காமத்தை எதிர்த்து போரிட உதவும் கருவிகள் 


வணக்கம் நண்பர்களே ,

காமம் என்னும் அரக்கனை அழிக்க விரும்பும் ஒருவன் சிலவற்றை கடைபிடிக்கவேண்டும் என்று ஒரு மஹான் சொல்லுகிறார் , அது உணவுமுறைகள் மற்றும் சில பயிற்சிகள் , உணவுமுறை என்றதும் பயம்வேண்டாம் நாம் தினமும் பயன்படுத்தும் உணவு முறைதான் அது ,சரி வாங்க அது என்னவென்று இந்த வீடியோ பதிவில் பார்ப்போம்.காமம் மிக ஆற்றல் வாய்ந்த ஒரு ஈர்ப்பு சக்தி , இந்த உலகமே பொய் என்று வேதாந்தம் கூறுகிறது , ஆனால் காமம் கண்டிப்பாக பொய்யல்ல உண்மையில் காமமே மாயையான இந்த உலகத்தை உண்மையானது போல தோன்றச்செய்கிறது . காம இன்பம் அற்புதமானது , ஆனால் அது சொற்ப நேரத்தில் மறைந்துவிடும் , இருந்தாலும் நம்முடைய மனமானது அதனால் மயக்கப்பட்டு அதன் பிடியில் மாட்டியுள்ளது.

காமம் மனிதனை சித்திரவதை செய்கிறது , ஏமாற்றுகிறது, அவனை அடிமைப்படுத்துகிறது , எல்லாவித பிரச்சனைகளையும் , தொந்தரவுகளையும் உருவாக்குகிறது , மனிதனுள் உள்ள எல்லா ஆற்றல்களையும் சக்தியையும் வடியச்செய்கிறது. ஆனால் காமம் தரும் இன்பம் வெறும் சொற்பநேரம் மட்டுமே.

போரில் ஒருவன் பலவிதமான ஆயுதங்களையும் தந்திரங்களையும் சூழ்நிலைக்கு ஏற்ப உபயோகிக்கவேண்டும் , அதுபோலவே காமம் என்ற அரக்கனுடன் போரிடும்போது நமக்கும் பல ஆயுதங்களும் , தந்திரங்களும் தேவை. அந்த ஆயுதங்கள் எவையென்றால் 

யோகாசனம் , தினமும் இரண்டுமுறை குளித்தல் , மிதமான உணவு , மிதமான உடற்பயிற்சி , மிதமான உறக்கம் , தியானம் , ஜெபம் , பிரார்த்தனை , புனித நூல்களை படிப்பது.  இவைதான் அந்த ஆயுதங்கள் . 
இவற்றை கடைபிடிக்காமல் இந்த போரில் நம்மால் ஒருபோதும் வெல்லமுடியாது கடைசிவரைக்கும் காமத்துக்கு மனிதன் அடிமையாக வேண்டியதுதான் .


அதேமாதிரி மிதமான உணவு என்றால் மிகவும் குறைவாக உண்பதல்ல , பெருந்தீனி போன்று வயிற்றை அடைத்துக்கொள்ளக்கூடாது அதை உணர்ந்து சரியாக சாப்பிடவேண்டும். சத்துள்ள சரியான அளவு சாப்பாடு காமத்தை சரியாக கட்டுப்படுத்துகிறது. வலிமையான உடலை பேணுவதற்கு தேவையான உணவை  நீயே கண்டுபிடித்துக் கொள்ளவேண்டும் . 

மேலும் காரமான உணர்ச்சிகளை தூண்டும் உணவு வகைகளை தவிர்க்கவேண்டும் , உப்பு , இனிப்பு , புளிப்பு , மசாலா போன்றவற்றை முடிந்தவரை குறைந்துகொள்ளவேண்டும். நிறைய கோவில் செல்லும்போது நமக்கு சாம்பார் சாதம் போடுவார்கள் , இது ஒரு சிறந்த உணவுமுறை. அதுபோல காமத்தை கட்டுப்படுத்த விரும்பும் ஒருவன் குறைந்தபட்சம் ஒரு மாதம் மேலே சொன்ன உணவு முறைகளை சரியாக கடைபிடித்து பார்த்தால் காமத்தின் அளவு குறைந்திருப்பதை உணரமுடியும், 


மேலும் படிக்கவும்:-

மனதை வலிமைப்படுத்த இரண்டு வழிமுறைகள்

மனதை கட்டுப்படுத்துவது எப்படி ?

எந்த நேரத்தில் தியானம் செய்தால் மனம் அடங்கும் ? 


இந்த உணவுமுறைகளை கடைபிடிப்பதோடு , அனுதினமும் தியானம் , மிதமான உடற்பயிற்சி செய்வது மற்றும் காமத்தை வென்ற மஹான்களின் புத்தங்களை படிப்பது போன்றவை உங்களுக்கு மனதளவில் ஒரு ஊக்கத்தை கொடுக்கும்.

உண்மையாக உணவுமுறைக்கும் , காமத்திற்கும் நிறைய தொடர்புகள் இருக்கிறது அதிகம் சாப்பிட்டு காமத்தை கட்டுப்படுத்தவேண்டும் , என்னை பாடுபடுத்துகிறது என்றால் ஒன்றும் செய்யமுடியாது எனவே உணவு கட்டுப்பாடு அவசியம்.

நன்றி நண்பர்களே ,

உறுதியாக இது மிகவும் எளிமையான அருமையான வழிமுறைதான்  இதை கடைபிடியுங்கள் மற்றும் ஏற்கனவே காமத்தை கட்டுப்படுத்தும் வீடியோ பதிவு செய்துள்ளோம் ,அதையும் பாருங்க உங்களுக்கு மேலும் உதவியாக இருக்கும்.

இந்த விஷயத்தை பற்றியும் சரியான உணவு முறை பற்றியும் உங்கள் நண்பர்களிடம் பேசுங்கள் அவங்களுக்கு உதவியாக இருக்கும் 

நன்றி 

----------------------------------------------------

Post a Comment

Previous Post Next Post