நல்ல பழக்கமே வெற்றிக்கு ஆதாரம்வணக்கம் நண்பர்களே !


                                   ஒவ்வொரு வெற்றியாளருக்கும் ஒவ்வொரு தனி சிறப்பு உண்டு . அவர்கள் தங்களின் தனி திறமையை பயன்படுத்தி தேவையான வெற்றி கனியை அடைவார்கள்.

ஆனால், அனைத்து  வெற்றியாளர்களும் பின்பற்ற கூடிய பொதுவான பத்து பழக்கவழக்கங்கள் உண்டு , அதைவைத்து தான் தன்னுடைய தனித்துவத்தையும் , வெற்றிக்கான தகுதியும் வளர்த்துக்கொள்கின்றனர் . 

இதை நாமும் அறிந்து நம் கனவை அடைவோம் !!


                    

பொதுவாகவே , வெற்றி என்றால் சிலர் அவர்கள் இருக்கும் துறையை வைத்து முடிவு செய்வார்கள்  , அதாவது உதாரணமாக , விளையாட்டு துறையில் மற்ற வெற்றியாளரை போல நானும் சாதிக்கவேண்டும் என்று கருதுவர் . 

சிலரோ , அவர்களுக்கு பிடித்தமான விசயத்தை அடைவதே வெற்றியாக நினைப்பர் . சிலர் தன்னோட உடலை அழகாக  பராமரிப்பது , சிலருக்கு ஓவியம் , கல்வி , இப்படி உங்கள் கனவுகள் எதுவாக இருந்தாலும் இந்த பத்து
பழக்கவழக்கங்களை பின்பற்றினால் , கண்டிப்பாக உங்களால் எந்த வெற்றியாக இருந்தாலும் நிச்சயமாக அடையமுடியும் .  

சரி வெற்றியாளர்கள் எந்தெந்த பழக்கங்களை மேற்கொள்வார்கள்  என்று பார்ப்போம் ! ...

முதலில் ,

1. தன்னுடைய குறிக்கோளை தேர்வுசெய்வது  :

நிறைய பேருக்கு வெற்றியின் ஆசை கனவுகள் இருந்தாலும், ஆரம்பத்திலே என்ன செய்யவேண்டும் என்று தெரியாமல்  குழப்ப நிலையுடன் இருப்பர் , என்னதான் ஆசை இருந்தாலும் ஆரம்பம் சரியாக இருக்க வேண்டும் . இது மிகவும் அவசியமான ஒன்று .

இந்த விசயத்தில்  நீங்கள் ஆசை கனவுகளை சற்று தள்ளி வைத்துவிட்டு , முதலில் தன்னுடைய  லட்சியம் என்ன ? அடுத்து நாம் என்ன செய்யவேண்டும் ? எப்படி செய்யவேண்டும் ? என்று யோசிக்க வேண்டும் .

நாம் எந்த துறையில் படிக்கிறோம் அல்லது எதில் நாம்  ஆர்வமாக இருக்கிறோம் ? எதில் நாம் திறமையுடன் செயலாற்றுகிறோம் என்று சுயமாக தன்னைப்பற்றி ஆலோசித்து, பின் இவற்றில் நாம் எதில்  எளிதாக வெற்றியை அடையமுடியும் என்று யோசிக்க வேண்டும் .

 இவற்றில் உங்களுக்கு எது முழு நம்பிக்கையாக, என்னால் முடியும் என்று உறுதியாக நினைக்கிறிங்களோ அதை உங்கள் லட்சியமக வையுங்கள் . இதில் எந்த மாற்றமும் இருக்கக்கூடாது ... ஆகவே ஒரு தடவைக்கு பல தடவை யோசித்து முடிவெடுங்கள் . 

2.வெற்றியாளர்கள் தங்கள் லட்சியத்தின் மீது பொறுப்பு        ஏற்றுக்கொள்வார்கள் :

வெற்றியாளர்கள் தங்கள் லட்சியத்தின் மீது எந்த எதிர்பார்ப்பும் , ஆதாயமும் பார்க்காமல் ...தங்கள் லட்சியத்திற்கான வேலையயை மிகவும் பொறுப்புடன் செயல்பட தொடங்கிடுவர். அலட்சியம் என்ற வார்த்தைக்கே அவர்களிடத்தில் இடமில்லை .

அதில் அவர்களுக்கு ஆரம்பத்தில் பல தோல்விகள், ஏமாற்றங்கள் பல துயரங்கள், என்று பல  வாட்டி வதைத்தாலும் , மற்றவர்களை குறைகூறுவதை விட்டுட்டு , அதிலிருந்து  என்ன பாடம் கற்றுக்கொண்டோம் என்று சிந்திப்பார்கள் , அதுமட்டுமின்றி  மறுபடியும் அந்த தவறை செய்யாமல் பார்த்துக்கொள்வர். 

மற்றும் தன்  துன்பகாலத்தை நினைத்து  வருந்தாமல் தன்  முயற்சியை தொடர்ந்து மேற்கொள்வார்கள்  , மீண்டும் மீண்டும் முயற்சிப்பதை பழக்கமாக வைத்துகொள்வார்கள் 

மறுபடியும் அவர்களுக்கு துன்பம் வந்தால் அதனை எதிர்கொள்ள தயாராக இருப்பர் . மேலும் இவற்றிலிருந்து என்ன கற்றுக்கொள்ளப்போகிறோம் என்பதற்காகவே தன் தோல்விகளை ஆர்வமுடன் எதிர்கொள்வார்கள் .

 பிறகு தன் தோல்விகளின் மீது விரைவிலேயே விலகி , இந்த நிகழ்காலத்தில் சரியாக தன்  வேலையை செய்து, பின் எதிர்காலத்தை பற்றி சிந்திக்க தொடங்கிடுவர். 

எப்போதும் , நான் எப்படி செய்ய முடியும் ? என்னால்  முடியுமா? என்று அவநம்பிக்கையை  வளர்க்க விடாமல் , மற்றும் கடந்தகால நிகழ்வுகள்  மனதை செல்ல விடாமல் மனம்  முழுவதும் தன் லட்சியத்தின் மீதே இருக்கும் 

மற்றும் எப்போதும் தன்  தோல்விக்கான காரணங்களை  சொல்லி தப்பிக்கவேண்டாம் , அதனால் ஆகாத காரியம் ஒன்றும் இல்லை ...வீணாக காரணங்களை கூறாமல் காரணங்களை  உடைத்தெறிந்து , முன்னேறுவது நல்லது .

ஒன்றை நினைவில் வையுங்கள் . எல்லாரும் பல காரணங்களை கூறி , மற்றவரின் மீது பழி போட்டு கொண்டே தன்னையும் மற்றவரையும் வாழவிடாமல் ( முன்னேறவிடாமல் ) செய்வாங்க . ஆகையால்  நீங்கள்  அதெல்லாம் கண்டுகொள்ளாமல் , என்ன நடந்தாலும் இப்போ என்ன செய்யணும் என்று  நல்லா யோசித்து முடிவெடுங்க, தொடர்ந்து வெற்றியை நோக்கி செல்லுங்கள் ! .

3. வெற்றியாளர்கள் தன்  சுய ஒழுக்கத்தில் சிறப்பாக இருப்பார்கள் 


ஒழுக்கம் என்பது வெற்றிகரமான அனைத்து  மக்களின் பலமான பண்பாகும் .

கடினமாக தன்  லட்சித்திற்காக  உழைப்பவர்களுக்கு ஒழுக்கத்தின் முக்கியத்துவம் தெரியும் . 

நீங்கள் தனியாக இருக்கும்போது  சமூக ஊடகங்கள் வழியாக செல்ல தேர்வு செய்வீர்கள் . பிறகு அதில் சில வீடியோ பதிவை பார்ப்பீர்கள் அல்லது ஏதேனும் செய்வீர்கள். கொஞ்சம் யோசிங்க அதில் ஏதாவது உங்க எதிர்காலத்திற்கு பயன் தருமா ? என்று .

அதாவது வீட்டில் தனியாக இருக்கும்போது அல்லது யாரும் இல்லாத அந்த அமைதியான நேரத்தில் தான்,  நம்மால் நமக்குரிய சுயத்தையம் ஒழுக்கத்தையும் வளர்த்துக்கொள்ளமுடியும் .


உங்களிடம் தெளிவான குறிக்கோள்களும் அர்த்தமுள்ள அறிவும் இருந்தால் தேவையில்லாத விசயத்தின் மீது உங்களுக்கு கவனம் இருக்காது ....மற்றும் இவை இருந்தாலே போதும் ஒழுக்கம் வைத்திருப்பது மிகவும் எளிதான ஒன்று தான் .

அர்த்தமற்ற கவனச்சிதறல்களை விட  ஒழுக்கம் மிக முக்கியமாக ஒன்றாகும்.

நேரத்திற்கு அதிகாலையில் எழுந்து குளித்து , சிறிது நேரம் தியானம் செய்வதன் மூலம் மனச்சிதறல்களை கட்டுப்படுத்தமுடியும் . பிறகு நீங்கள் உங்கள் லட்சித்திற்கான வேலையை செய்யலாம் .

அதிகாலையில் எந்த வேலையை செய்தாலும் அதில் வெற்றியே கிடைக்கும் . ஏனென்றால் அப்பொழுது தான் தூங்கி எழுந்து நமது மூளை எண்ணங்களின்றி சுத்தமாகவும் புத்துணர்ச்சியோடு  இருக்கும் .... இந்த நேரத்தில் தியானம் யோகம் செய்தால் ஆன்மீக நண்பர்களுக்கு வெற்றியை தரும் . மற்ற நபர்கள் சிறிதளவில் தினமும் அதிகாலை  தியானம் செய்து வந்தால் , மூளையின் ஞாபக சக்தி திறன் வளரும் மற்றும் இதனால் நீங்கள் திறமையுடன் செயலாற்ற தொடங்குவீர்கள் .அதை  நீங்களே சுயமாக உணரலாம் .

முதலில் , கடமையை செய்துவிட்டு பிறகு ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள் அதாவது கடமை செய்யாமலே  ஓய்வெடுப்பது என்பது சோம்பேறித்தனம் என்று கூறுவார்கள் . இப்படி இருந்தால் உங்களால் ஒன்றும் சாதிக்க முடியாது என்று தெரிந்து கொள்ளுங்கள் . 


4. தன் முன்னேற்றத்திற்காக வெறித்தனமாக பாடுபடுவார்கள்  :

முதலில் , உன் லட்சியத்திற்காக உன்னையும் உன் மனதையும் தயார்படுத்திக்கொள்ளவேண்டும் . உன் மீது நம்பிக்கையும் லட்சியத்தின் மீது ஆர்வமும் அதை அடைய வெறித்தனமான வைராக்கியத்தை உன் ஆழ்மனதில் பதிவிடுவது மிகவும் சிறந்தது .

நீங்கள் செய்யும் எல்லா விசயத்திலும் உன் மனம் எப்போதும் இலட்சியத்தை பற்றிய சிந்தனை இருக்கவேண்டும் இதுவே உன் ஆழ்மனதை தூண்டிவிட்டு உன்னை லட்சியத்தின் வழியில் செல்ல வைக்கும் .


இலட்சியத்தை அடையும் வரை இந்த முயற்சியே போதும் என்று உங்களுக்கு நீங்களே திருப்தி கொள்ளவேண்டாம் . லட்சியத்திற்காக இது போன்று திருப்தி அடையாமல் வெறித்தனமாக செயல்படுவது தவறில்லை .

புதிய விசயங்களை கற்றுக்கொள்ள உங்கள் மனதையும் அறிவையும்  திறந்திடுங்கள் மற்றும் வெற்றியாளர்களின் ஆடியோ , புத்தகங்கள் மற்றும் வாசிப்பு மூலம் உங்கள் மனதை பற்றிக்கொள்ளுங்கள் .

அதுமட்டுமின்றி நீங்கள் எந்த அளவிற்கு கற்றுக்கொள்கிறீர்களோ அந்த அளவிற்கு சம்பாதிப்பீர்கள். அது பணம் மட்டும் இல்லாமல், சமூகத்தில் நல்ல பெயர், மற்றும் சுய அறிவும் வளரும்.

நம் லட்சியத்திற்காக , நாம் தயாராக இருக்க வேண்டும்,

எந்த தகுதியும் வளர்த்துக்கொள்ளாமல் நம்மால் எதுவும் சாதிக்க முடியாது .

ஆகவே , நம் லட்சியத்திற்கு  ஏற்றாற்போல நாம் புதிய திறமைகளை வளர்த்துக்கொள்வது , புது புது விசயங்களை தெரிந்துகொள்ளவேண்டும்

மற்றும் மனரீதியாக துணிச்சலோடு தைரியமாக இருக்கவேண்டும் எந்த நேரத்திலும் நம்மீது நாமே சந்தேகபடக் கூடாது ...முழு நம்பிக்கையோடு செயல்படவேண்டும் .எந்த முயற்சியும் உன்னை கைவிட்டாலும் , உங்கள் மனதை நீங்கள் கைவிடக்கூடாது . முழு நம்பிக்கையோடு மீண்டும் முயற்சியில் தைரியமாக ஈடுபட வேண்டும் .

5.அவர்கள் நிறையவே படித்துக்கொண்டே இருப்பார்கள் : .( புதுசு புதுசா கற்றுக்கொள்வார்கள் .)


படிக்கும் பழக்கம் என்பது அனைத்து வெற்றியார்களின் பழக்கமாகும் . அவர்கள் சலிப்பின்றி ஆர்வமுடன் புதிய விசயத்தை  கற்றுக்கொண்டு இருப்பார்கள் . அவர்கள் உள்ளத்தில்  சலிப்பிற்கு இடமில்லை.

எப்போதுமே வெற்றியாளர்கள் தன்னை தனிமையில் இருக்க அதாவது தனிமைப்படுத்திக்கொள்ள  விரும்புவார்கள் .  ஆழ்ந்த அமைதியுடன் மனதை எதிலும்  செலுத்தவிடாமல் அமைதியுடன் இருக்கவே விரும்புவார்கள்.

ஏனென்றால், இந்த நிலையில் தான் அவர்களால் புதிய புதிய வழிமுறைகளும் , சிந்தனைகளும் மேற்கொள்வார்கள் மற்றும் அவர்கள் மற்றவரின் பேச்சுகளை கேட்பது போன்று நேரத்தை வீணடிக்காமல் , மனதையும் சிந்தனையும் செயலையும் ஒரே  எண்ணத்தில் அதாவது லட்சியத்தில் நிலைத்து வைப்பர் . 

இந்த அமைதி அவர்களின் மனதிற்கும் மட்டுமின்றி எதிர்காலத்திற்கும் நன்மையை தரும் . இதனால் , உடல் வலிமையையும் மன அமைதியும் பெருகும் மற்றும் மனபாரத்தை குறைக்கவும் உதவும் .

அதேபோல வாழக்கையில் சாதனைப்படைத்தவர்களை பற்றி படிப்பது  வெற்றியாளர்களுக்கு புது வழியை காட்டும் . மற்றும் உங்கள் வாழ்வில் எது நடந்ததோ அதுவே அவர்களுக்கும் நடந்திருப்பதை உணர்ந்து , புதிய வழியை சாதனையாளரின் புத்தகம் மூலம் கற்றுக்கொள்ள உதவும் .


உங்களுக்கு படிப்பது  பிடிக்கவில்லையென்றால் , மற்றவரின் சாதனை குறிப்புகள் மற்றும் motivational speech கேளுங்க ... நீங்க எந்த வேலையை செய்தாலும் இது கேட்டுக்கிட்டே  செய்யுங்க ...அப்போது உங்களுக்கு புதிய யோசனை மற்றும், புதிய விசயங்களை அறியலாம் மற்றும் திறமையை வளர்த்துக்கொள்ளமுடியும் . இதனால் நீங்கள் இன்னும் முன்னேற்றம்  அடைவீர்கள். இது புது மனோபலத்தை உருவாக்கும் .

மற்றும் நீங்கள் தனிமையில் இருக்கும்போது நீங்கள் எந்த நிலையில் இருக்கின்றீர்கள் என்று ஆராய்ச்சி செய்யுங்கள் . உங்கள் மனதை நீங்கள் படியுங்கள் . எது சரி எது தவறு என்று ஆராய்யுங்கள் . அதுமட்டுமில்லாமல் உங்கள் லட்சியத்திற்காக இன்னும் வேறு என்ன செய்யவேண்டும் ? என்றும் எந்த வழியில்  சென்றால் எளிதாக இலக்கை அடையமுடியும் என்று யோசியுங்கள் .

6.அவர்கள் நேரத்தை நன்றாக பயன்படுத்துவார்கள்

சிலர் , இலட்சியத்தை வைத்துக்கொண்டு அதை அடையாமலே , கைவிட்டுவிடுவர். இதற்கு காரணம் நேரத்தை சரியாக பயன்படுத்தாமல் போனது தான் .

ஆகவே , உங்கள் இலட்சியத்தை அடைய காலவகாசத்தை முடிவெடுங்கள் .

அதாவது, உதாரணமாக இன்னும் 3 அல்லது 4 வருடத்தில் நான் என் இலட்சியத்தை அடையவேண்டும் .என்று முடிவெடுங்கள் . நீங்கள் எந்தளவிற்கு வேகமாக செயல்படுகிறீர்களோ அந்த அளவிற்கு உங்கள் இலட்சியத்தை அடைவீர்கள் இல்லையென்றால் தாமதமாகும், அல்லது , முடிக்காமலே சென்றுவிடுவீர்கள் . அதனால் இதுபோல் நீங்கள் காலத்தை தேர்வுசெய்து அதுக்கேற்றாற்போல எப்படி வேகமாக திறமையுடன் செயல்படவேண்டும் என்று சிந்தியுங்கள் .

நேரத்தை சரியாக நிர்வகிக்கவேண்டும் . அது திறமையுடன் செயல்படும் வெற்றியாளர்களுக்கு  மிகவும் எளிது. நிறைய மக்கள் தங்களுக்கு நிறைய வேலைகளை சுமத்தினால் , எது எப்போது செய்யவேண்டும் என்று தெரியாமல் திணறிக்கொண்டு,  செய்யும் வேலையில் மனபாரத்துடன் சரியாக செய்யமாட்டார்கள் .

ஆனால் இது வெற்றியாளர்களுக்கு சுலபம் தான் . எப்படி என்றால் இது போன்று நிறைய வேலைகளை சுமத்தும்போது , முதலில் அவர்கள் எது முக்கியமாக சீக்கிரம் செய்யவேண்டும், எது முக்கியமற்றது என்று பிரித்து , முதலில் முக்கியமான  வேலைகளை செய்து முடித்துவிட்டு பிறகு பொறுமையாக முக்கியமில்லாத வேலைகளை செய்து முடிப்பார்கள் . இதுவே அவர்களது தந்திரமாகும் .

இது போன்று உங்களுக்கு ஒருபக்கம் வேலை அல்லது படிப்பு மறுபக்கம் உங்கள் விருப்பமான  கனவு , லட்சியம் இருக்கும். ஆனால் இதை சரியாக இரண்டுபக்கமும் சமமாக  செயல்படுவது மிகவும் முக்கியம் .

இதில்தான் உங்கள் வெற்றியே இருக்கு .

அதேபோல  உங்களுக்கு நிறைய படிப்போ அல்லது வேலை விசயம்  இருந்தா , முதலில் அதை முடிங்க.  கூடவே,... நேரம் கிடைக்கும் போதெல்லாம் , உங்க லட்சியத்திற்கான சின்ன சின்ன வேலையும் சிறிது சிறிதாக செய்யுங்கள் . இதுவே சிறந்தது . எப்பொழுது  உங்கள் படிப்போ அல்லது வேலையோ முடிந்ததோ அப்போவே நீங்கள் உங்க லட்சியத்திற்காக வேலையை தடையில்லாமல் தாராளமாக செய்யலாம். இந்தமாதிரி ஒவ்வொரு வேலைக்கும் நேரம் ஒதுக்குவது சிறந்தது.

7.அவர்கள் ( RISK ) எடுக்கிறார்கள் :

துணிச்சல் இல்லாமல் எதுவும் சாதிக்கமுடியாது , அதுபோல தான் ஒன்று இரண்டு ஆபத்துகளை அல்லது கடினமான நிலைகளை சந்திக்காமல் நம்மால்  முழு வெற்றியை அடைய முடியாது .அதாவது ,பெரிய பெரிய கடினமான நிலைகளை தாண்டாமல் நம்மால் பெரிய இலட்சியத்தை அடையமுடியாது .


ஆகவே இதற்காக சில இழப்புகள் , வருத்தங்கள் , துன்பங்கள் வரும்போதே நீங்கள் தைரியமாக எதிர்த்து நில்லுங்கள் . தவறில்லை .....அனைத்து மக்களும் இந்த ஆபத்தான கடின நிலைகளை கண்டு பயந்து தோல்வி பயத்தால் இறுதி வரையில் இலட்சியத்தை அடையாமல் விட்டுவிடுவார்கள் .

நம் லட்சியம் நமக்காக , நம் குடும்பத்திற்க்காக மட்டும்  இல்லாமல் , சமூகத்திற்கு பொதுநலமாக இருக்கவேண்டும் . இது போல் உங்கள் லட்சியம் இருந்தால்
இதற்காக எதுவும் இழக்க மன உறுதியுடன் இருக்கவேண்டும். இது போல் இருக்கும் மக்களுக்கு இறைவன் அருள் உண்டு . மற்றும் அவரே உங்களுக்கு காவலாக இருப்பார்  இது சத்தியம் .


இதற்கு மட்டுமில்ல மற்ற லட்சியங்களுக்கும் இது பொருந்தும் . ஆனால் அது நல்ல லட்சியமாக இருக்க வேண்டும் . தீமைக்கு (எதிலும் )எங்கும் இடமில்லை .

வெற்றியாளர்களுக்கு தெரியும் அவர்களின் லட்சிய பாதையில், எதில் நாம் கடினமான நிலைகளை சந்திக்கப்போகிறோம், என்று முன்பே கணித்து வைத்திருப்பார்கள் . அதற்கேற்றாற்போல் மனஉறுதியுடன் ஆபத்தை  சந்திக்க தன்னை தானே தயார்படுத்திக்கொள்வார்கள்.

சிலருக்கு தோல்விபயமும் , அவனம்பிக்கையும் ஏற்பட்டு பயந்து வெற்றியாளரை போன்று எந்த முயற்சியும் எடுக்க மறுப்பர் , ஆனால் சாதனையாளர்கள் முயற்சியும் நம்பிக்கையும் கைவிடுவதே அவர்கள் மிகப்பெரிய தோல்வியாக எண்ணுவார்கள் .


மற்றநபர்கள் தோல்விபயத்தினால் அவர்கள் இலட்சியத்தை  விட்டு மற்றநபர்களையும் இந்த தோல்வி பயத்துலே வைத்து சந்தேகங்கள் , குழப்பங்களை தூண்டிவிடுவார்கள் . ஆனால்  இதற்கு தளராமல் எவனொருவன் அவர்களை விட்டு விலகி தன் முயற்சியில் நம்பிக்கையோடு செயல்படுகிறரோ அவருக்கு கண்டிப்பாக வெற்றி நிச்சயம் . 

ஒரு லட்சியத்திற்காக வாழ்வது தவிர , மற்ற நிலையில் வாழ்வது வீணான ஒன்று .

8.பல தோல்விகள் பின்னடைவுகள் வந்தாலும் தொடர்ந்து முன்னேறிச்செல்வர் :


பல வெற்றியாளர்கள் தங்கள் வாழ்வில் பின்னடைவுகளை  கடக்காமல் இருந்ததில்லை , அதில் தான் அவர்கள் தனக்கான ஒரு வரலாற்றை உருவாக்கிக்கொள்கின்றனர்.


பெரும் நஷ்டங்கள் ஏற்படலாம் , பெரும் துயரம் ஏற்படலாம் , அனைத்தையும் இழக்க நேரிடலாம் .... சிலர் , இதைக்கண்டு தொடராமல் முயற்சியை விட்டுவிடுவர் அல்லது முழுவதுமாக லட்சியமும் மற்ற எதுவும் வேண்டாம் என்று வெறுத்து செல்வர் ... ஆனால் வெற்றியாளர்களோ தன்  லட்சியத்தின் மீது அவர்கள் வெறித்தனமாக தொடர்ந்து மீண்டும் மீண்டும்  முயற்சியை மேற்கொள்வார்கள் . 

இதனால் அவர்களின் வெற்றி வாழ்க்கை வரலாற்றை அவர்களே மீண்டு எழுந்து உருவாக்குகின்றனர் . 

இது போன்று நீங்களும் உங்கள் வாழ்வில் ஏற்பட்டால் துவண்டு போகாமல் பீனிக்ஸ் பறவை போன்று மீண்டெழுங்கள் !!....உங்களால் முடியும் .

எத்தனை தடவை தான் பின்னடைவுகளும்  பல தடைகளும் வரும் ? அனைத்து  துன்பங்களும் சிறிய காலம் மட்டுமே ....ஆகவே நம்மை நாமே   மீட்டெடுத்து மீண்டும் தொடர்வது  நமக்கே ஆர்வமாக இருக்கும் . 

இது நமக்கு ஏற்கனவே பழகிய ஒன்று தான் .. சிறு  வயதில் இருந்து நாம் சந்திக்காத துன்பங்களா என்ன ? ...சற்று  சிந்தித்து பாருங்கள் !!...இன்னும் நாம் தான் பழகிக்கொள்ளாமல் இருக்கிறோம்!!...

நம் மனதை விழிப்புணர்வோடு செயல்படவேண்டும் ..அப்பொழுது தான் நாம் மனவலிமையும் எதையும் தாங்கும் சக்தியுடன் இருப்போம்.

9.அவர்கள் வெற்றிபெற ஒரு வழியை கண்டுபிடிப்பார்கள் :

வெற்றியாளர்கள் ...வெறித்தனமாக எந்த தடைகளையும் தகர்த்தெறிந்து பிரச்சனைக்கான தீர்வை முடிவெடுப்பார்கள் .

அந்த பிரச்சனையிலிருந்து மீள புதிய ஒரு வழியை கண்டுபிடிப்பார்கள் .

அதற்கு தெளிவு மிக அவசியம் !! தெளிவாக மனஉறுதியுடன் நீ இருந்தால் எவராலும் உன்னை அசைக்க முடியாது !!...தெளிவான ஒரு புரிதலே புதிய சரித்திரத்தை உருவாக்குகிறது என்று நினைவில்கொள் !!

எந்த நிலையிலும் , எதை நான் இழந்தாலும் .. யாரும் எனக்கு துணையாக இல்லை என்றாலும் பரவாயில்லை ....நானே அனைத்தையும் கடந்து  எனக்கென ஒரு வழியை  நான்  நிச்சயமாக கண்டுகொள்வேன்!! என்று இது போல் மிக வைராக்கியத்துடன் உறுதியாக இருப்பார்கள் .

இந்த மனநிலையே அவர்களுக்கு புதிய வழியை காண்பிக்கும் . 

10.அவர்கள் விரும்பியதை செய்கிறார்கள் :

வெற்றியாளர்கள் எப்பொழுதும் அவர்களுக்கு பிடித்தமான காரியத்தில் வெற்றி அடைகிறார்கள் .அது போல் நாமும் நமக்கான பிடித்த காரியத்தில் ஈடுபடவேண்டும் . 

வெறும் பணத்திற்காக உன்னுடன் சேர்ந்து உன் ஆன்மாவையும் துன்பப்படுத்ததே !..

வாழ்வு நமக்கு கிடைத்திருப்பது ஒரு வாய்ப்புதான் ... அதில் எத்தனையோ துன்பங்கள் துயரங்கள் வந்தாலும் நாம் நமக்கு பிடித்த வேலை செய்தால்   இறுதியில் நாம் நமக்கான பிடித்ததை  என்ன செய்தோம் என்று சிந்தித்து பார்க்கும் போது தான் நமக்கான  முழு திருப்தி கிடைக்கும் . இதுவே நமது  முழு வாழ்க்கையின் வெற்றியாகும்! . இந்த ஆனந்தத்தில் நாம் இறுதிக்காலத்தில் பயமில்லாமல் ஆனந்தமாக நம் மரணத்தை எதிர்நோக்குவோம்.

போதிய ஊதியம் இல்லை என்றால் , பரவாயில்லை .. உனக்கு பிடித்த காரியத்தில் செயல்படுவது மூலம் என்ன கிடைக்கிறதோ அதை வைத்து திருப்திபடுத்திக்கொள் !!....மனைவிக்கும் மக்களுக்கும் இருப்பதை முழுதும் கொடுத்துவிட்டு நிம்மதியுடன் வாழ் !! பசிக்கு ஒருவேளை சாப்பிட்டாலும் மனதிருப்தியும் அமைதியும் இருக்கின்ற வாழக்கை வேறு எதிலும்  கிடைக்காது !!...

நமக்கு பிடித்த காரியத்தில் ஊதியத்திற்காக அதில் பணியாற்றுவதில் தவறில்லை ....விருப்பமும் ஆர்வமும் , வைராக்கியமும் இருக்கும்போது எப்படி உனக்கு அதில் முன்னேற்றம் வராமல் போகும் !! கண்டிப்பாக வரும்!!...  நீயும் ஆனந்தமாக  போதிய நல்ல ஊதியமும் பெறுவாய் !!

ஆனால் அளவுக்கு மீறி ஆசைப்பட்டால் பெரும் நஷ்டம் தான் வரும் !! என்று நினைவில் வைத்துக்கொள் !!

ஆகவே உனக்கு என்ன பிடிக்குதோ, எதில் நீங்கள் ஆர்வமா இருக்கீங்களோ அதுவே உங்கள் லட்சியமாக வையுங்கள்  !!...எதுவும் சலிப்பின்றி விருப்பமுடன் செயல்பட்டால் அதில் வெற்றி நிச்சயம் உண்டு !!

அனைவருக்கும் அவர்களின் வெற்றி லட்சியத்திற்காக வாழ்த்துக்கள் !! இது அனைத்து சிறுவர்கள் முதல் பெரியோர் வரையில் அனைவருக்கும் சேரும் 

படிப்பிலோ , திறமையிலோ , எதிலும் சாதித்துக்காட்டுங்கள் !! ஏனென்றால் உன்னால் மட்டும் தான் உன் வாழ்க்கையை மாற்றமுடியும் !!

இந்த பதிவை ஒவ்வொரு இளைஞனுக்கும் பகிருங்கள் எல்லாருக்கும் உதவியாக இருக்கும்


நன்றி.

----------------------------------------------------------------------

Post a Comment

Previous Post Next Post