மனம் அமைதியடைய பதஞ்சலி மகரிஷி

                                        சொல்லும் அருமையான 4   வழிகள் 


வணக்கம் நண்பர்களே ,

இந்த காலத்தில் மனம் அமைதி பெறாமல் தான் அனைவருமே படாதபாடுபடுகிறோம் , அப்படி இருக்கும் மக்களுக்கு 
மனம் அமைதி அடைய நான்கு வழிகள் இருப்பதாக பதஞ்சலி முனிவர் தெரிவிக்கிறார் , ஏதோ யோக பயிற்சியாக இருக்கப்போகிறது என்ற அச்சம் வேண்டாம் , நாம் வாழும் இந்த வாழ்க்கையில் எளிமையாக பின்பற்றும்படியாக தான் இருக்கிறது அது என்னவென்று இந்த பதிவில் பார்ப்போம் வாங்க.இது எல்லாமே ஆன்மீகத்தில் பயிற்சி முறை தெரியாமல் இருக்கும் நபர்களுக்கு தான் , ஆன்மீக ஈடுபாடு கொண்டவர்கள் தியானம் , ஜபம் செய்தால் மனம் கட்டுப்படுவது உறுதி 

1) மகிழ்ச்சியோடு இருக்கும் நபர்களை நாம் நண்பனாக்கிக்கொள்ளவேண்டும் 

2) மகிழ்ச்சி அடையாத மக்களிடம் இரக்கம் காட்டவேண்டும் 

3) தர்ம வழியில் நடப்பவர்களை நம்முடன் வைத்துக்கொள்ளவேண்டும் 

4) தீய எண்ணம் கொண்டவர்களை நமது வாழ்க்கைப் பாதையில் வராமல் ஒதுக்கவேண்டும்.அதாவது பொறாமை என்ற குணம் ஒன்றை மட்டும் ஒதுக்கிவிட்டால் நாம் மகிழ்ச்சியாக இருக்கலாம் ,நம்மை விட வசதியானவர்களை கண்டால் நமக்குப் பொறாமை ஏற்படும், அதனால் நமது மன அமைதியை குலைக்கும் , மகிழ்ச்சியை ஒழிக்கும் , அது போன்ற நேரத்தில் நாம் அனைத்து மனிதரையும் வெறுப்போம் , இதற்கு மாறாக பொறாமை படும் நபர்களிடம் நட்போடு இருந்தால் , நம்மை பற்றி நமக்கே நல்ல எண்ணங்கள் உருவாகும் இதனால் மகிழ்ச்சி வந்து மனம் அமைதி அடையும்.


அதேபோல நாம் நல்ல நிலையில் இருக்கும் போது நம்மை பார்த்து பொறாமை படும் மக்களிடம் அதை பற்றி அலட்டிக்கொள்ளாமல் அவர்களுடன் நட்போடு பழகினால் அவரால் நமக்கு தீங்கு வராது இதனாலும் நமது மன அமைதி காப்பாற்றப்படும்.

அடுத்து துன்பப்படும் மக்களிடம் மன அமைதி இருக்காது எனவே நாம் அவர்கள் மீது இரக்கம்காட்டவேண்டும் , அப்போது நமக்கு மன அமைதி கிடைக்கும் 

" பகைவனுக்கு இரங்குவாய் நன்னெஞ்சே " என்று பாடியவர்கள் முன்னோர்கள் அதாவது, அவர்கள் தங்கள் வாழ்வில் பெரும் அமைதியை உணர்ந்து தான் இந்த மாதிரியான உபதேசத்தை நமக்கு போதிக்குறாங்க. மனிதர்கள் மட்டுமல்ல  மற்ற உயிர்களையும் துன்பம் கண்டு இரங்குபவர்களை இந்த உலக மக்கள்  கடவுளாக எண்ணி கையெடுத்து கும்பிடுவார்கள் , பிற உயிர்களிடம் பரிவு காட்டும் ஒருவருக்கு தன் வாழ்வில் அமைதி கிடைப்பது உறுதி.

அடுத்து தர்மம் செய்யும் மக்களிடம் நாம் பழகும்போது நமக்கும் அதே எண்ணம் தோன்றும் " பூவோடு சேர்ந்து நாரும் மணம் பெரும் " இதான் உண்மை, பிறருக்கு உதவும் எண்ணம் இருந்தாலே அமைதி தானாக குடிகொள்ளும்.  

கடைசியாக நம்மை சுற்றி தீய எண்ணம் கொண்ட நபர்கள் எப்போதும்  இருப்பார்கள் அவர்களிடம் சேர்ந்தால் வீண் வாதம் , வெறுப்பு , மகிழ்ச்சி இல்லாமல் போவது இப்படி நாமாக நமது அமைதியை இழப்போம் , முடிந்தவரை நட்போடு இருந்துபாருங்கள் அவர்கள் மாறவே இல்லையென்றால் நாம் விலகி செல்வதுதான் சிறந்த ஒன்று. பிறருக்கு கெடுதல் செய்யும் ஒருவரிடம் பழகாமல் இருப்பதே மேல் தான்.


இந்த நான்கு விசயமும் நாம் அன்றாடம் சந்திக்கும் மக்களிடம் இருக்கும் எனவே அதை பார்த்து பழகிக்கொள்ளுங்கள் , ஒருவரின் பழக்கவழக்கத்தை பொறுத்தே ஒருவரின் வாழ்க்கை , அவரின் அமைதி அமைகிறது என்பதால் தான் பதஞ்சலி முனிவர் இந்த விஷயங்களை கூறுகிறார் இதை கடைபிடிப்போம் மனம் அமைதியடைந்து நிம்மதியாக வாழ்வோம்.


இந்த பதிவை முடிந்தவரை உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள் அனைவர்க்கும் உதவியாக இருக்கும்.

நன்றி .


Post a Comment

Previous Post Next Post