படைத்தவனின் துணை இருக்க அடுத்தவனின் துணை எதற்கு 


வணக்கம் நண்பர்களே ,

நம்ம எல்லாருக்குமே ஒரு செயலை செய்யும்போது அல்லது இந்த வாழ்க்கையில் எதையாவது சாதிக்கணும்-னு தோணும்போது இன்னொரு விஷயம் கூடவே தோணும் அதுதான் அடுத்தவரின் உதவி  அதாவது மற்றவரை எதிர்பார்ப்பது அல்லது பணம், இது இருந்தால் நான் நிச்சயமாக சாதிப்பேன் எனக்கு யாராவது உதவி செய்யணும் இப்படி மற்றவர்களை எதிர்பார்த்தே காலம் போனதுதான் மிச்சம் 

ஆனால் அப்படி இல்லாமல் நாமாக முன்வந்து ஒரு செயலை செய்யவேண்டும் , ஒரு விஷயத்தை சாதிக்க முதலில் தயாராக இருக்கவேண்டியது நாம் தான் , அது எதுவாக இருக்கட்டும் , தொழில் , படிப்பு ,ஆன்மீகம் மற்ற எதுவாக இருந்தாலும் சரி நாம்  தயாரா இல்லனா மற்றவர்கள் மற்றும் பணம் இருந்தாலும் நம்மால் ஜெயிக்கமுடியாது. இது இருந்தா நான் நிச்சயம் ஜெயிப்பேன் என்று சொல்வதெல்லாம் சும்மா ஒரு காரணம் தான் அதற்கு பதிலாக இப்ப என்ன இருக்கோ நாம்  எங்க இருக்குமோ அதைவைத்து எதையும் தொடங்க வேண்டும் , அதற்கப்பறம் நீங்க எதை ஆசைப்படுறீங்களோ அது கிடைக்கும் அதாவது மேலும் முன்னேற பணம்,  அடுத்தவரின் உதவி இப்படி எதுனாலும்.

அதேமாதிரி மற்றவர்களை எதிர்பாக்குறவங்க ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும் முதலில் நாம் வெற்றிபெற மற்றவர்களை எதிர்பார்க்கவேண்டிய அவசியமே இல்லை , நமக்கு அசிங்கம் , அவமானம்  என்னை மதிக்கல,  இப்படி எல்லாமே வருவதற்கு காரணம் யாரையும் எதிர்பார்ப்பது தான் , அப்படி இருக்கவேண்டிய அவசியமில்லை நமக்குள்ளே ஒரு சக்தி இருக்கு அது எப்போதுமே நம்மகூடத்தான் இருக்கு அதை வைத்து எதையும் சாதிக்கலாம் அந்த சக்தியை பயன்படுத்துங்கள் , அந்த சக்தி நம்மிடம் எதிர்பார்ப்பது நாம்  சோம்பேறியாக இருந்து மற்றவர்களை எதிர்பார்க்கக்கூடாது என்பதைத்தான் அதாவது எதையாவது செய்ய காரணம் சொல்லி காலத்தை கழிக்கக்கூடாது என்பது தான் , நாமாக முன்வந்து செயல்பட்டால் அந்த சக்தி நமக்கு மற்றதை  நம்மகூடவே இருந்து செய்யும் . அதை புரிந்துகொள்ளுங்கள்.

யாரும் இல்ல-னு எப்பவும் சொல்லாதீங்க உங்ககூட படைத்த பரம்பொருள் இருக்கு அதை உணர்ந்தாலே போதும் யாரையும் நாம் எதிர்பார்க்கமாட்டோம், எது வேணுமோ அதை அந்த சக்தி நமக்கு கொடுக்கும், அதான் சொல்லுவாங்க 

படைத்தவனின் துணை இருக்க அடுத்தவனின் துணை எதற்கு 

இது முற்றிலும் உண்மைதான் , இப்ப இந்த நிமிடம் இந்த நொடி நாம் அந்த சக்திகூட தான் இருக்கோம் அது இல்லனா நாம்  இங்க இல்லை .


அதேமாதுரிநாம்  மற்றவர்களை துணைக்கு வைப்பதற்கு முன்னாடி பரம்பொருளை தான் துணையாக வைக்கவேண்டும் , அதை உணர்ந்து நான் பரம்பொருள் துணைகொண்டு இந்த செயலை செய்கிறேன் நான் நிச்சயம் வெல்வேன் என்ற ஒரு வெறி வரணும் . இப்படி ஒரு அற்புத சக்தியுடன் இருக்கும் நாம் அதை உணர்ந்து எதையும் சாதிக்க தயாரா இருக்கனும் . அதைவிட்டுட்டு யாரும் இல்லை,  யாரும் இல்லை,  என்னை யாரும் மதிக்கல , வீட்ல என்னை மட்டும் தனியாக விட்டுட்டாங்க , அதேபோல நான் தனியாக ஏங்குகிறேன் , நான் வாழ்க்கையை வெறுத்து தவறான முடிவு எடுக்கப்போறேன் என்றால் அது உன்னை படைத்த அந்த பரம்பொருளுக்கு தான் வேதனையை கொடுக்கும் என்பதை மறக்கவேண்டாம்.

நாம் எல்லாருமே அற்புத சக்தியின் அம்சங்கள் அதை உணர்ந்து கொண்டு , 
முடிந்தவரை ஒரு சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்துட்டு போவோம்.

இந்த பதிவை யாருமே இல்லை மற்றும் வாழ்க்கையில் ஜெயிக்கணும்னு லட்சியத்தோடு இருக்கிற உங்க நண்பர்களுக்கு பகிருங்கள் அவங்களுக்கு உதவியாக இருக்கும் .நன்றி .

------------------------------------

Post a Comment

Previous Post Next Post