ஆழ்மனதின் அற்புதசக்தி பற்றி தெரியுமா ?
வணக்கம் நண்பர்களே ,

ஆழ்மனதில் விதைக்கும் நம்பிக்கை உங்களின் வாழ்வில் எவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை பற்றித்தான் இந்தப்பதிவில் நாம் பார்க்கப்போறோம்.உதாரணமாக ஒரு கதை ஒன்றை பார்ப்போம்

வெளிநாட்டில் சக்திவாய்ந்த ஒரு கிறிஸ்தவ துறவி ஒருவர் வாழ்ந்து வந்தார் அவரின் தவ ஆற்றலை வைத்து அவரின் மோதிரத்தை மிகவும் சக்திவாய்ந்ததாகவும் வைத்திருந்தார் அதாவது அவரை பார்க்க செல்லும் மக்களுக்கு அவரின் மோதிரத்தை தொட்டால் கூட போதும் நாம் வாழ்வில் நோய் நொடி இல்லாமல் சிறப்பாக வாழலாம் என்ற எண்ணம் இருந்தது அதேபோல அந்த துறவியும் நோயுடன் வரும் மக்களுக்கு தன் மோதிரத்தை கொடுப்பார் உடனே மக்களுக்கும் சரி ஆகும்.

இதேபோல அதேஊரில் இன்னொரு நபர் இருந்தார் அவருக்கு தீராத வியாதி இருந்தது  அவருக்கு நீண்ட நாட்களாக இந்த கிறிஸ்தவ துறவியை சந்திக்கவேண்டும் என்று விருப்பம் அப்படியாவது இந்த வியாதி குணமாகலாம் என்று ஒரு ஆசை , இதை அறிந்த அவரின் மகன் தன்னால் அந்த துறவியை சந்தித்து மோதிரத்தை வாங்கமுடியாமல் போனது ஏனென்றால் அந்த துறவி வேற இடத்திற்கு சென்றுவிட்டார் , இருந்தாலும் தன் தந்தையின் வியாதியை குணமாக்க தன்னால் முடிந்த ஒன்றை செய்வோம் என்று நினைத்து  ஒரு கடைக்கு சென்று அந்த துறவிடம் இருக்கும் பழைய மோதிரம் போல ஒரு போலி மோதிரம் ஒன்றை தயார் செய்தான் .

அதையும் தன் தந்தையிடம் கொடுத்தான் , உடனே தந்தை மிகவும் சந்தோசமாக எனக்கு துறவியின் மோதிரம் கிடைத்தது என்று பேரானந்தம் அடைத்து அந்த மோதிரத்தை தன் மார்பில் வைத்து இந்த அற்புத மோதிரம் எனக்கு கிடைத்திருக்கிறது இனிமேல் எனக்கு நோய் இருக்காது இதை வைத்தவர்கள் அனைவருக்குமே நோய் உடனே சரி ஆகும் எனக்கும் விரைவில் சரி ஆகப்போகிறது என்று நினைத்து தூங்குவார் , அதேபோல சில நாளில் அந்த நோயும்  குணமாகிவிட்டது.

இதற்கு காரணம் என்றவென்றால் அந்த மோதிரம் அல்ல தன் ஆழ்மனதில் எப்போதும்  சரி ஆகும் , எனக்கு நோய் இருக்காது , விரைவில் குணமடைவேன் என்று நினைத்த அந்த எண்ணங்கள் தான் , இது முற்றிலும் உண்மை தான் . எண்ணங்கள் இவ்வாறு தான் செயல்பட தொடங்கும் எப்போதும் முடியும் என்ற எண்ணத்தில் இருந்தால் உண்மையில் முடியும்.


மேலும் படிக்கவும்:-

வெற்றிக்கான சிந்தனை துளிகள்

ஆழ்மனம் எவ்வாறு வேலை செய்கிறது


இதேபோலத்தான் ஜோசியம் பார்க்கச்செல்லும்போது ஜோசியர் உங்களுக்கு ஒரு ஆபத்து இருக்கிறது என்று சொன்னவுடன் மக்கள் அதையே நினைத்தே எப்போதும் இருப்பதால் விபத்தும் நமக்கு உடல் நலம் சரி இல்லாமலும் போக காரணம் , மற்றும் உங்களுக்கு வாழ்வில் நல்ல நிலை மற்றும் பணம் செழிக்கப்  போகிறது என்றவுடன் அதைப்பற்றியே நினைப்போம் அதையும் பெறுவோம் , இதற்கும் ஜோஸ்யரின் சக்தி காரணம் அல்ல எல்லாமே எண்ணங்கள் தான்,

இதை அறிந்தால் நாம் ஜோசியம் மற்றும் சாமியார்களை பார்க்காமலே சிறப்பாக வாழ முடியும் , ஆனால் ஆழ்மனதில் சரியான எண்ணங்களை  புகுத்தவேண்டும். அதனால் முடிந்தவரை ஒருவருக்கு அவரின் பலவீனத்தை பற்றியே பேசாமல் பலத்தை பற்றி பேசுங்கள் உன்னால் முடியும் நீ நிச்சயமாக வெல்வாய் , படிப்பில் சாதிப்பாய் என்று கூறிப்பாருங்கள் அவர்களுக்கு இது வெற்றியை பெற்றுத்தரும்.

அவ்வளவு தான் நண்பர்களே, ஆழ்மனம் ரகசியம் அறிந்து இதை எப்படி பயன்படுத்துவது என்று இப்போது தெரியும் எனவே சரியாக பயன்படுத்துங்கள்.

இந்த விஷயத்தை பற்றி உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தில் உள்ளவங்க கிட்ட பேசுங்க எல்லாருக்குமே உதவியாக இருக்கும்.

நன்றி
--------------------------------------------------

Post a Comment

Previous Post Next Post