உலகை படைக்க வேற மூலப்பொருள்கள் எதுவும் தேவைப்படவில்லை , அவரே ஆதிமூலம் அதேபோல அனைத்தையும் பாதுகாப்பது அவரில் இருந்து வெளிப்படும் சக்திதான்.  நம்மை படைத்த நோக்கம் முடிந்ததும் படைப்பு பொருள்கள் அவருக்குள்ளயே திரும்பி போய் ஒன்றிவிடும்,  படைத்தலும் , காத்தலும் , அழித்தலும் என்ற இந்த மூன்று நிகழ்வுகளும் சக்கரம் போல சுழன்று கொண்டே இருக்கும்.


பிரபஞ்சத்தை படைத்த பிறகு அதைக் காத்து நிர்வகிக்கும் பேரரசரும் அவர்தான். அவரவர் தகுதிக்கேற்ப வரங்களை வழங்குவதும் , பாவத்திற்கேற்ப தண்டனை வழங்குவதும் அவருடைய பொறுப்பு , அவர் சர்வ வல்லமை உள்ளவர் , அனைத்தையும் அறிந்தவர் , எங்கும் நிறைந்தவர் ,அவரின்றி ஒரு அணுவும் அசையாது , இவரை தான் நாம் பல பேர்களில் அழைக்கிறோம் , இன்னும் சொல்லப்போனால் நாம் கற்பனை செய்து பார்க்கக்கூடிய நல்லவை அனைத்தும் முழுமையாக நிறைந்த கருவூலமாக அவர் இருக்கிறார், இந்த நல்லதில் என்றுமே வற்றாத ஒன்றும் உள்ளது அதுதான் அவருடைய தனிப்பெரும் கருணை .


கட்டுப்பட்டு அல்லலுறும் ஆன்மாக்களிடம் அவர் காட்டும் பரிவு அதற்கு எல்லையே இல்லை , இந்த உலகை அவர் படைத்ததே கட்டுண்ட ஆன்மாக்களை கடைத்தேற்றத்தான். அதாவது மீண்டும் தன் குழந்தைகளை தன்னிடம் அழைத்துக்கொள்ளத்தான்.சிறிது சிறிதாக ஆன்மீக வாழ்வில் அடிவைத்து முன்னேறி முழுநிறைவை அனைவரும் அடைய வேண்டும் என்பதே அவருடைய விருப்பம்.  பக்தியும் நம்பிக்கையும் உள்ளவங்ககிட்ட இறைவன் தன் அன்பை முழுவதும் வெளிப்படுத்துவார் , நம்முடைய அப்பாவை திருப்படுத்துவது மிகவும் எளிது அதுதான் சரணாகதி , இறைவனிடம் சரண் புகுந்தால் அவருடைய அருளை பெறலாம் பின்னர் வாழ்க்கையே இன்பம்தான்.
இறைவனுக்கு உருவம் உண்டு , உருவம் இல்லாமலும் இருப்பார் , அதுமட்டுமல்ல ஏதாவது ஒரு உருவத்தில் அவதாரம் எடுத்து உலகிற்கும் வருவார் மனிதனை கீழான விலங்கு இயல்பிலிருந்து உயரிய ஆன்ம வாழ்க்கை நிலைக்கு அழைத்து செல்வார் , ஆனால் அதற்கு சரணாகதி தேவைப்படுகிறது நாம் ஒரு அடி இறைவனை நோக்கி எடுத்துவைத்தால் இறைவன் 10 அடி எடுத்துவைப்பார், நாம் எத்தனை வழிகளில் எத்தனை பெயர் வைத்து வழிபட்டாலும் அது அனைத்தும் ஒருவருக்குத்தான். அவரே நமக்குள்ளும் உள்ளார் அதை அறியவேண்டும். கடவுளை எந்த உருவத்திலும் அல்லது உருவம் இல்லாமலும்  வழிபட்டாலும் உண்மையாக மட்டும் வழிபடவேண்டும், நமது பிறப்பின் நோக்கமே இறைவனை அடையத்தான் என்பதை அறிந்தால் போதும். 

நன்றி நண்பர்களே, 

கடவுள் ஒருவர் என்பதை அறிந்து வேற்றுமைகளை மறந்து  இறைவனை நோக்கி செல்வோம் .

இந்த பதிவை ஆன்மீகத்தில் இருக்கும் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள் 

---------------------------------

Post a Comment

Previous Post Next Post