குருவின் தேவை என்ன ?


வணக்கம் நண்பர்களே ! 

இன்றைய பதிவில் .... குருவின் துணை ஏன் ? எதற்காக ஆன்மீகத்தில் குருவின் வழிகாட்டுதல் தேவை ? என்று தான் பார்க்கப்போகிறோம் ...வாருங்கள் தொடர்வோம் ! பயனடைவோம் !..


ஆன்மீக பயணத்தில் குருவின் தேவை அவசியம் ஆகிறது, ஏனென்றால் ,
ஒரு தாய் எவ்வாறு தன குழந்தையின் பசிக்குயேற்றவாறு செயல்படுகிறாளோ , அதுபோன்று ஒரு உண்மை குரு தன் சீடர்களின் ஆன்மீக பசிக்குயேற்றவாறு உபதேசித்து நல் வழி காட்டுகிறார் அதுமட்டுமின்றி , ஒரு தாய் போன்று தன் சீடர்களுக்கு ஆன்மீக பசியை ஞானத்தை வழங்குவதன் மூலம் தீர்த்துவைப்பார் .
சிலர் கேட்பதுண்டு , குரு இல்லாதவர்கள் என்ன செய்வது? மற்றும் எப்படி நாம் நல்ல குருவை தேடி செல்வது? என்று பல விதமாக பல கேள்விகள் எழும்!...


ஒன்றை புரிந்துகொள்ளுங்கள் ! ஆரம்ப நிலையில் புதியதாக ஈர்க்கப்பட்டு ஆன்மீக பயணம் செய்பவர்களுக்கு குருவின் தேவை இருக்காது ஏனென்றால் , அவர்கள் தனது பக்தி மற்றும் தியானத்திலே போதும் என்ற நிலைக்கு வந்துவிடுவார்கள் , அதாவது தியானம் மற்றும் பக்தி அதிகம் செலுத்துவதன் மூலம் தங்களின் தேவைகள் நிறைவேறுவதால் குருவை தேடி செல்லவேண்டிய அவசியமில்லை . இப்படி பட்ட நபர்கள் அன்றாடம் தியானம் செய்துவந்தாலே போதும்.


 ஆனால் யாருக்கு குரு அவசியம் என்று பார்த்தால்  ... நான் யார் ? எதற்காக  இங்கு வந்திருக்கிறேன் ? எனது பிறவியின் நோக்கம் என்ன ? ஏன் இந்த பிரபஞ்சம்  உலகம் உயிர்கள்  தோன்றின ? நம்மை ஏன் இறைவன் படைத்தார் ? எது உயிர் ? எது ஆன்மா?  இப்படி எல்லாம் துல்லியமாக ஆராய்ச்சி செய்வோருக்குத்தான் குரு அவசியம் இதனால், இப்படிப்பட்ட ஆன்மீக உச்சத்திற்கு செல்ல ஆர்வம் கொண்ட ஆன்மாக்களுக்கு நல்ல குருவை தேடி திரிய வேண்டிய அவசியம் இருக்காது !
குருவே அவர்களை தேடி பயிற்சி தருவார் ! ஆனால் அதற்காக நாம் குரு வரும்வரை காலத்தை வீணாக்கவேண்டாம் அதுவரை அன்றாடம் உங்கள் இஷ்ட தெய்வத்திற்கு பூஜை செய்து , தினமும் தியானம் மந்திரம் ஜெபம் செய்துகொண்டே இருக்கவேண்டும். சரியான காலம் வந்ததும் தன் சீடனை நோக்கி உண்மை குரு வருவார். இது சத்தியம். அதேபோல ஏதவாது ஒரு முறையில் உங்களுக்கு குருவை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் அதை சரியாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

உங்கள் நண்பன் மற்றும் யாராவது குருவை பற்றி பேசினால் அதை உதாசனப்படுத்தாமல் தயவுசெய்து குருவை சென்று பாருங்கள், நிறைய மஹான்கள் தங்களின் குருவை நண்பர்களின் மூலமாகவே சந்திச்சிருக்காங்க.

என்னதான் படிப்பை பற்றி பெற்றோர்களுக்கு தெரிந்தாலும் ஒரு ஆசிரியர் அவசியமாகிறார் அதுபோல ஆன்மீகத்தை முழுவதும் நாம் அறிந்துகொள்ள மற்றும் சரியாக பயணம் செய்ய குரு அவசியம்.


வாழ்வில் நிம்மதி , உடல் ஆரோக்கியம் , மற்றும் நல்ல வாழ்க்கைக்கு தினசரி தியானம் செய்து வந்தாலே போதும் குரு அவசியமில்லை ஆனால் நான் யார் ? என்பதை தெளியவைக்க குரு அவசியம்.

இறைவனை அடைய நினைக்கும் ஆன்மாக்களுக்கு குரு கிடைப்பது உறுதி .

நன்றி நண்பர்களே

இந்த பதிவை ஆன்மீகத்தில் பயணம் செய்யும் உங்கள் நண்பர்களுக்கு share பண்ணுங்க

-------------------------------------

Post a Comment

أحدث أقدم