பேய் இருக்கா ?  இல்லையா ?


வணக்கம் நண்பர்களே ,

இன்றைக்கு  நாம்  ஒரு சுவாரஸ்யமான விசயத்தை பற்றித்தான் பார்க்கப்போறோம் அதவாது உண்மையில் பேய் இருக்கா ? இல்லையா ? மற்றும் பேய் பிடித்தால் ஏன் வேப்பில்லையை வைத்து அடிக்கிறார்கள் என்றுதான் இந்த பதிவு சரி வாங்க பார்ப்போம்.முதலில் சுருக்கமான பதில் பேய் இருக்கு என்பது உண்மைதான், நல்ல சக்திகள் இருக்கும் என்ற போது தீய சக்திகள் இருப்பதும் உண்மை ஆனால் பேய் என்பது ஒருவரின் மனம் தான் ,அதாவது ஒருவர் ஒரு விசயத்தை நினைத்தே வாழ்ந்து அது மனதில் முழுவதுமாக நிறைந்திருக்கும் போது மரணம் ஏற்பட்டால் அந்த எண்ண ஓட்டங்கள் அந்த ஆசையை நிறைவேற்ற பார்க்கும் . மற்றும் அவர்களின் எண்ண அலைகள் அங்கேயே இருக்கும் , அதை தான் நாம் பேய் என்கிறோம் .மற்றும் அந்த எண்ணத்தை நிறைவேற்ற ஒரு உடல் தேவைப்படும்.

அதனால்  தான் மனதளவில் பலவீனமானவர்களை அது தாக்கும் , இதற்கான காரணம் என்னவென்றால் நமது உடலில் ( எஸ்டோபிளாசம் ) என்ற ரசாயனம் இருக்கும் , இது அதிகமாக இருந்தால் தெய்வீக சக்திகளும் , குறைவாக இருந்தால் தீய சக்திகளும் அண்டும் என்று சொல்வார்கள் . சமமாக இருந்தால் எந்த சக்தியும் அண்டாது , நம்மள பல பேருக்கு இது சமமாகத்தான் இருக்கும். நாம் தினசரி இறை வழிபாடு செய்வது , தியானம் , மந்திரம் செய்வதால் இந்த சக்தியை அதிகப்படுத்தலாம், அதனால் தெய்வீக சக்திகளே அதிகம் இருக்கும் 

அப்படியென்றால் ஒருவருக்கு பேய் பிடிப்பது என்பது உண்மையா என்று பார்த்தால் அது அனைவர்க்கும் பிடிக்காது . மனதளவில் பாதிக்கப்பட்டு வீட்டில் பிரச்சனை , கணவன் மனைவி பிரச்சனை , மன பாரம் , இந்த மாதிரி அதிகளவில் பாதிக்கப்பட்டவர்கள் தன்னை தானே தன்னுடைய செயல்களை மாற்றிக்கொள்வார்கள் மற்றும் ஏதோ ஒன்றையே நினைப்பதால் நாம் அவர்களை பேய் பிடித்திருக்கு என்போம் ஆனால் உண்மையில் அப்படி இருக்காது , மன அழுத்தத்தால் அவர்கள் பேச்சு , நடவடிக்கைகளை , மாற்றிக்கொள்வதால்  பேய் பிடித்தவர்கள் போல இருக்க காரணம்.
இதற்காக பயப்படவேண்டாம் இது வெறும் மனதளவில் பாதிப்புதானே தவிர வேறொன்றுமில்லை .

அதனால் மனதை எப்போதும் பலமாக வைத்தால் எந்த பிரச்சனையும் ஏற்படாது , இதனால் தான் முன்னோர்கள் நம்மை இறைவழிபாட்டில் செலுத்தினார்கள். 

இது மிகவும் முக்கியமான விஷயம் நமது யோக சாஸ்திரங்கள் சொல்கின்றன ஒருவரின் உடலில் அமானுஷ்ய சக்திகள் புகுந்தாலும் அது 10 முதல் 15 நிமிடம் வரை மட்டுமே உடலில் தங்கமுடியுமாம் 
மணிக்கணக்கில் பேய் ஆடுவதும் , சாமி ஆடுவதும் ,நடைமுறைக்கு சாத்தியமில்லாத விஷயங்கள் , இவைகளை ஒருவித மனநோய் என்றே சொல்லலாம். பேய் பிடித்திருக்கு என்று சொல்லுபவர்களில் ஆயிரத்தில் ஒருவருக்கு தான் உண்மையான பேய் பிடிக்க வாய்ப்புள்ளது.


அடுத்து இது போன்று மன பாதிப்பு கொண்டவர்களை வேப்பிலையால் அடிக்ககாரணம் என்னவென்றால் , வேப்பிலையை வைத்து மன பாதிப்பு உண்டான நபருக்கு மீண்டும் மீண்டும் சீராக தலையில் அடிக்கும்போது உடலுக்கு மிதமான மின்சார சக்திகள் ஏற்படும் , அதனால் அவர்களின் மனம் தெளிவுபெறுகிறது.  வேப்பிலைக்கு அந்த சக்தி இருக்கிறது இதை முன்னோர்கள் அறிந்து செய்தார்கள் , ஆனால் இப்போது பேய் விரட்டுபவர்களுக்கு அதை தெரியாமலே செய்கிறார்கள் இருந்தாலும் பலன் உள்ளதால் அதை செய்வது தவறில்லை.
அவ்வளவுதான் நண்பர்களே,

மனதை மட்டும் எப்போதும் பலமாக வைத்தாலே போதும் எந்த தீய சக்தியும் நம்மிடம் அண்டாது மற்றபடி பயப்படவேண்டிய அவசியமில்லை. 

இந்த பதிவை உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள் மற்றும் இந்த விசயத்தை பற்றி உங்கள் வீட்டில் உள்ளவங்க சொல்லுங்க.


நன்றி .

-------------------------------

Post a Comment

Previous Post Next Post