செய்யக்கூடாத ஒருசிலசெயல்கள் - சித்தர் பாடல் 


வணக்கம் நண்பர்களே,

ஒரு சில விஷயங்களை மனைவிடமும் சொல்லக்கூடாது என்று சித்தர் கொங்கண நாயனார் சொல்லுகிறார் அதுமட்டுமல்ல இன்னும் நாம் செய்யவேகூடாதே நிறைய விஷயங்கள் பற்றியும் அவருடைய பாடலில் அருமையாக கூறியுள்ளார் அதை பற்றித்தான் இந்த பதிவில் பார்க்கபோறோம் சரி வாங்க பார்க்கலாம்,

பாடல் :-

ஏழை பனாதிக ளில்லையென் றாலவர்க்
கிருந்தா லன்னங கொடுக்க வேண்டும்;
நாளையென் றுசொல்ல லாகா தேயென்று

நான்மறை வேத முழங்குதடி


விளக்கம் :-

 ஏழை எளியவர்கள் , குருடர்கள் , கால் ஊனமுற்றோர்கள்  முதலிய இயலாதவர்கள் முடியாமல் இருக்கும்போது அவர்களை திட்டுவதும் தவறு அதேபோல நம்மிடம் இருக்கும் உணவை கொடுக்கவேண்டும் , நாளை தருகிறேன் என்று ஒருபோதும் கூறாதே, என்று நான்கு வேதங்களும் கூறுகின்றன.


பாடல் :-

பஞ்சை பனாதி யடியாதே யந்தப்
பாவந் தொலைய முடியாதே;
தஞ்சமென் றோரைக் கெடுக்கா தேயார்க்கும்
வஞ்சனை செய்ய நினையாதே


விளக்கம் :-

வறுமையில் வாடுபவர்கள் , ஆதரவு அற்றவர்களை அடிக்காதே, அப்படி செய்தால் அந்த பாவங்கள் ஒருபோதும் போகாது , அடைக்கலம் தேடி வருபவரை கெடுப்பதும் , யார்க்கும் வஞ்சம் செய்வதும் , ஏன் நினைப்பதும் கூடாது என்கிறார். இது எல்லாமே பெரிய பாவத்தில் போய் தான் முடியும்.


பாடல் :-

கண்டதுங் கேட்டதுஞ் சொல்லாதே கண்ணில்
காணாத வுத்தரம் விள்ளாதே;
பெண்டாட்டிக் குற்றது சொல்லாதே பெற்ற
பிள்ளைக் கிளப்பங் கொடுக்காதே
விளக்கம் :-

கண்ணால் பார்த்ததையும் , காதால் கேட்டதையும் மற்றவர்களிடம் கூறாதே , கண்ணில் பார்க்காத ஒன்றை தீர்ப்பாகவும் கூறாதே , உனக்கு நேர்ந்த அவமானத்தை மனைவிடமும் சொல்லாதே , அதேபோல தன் பிள்ளைகளை பெற்றோர்கள் தாங்களே இழிந்து பேசக்கூடாது. 


பாடல் :-

சிவன்ற னடியாரை வேதிய ரைச்சில
சீர்புல ஞானப் பெரியோரை
மவுன மாகவும் வையா தேயவர்
மனத்தை நோகவும் செய்யாதே

விளக்கம் :-

சிவபெருமானின் அடியார்கள் , சிறப்புக்குரிய புலமை பெற்ற பெரியோர்களை மனதளவிலும் கூட வையாதே , அவர்களின் மனம் புண்படும்படியாக எதையும் செய்யாதீர்கள்.


நன்றி நண்பர்களே,

சித்தர்கள் செய்யக்கூடாது என்று சொன்ன அந்த செயல்களை நாம் செய்யவேண்டாம் அப்படி மீறி செய்தால் அது பாவத்தில் தான் போய் முடியும் எனவே அதை சரி செய்வோம் , சித்தர்களின் ஆசியை பெற்று இறைவனிடம் சரணடைவோம்.

இதேபோல இன்னும் செய்யக்கூடாத விஷயங்களை பற்றியும் சித்தர் பாடல் உள்ளது அதை அடுத்த பதிவில் பார்ப்போம் , 


நன்றி .

Post a Comment

Previous Post Next Post