விளக்கு தியானத்தின் நன்மைகள் 
வணக்கம் நண்பர்களே !


இந்த பயிற்சி எப்படி செய்ய வேண்டும் ? :

இதன் மற்றொரு பெயர் டிரடகா இது ஒரு யோகா கலை . இது உங்கள் கண்களை அழகுடனும் பளபளவென்று  வைக்கும் . இது கண்களுக்கான ஒரு சிறந்த பயிற்சி .

இந்த டிரடகா தான் விளக்கு தியானம் என்கிறோம். 


இருட்டில் ஒரு விளக்கின் முன்னால்  தியான கோலத்தில் சற்று தள்ளி  அமர வேண்டும் .

பின் ஒரு 10 நிமிடம் உற்று நோக்க வேண்டும் . கண்கள் இமைக்க கூடாது.

சாதாரணமாக பார்த்தல் போதும் இதற்காக stress பண்ண வேண்டாம் .

இதை மூன்று தடவை திரும்பி திரும்பிச்செய்யுங்கள் . பிறகு ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள் . (relax பண்ணிக்கோங்க)  

இந்த பயிற்சி தினமும் அதிகாலை 4 டு 6 மணி மற்றும்சாயங்காலம்  5 டு 6 மணி அளவில் தினமும் செய்து வாருங்கள் . அப்பொழுது தான் பலன் தரும் .

ஆரம்பத்தில் கண்களில் நீர்பெருகும் சற்று கடினமாக இருக்கும் . 

இறைவன் மீது உங்கள் மனதை வைத்து அந்த இறைவனாக தீபச்சுடரை பாருங்கள். அப்பொழுது தான் இந்த தியானத்தின் மகிமையை உணர்வீர்கள் .

இன்னும் சொல்லப்போனால் 

இந்த பயிற்சி , கண்ககளில் உள்ள அழுக்குகளை நீக்கி , இரத்த ஓட்டத்தை சீர் செய்யும் . இதனால் கண்களுக்கு ரத்தஓட்டம் அதிகரித்து தேங்கி இருக்கும் கெட்ட ரத்தத்தை நீக்கி தூய oxygen கொண்ட ரத்தத்தை கண்களுக்கு தரும் . 

இதனால் கண்கள் பளிச்சென்று இருக்கும் . மேலும் கண்களில் உள்ள எரிச்சல் , சூடு , கட்டிகள் போன்ற சீரற்ற தன்மையை சீர் செய்யும் .

 தெளிவான கண் பார்வை கிடைக்கும் .

மேலும் பயிற்சி செய்யும் பொழுது கண்களையும் நம்முடைய ( aura ) சக்தி உடலையும் தூய்மைப்படுத்தும். 
இதனால் உங்களுக்கு அமைதி மற்றும் தெளிவு பற்றிய ஆழமான உணர்வுகளை உங்களுக்கு வழங்குகிறது . 

உங்களை தொடர்ந்து தொந்தரவு செய்யும் பிரச்சனைகளில் விடுபெற்று
புதிய ஒளியை நீங்கள் அனுபவிக்கலாம் .

நல்ல கவனமும் புத்தி கூர்மையும் ஏற்படும் .


நீங்கள் இருட்டில் விளக்கேற்றி சற்று நேரம் உற்று நோக்குவதன் மூலம் உங்களது கண் விளக்கை தவிர வேறு எங்கும் பார்க்காது . இதனால் , கவனச்சிதரல் ஏற்படாமல் ஒரே நோக்கமாக விளக்கை உற்று நோக்கியே இருப்பிங்க  .


மேலும் படிக்கவும்:-

தியானம் செய்வதால் கிடைக்கும் பல நன்மைகள்

தியானத்தில் வரும் தடைகளை நீக்குவது எப்படி


இதனால் உங்களது எண்ணங்கள் அடங்கி இருப்பதை நீங்கள் உணரலாம் ,

உங்கள் முழு கவனனமும் விளக்கை தவிற வேறு எதிலும் இருக்காது . மனம் அமைதி ஏற்படும். ஆழ்மனம் தூண்டும் விதமாக இது பலன் தரும் . 

உங்கள் ஆழ் மனதின் சக்தி அதிகரிக்கும் . இதனால் நீங்கள் மௌனத்தில் இருந்தபடி அனைத்தையும் அடைவீர்கள் .

இதை நீங்கள் தினம் செய்து வந்தால் நாளடைவில் இந்த கவனம் வெளியிலும் பரவி நீங்கள் வீட்டிலும் , மற்றும் வேலை செய்யும் இடத்திலும் உங்களால் கவனசிதறல் ஏற்படாமல் காரியத்தை கச்சிதமாக  செய்து முடிக்கமுடியும் .  

ஆற்றலை புதுப்பிக்கிறது .


ஒரு தடவை நம் ஆரா சக்தி உடல் சுத்திகரிக்கப்பட்டுவிட்டால் , நமது கண் பார்வையின் சக்தி அதிகரிக்கும் தன்மையை நாம் உணர்வோம் . அதாவது நமது கண்களில் தெய்வீக பார்வை பொருந்திருக்கும் .  

இதன் விளைவாக , நம்முடைய தன்னம்பிக்கை உயரும் . நாம் முன்பை விட இப்போது பார்க்கும் விதம் அனைத்தையுமே வித்யாசமாக பார்க்கத்தொடங்குவோம் . ஒரு ஆழ்ந்த மனநிலை உருவாகும் ( ஆழ்மனதின் சக்தி ). மனப்பக்குவம் , மனபலம் அதிகரிக்கும் .

மற்றும் நாம் நமக்கு பிடித்த இலட்சியத்தை எந்த தயக்கமும் இல்லாமல் செய்ய தொடங்குவோம் . இதனால் உங்களுக்கு உங்களது திறமை மற்றும் ஆற்றல் மீதும் எந்த சந்தேகமும் வராது, தோற்றுவிடுவோமோ என்ற பயமும் இருக்காது .

ஒரு புதிய உற்சாகத்திலே எப்போதும் இருப்போம் .

மிகவும் எளிமையான மற்றும் பல நன்மைகள் உள்ள தியான பயிற்சி எனவே தினமும் பண்ணுங்கள்


நன்றி 

Post a Comment

Previous Post Next Post