விளக்கை வாயால் ஊதி அணைக்கக்கூடாது ஏன் ?


வணக்கம் நண்பர்களே,நம்முடைய பெற்றோர்கள் சொல்லுவாங்க விளக்கை வாயால் ஊதி அணைக்காத நீர் அல்லது பூ வைத்து குளிர வைக்கவேண்டும் என்று சொல்லுவார்கள் அது ஏன் ? அதன்பின் இருக்கும் உண்மை ரகசியம் என்னவென்றுதான் இந்த பதிவில் பார்க்கப்போறோம் சரி வாங்க பார்க்கலாம்  


முதல் விஷயம் நெருப்பானது இறைவனுக்கு சமம், நாம் அன்றுமுதல் இன்று வரை கோவில்கள் மற்றும் நம்முடைய வீடுகளில் அக்கினியை கடவுளாக வழிபடுகிறோம் அதனால் நாம் விளக்கு அணைக்கும் போது நம்முடைய எச்சில்படும் என்பதால் வாயால் ஊதவேண்டாம் என்று முன்னோர்கள் சொன்னார்கள்.


அக்னி பஞ்ச பூதங்களில் ஒன்று மற்றும் இதன் சிறப்பு பூமியிலிருந்து ஆகாயத்தை நோக்கி செல்லும் ஒரு பொருள் நெருப்புதான் , தொன்று தொட்டே  கடவுளுக்கும் மனிதனுக்கும் இணைக்கும் பாலமாக நெருப்பு இருக்கிறது. இதை உணர்த்தவே யாகம் வளர்ப்பது , தீப ஆராதனை எடுப்பது போன்றவற்றை செய்தார்கள் 

இப்படி இருக்கும்போது நாம் மனதளவில் சுத்தமில்லால் , பல செயல்கள் செய்து , வாயால் தேவை இல்லாத பேச்சுக்களை பேசுவது இப்படியெல்லாம் செய்து அந்த வாயாலே விளக்கை அணைப்பது இறைவனுக்கு அவமரியாதை ஏற்படுத்தும் செயல்கள் ஆகும்.

அதேபோல விளக்கு ஏற்றும்போது நல்ல எண்ணத்தோடு ஏற்றவேண்டும் மனதில் அசுத்தம் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள் , கவனம் இறைவன் மேல் இருக்கவேண்டும் அதேபோல் வேடிக்கை பார்த்துக்கொண்டு விளக்கு ஏற்றவேண்டாம் , இன்னும் சிலர் இருப்பார்கள் சும்மா விளக்கு ஏற்றச்சொன்னார்கள் நானும் செய்கிறேன் என்று கடமைக்கு செய்யாமல் அதை இறைவனாக பார்த்து இறைவனை மனதளவில் நினைத்து விளக்கு ஏற்றவேண்டும். அடுத்து விளக்கை அணைக்கும்போது உடனே ஏற்றி அணைக்காமல் குறைந்தபட்சம் 48 நிமிடங்களாவது எரியவிடுங்கள் மற்றும் அணைக்கும்போது இறைவனை நினைத்து இன்றைய நாளில் நான் செய்த பாவங்கள் அழியவேண்டும் இறைவா என்று நினைத்து விளக்கை அணைக்கலாம்.


விளக்கு ஏற்றுவது மட்டும் முக்கியமல்ல அணைக்கும் முறையும் சரியாக இருக்கவேண்டும் இதை கடைபிடியுங்கள் .

இந்த பதிவை ஆன்மீகத்தில் இருக்கும் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள் 


நன்றி .Post a Comment

Previous Post Next Post