வீரியம் என்றால் என்ன ?


 வணக்கம் நண்பர்களே ,


வீரியமே ஒவ்வொரு இளைஞனின் சொத்து மற்றும் 
வீரியம் என்றால் என்ன ? இந்த வீரியத்தை கட்டுப்படுத்தினால் இளைஞர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றித்தான் இந்த பதிவில் பார்க்கப்போறோம் சரி வாங்க பார்ப்போம் .முதலில் வீரியம் என்பது சம்ஸ்கிருத வார்த்தை , அதை தான் நாம் விந்து என்கிறோம் மற்றும் விந்து என்றால் அது உடல் சம்பந்தமான ஒரு சொல்லாகிப்போனது ஆனால் அதை அப்படி பார்க்காமல் பேராற்றல் என்றே பார்க்கவேண்டும். விந்து என்ற வார்த்தை மனித உடலில் சுரப்பினால் சுரக்கப்படும் இனப்பெருக்க திரவத்தையே குறிக்கிறது. ஆனால் வீரியம் என்பது இனப்பெருக்கத்தோடு முடிந்துவிடவில்லை அந்த சுரப்பினால் உருவாக்கப்படும் பேராற்றல் தான் வீரியம் , எனவே தான் விந்து இனப்பெருக்கத்திற்கு மட்டும் உபயோகிக்காமல் பல நல்ல விசயத்திற்கு பயன்படுத்தவேண்டும் என்று முன்னோர்கள் சொன்னதன் அர்த்தம்.


வீரியம் இரண்டு நிலைகளை குறிக்கிறது ஒன்று ஆண்மையையும் , ஆன்மீகத்தையும் அளிக்கிறது , இரண்டாவது நிலைதான் இனப்பெருக்கத்திற்குக் காரணமாகிறது.


அதேபோல காம எண்ணம் மனதில் எழும்போது அது இனப்பெருக்க அமைப்பில் உணர்ச்சிகளைத் தூண்டி விந்தணுக்களையும் திரவத்தையும் உருவாக்குகிறது , அப்போது வீரியம் என்ற பேராற்றல் வெளிப்படையாக வெளியேறுகிறது , அதனால் தான் உணர்ச்சிகள் தூண்டப்படாமலே தடுக்கவேண்டும் . ஒருமுறை உணர்ச்சி தூண்டினாலும் கூட அது  இனப்பெருக்க  நிலைக்கு போய்விடும்.


ஆனால் அதற்கு மாறாக மனமானது கற்புடன் இருக்கப்பயிற்சி அளிக்கப்பட்டால் , அதாவது காம எண்ணம் எழாதவாறு பார்த்துக்கொண்டால் வீரியம் என்ற அந்தப் பேராற்றல் தூய்மையான சூட்சம நிலையில் தக்கவைத்துக் கொள்ளப்படுகிறது . இந்த வீரியமே இளமையின் உண்மையான சொத்து மற்றும் மனிதனின் ஆக்கபூர்வமான திறமைகளை ஊட்டமளித்து வளர்க்கிறது  , இந்த வீரியமே இளைஞர்களுக்கு சக்தியை கொடுக்கிறது, அதான் ஒரு இளைஞன் சிறந்தவனாக வாழ்வில் வெற்றிபெற அவன் 25 வயது வரை கண்டிப்பாக வீரியத்தை பாதுகாக்கவேண்டும் என்று சொல்லி அந்த காலத்தில் மடங்களில் பயிற்சி தருவார்கள் அதை தான் இப்போதும் கடைபிடிக்கவேண்டும், நாம் நிறைய பதிவுகளில் சொல்லிருக்கோம் வீரியத்தை கட்டுப்படுத்தினால் நினைத்த எதையும் சாதிக்கமுடியும் என்று.


ஆனால் பொதுவாக மனிதன் இந்த வீரியத்தை இனப்பெருக்கத்திற்கு மட்டுமே உபயோகப்படுத்துகிறான் , ஆனால் பிரார்த்தனை , தியானம் , ஆழ்ந்த சிந்தனை , ஆன்மீக சாதனைகள் மூலம் இந்த ஆற்றலானது தக்கவைத்து மாற்றம் அளிக்கப்பட்டால் அது ஆன்மீக  சக்தியாக உருவெடுக்கிறது, நம் நாட்டில் ஆன்மீகத்தில் வெற்றி பெற்று மக்களுக்கு நல்லதை மட்டுமே செய்த முன்னோர்கள் இந்த சக்தியை ஆன்மீக போராட்டம் மற்றும் ஞான ஒளியைப் பெறுவதற்கு மட்டுமே பயன்படுத்தினார்கள்.


எனவே வீரியம் என்பது உயர்ந்த குறிக்கோளை அடைவதற்கும் , இனப்பெருக்கத்திற்கும் மனிதன் உபயோகப்படுத்தும் வேகமிக்க ஒரு சக்தி , ஆனால் இனப்பெருக்கத்திற்கு மட்டுமே உபயோகப்படுத்தினால் வீரியம் விந்து எனப்படும் , அப்படி செய்தால் அது இன்னொரு உடலை உருவாக்கும் வெறும் திரவம் மட்டுமே. இதை இனப்பெருக்கத்திற்கு மட்டுமே பயன்படுத்தாமல் ஆன்மீகத்திற்கும் பயன்படுத்தவேண்டும்.

வீரியத்தை கட்டுப்படுத்தும் ஒரு இளைஞனுக்கு படிப்பு , விளையாட்டு , உடல் வலிமை , மன வலிமை , செய்யும் வேலை இப்படி எதுவாக இருந்தாலும் நிச்சயம் வெற்றியே.


அவ்வளவுதான் நண்பர்களே,

இளைஞர்கள் இதை அறிந்து இது மட்டுமே உங்களின் சிறந்த சொத்து என்பதை உணர்ந்து சரியாக கடைபிடியுங்கள் உங்களின் வாழ்வு சிறப்பாக இருக்கும்.

இந்த பதிவை அனைத்து இளைஞர்களுக்கும் பகிருங்கள்


நன்றி . 

--------------------------------------------

1 Comments

  1. 25 வயதுக்கு மேல் வீரியத்தை கட்டுபடுத்தினால் ஒரு பயனும் இல்லையா

    ReplyDelete

Post a comment

Previous Post Next Post