தியானத்தின்போது தலை வலி வருவது ஏன் ? 


வணக்கம் நண்பர்களே,

நிறைய நண்பர்கள் என்னிடம் கேட்டிங்க தியானம் செய்யும்போது தலைவலி வருகிறது அப்பறம் தலை சுற்றுகிறது இன்னும் சிலர் சொன்னாங்க புருவமத்தியில் கவனம் செலுத்தி தியானம் செய்தேன் அதனால்தான் எனக்கு இப்படி பிரச்சனைகள் வருகிறது என்று கேட்டீங்க..இதை எவ்வாறு சரி செய்வது மற்றும் எது சரியான தியானமுறை என்று தான் இந்த பதிவில் பார்க்கப்போறோம் , தயவுசெய்து நாம் சொல்லும் முறைகளை சரியாக கடைபிடியுங்கள் 
முதலில் நண்பர்கள் ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும் புருவமத்தி என்பது நாம் நினைப்பது போல நெத்தியில் அல்லது இரண்டு கண்களுக்கு இடையில் இருப்பது அல்ல நமக்குள் ரகசியமான ஒன்றாக இருக்கிறது , அது குருதான் சொல்லவேண்டும் , என்னடா எப்ப பார்த்தாலும் குருதான் சொல்லவேண்டும்  என்று சொல்லுறாரே என்று கோபம் வரலாம் , ஒன்றை புரிந்துகொள்ளுங்கள் குரு சீடன் முறையில் குரு தீட்சை தந்ததும் அந்த உண்மைகளை எல்லாருக்கும் சொல்லக்கூடாது என்று சொல்வார்கள் ஏனென்றால் இன்றைய நாட்களில் ஆன்மீகம் வியாபாரமாக போனதால் உண்மையை சொன்னால் யாரும் அதை பெரிதாக பொருட்படுத்தாமல் தவறான நோக்கத்தில் பணம் பெற்றுக்கொண்டு உபதேசம் செய்றாங்க 

இதனால் தான் எல்லாருக்கும் சொல்லமுடியாத நிலை வருகிறது, இருந்தாலும் நாம் நிறைய பதிவில் தியானம் செய்யச்சொன்னதான் நோக்கம்,  நீங்கள் தீராத ஏக்கத்தில் இறைவனை நினைத்து சரியாகவோ அல்லது தவறாக தியானம் செய்தாலும் ஒரு பக்தனின் நிலையை கண்டு இறைவன் உண்மை குருவை உங்களுக்கு அனுப்புவார் என்றுதான் நாம் தியானம் செய்ய சொல்லுவது , எனவே தியானம் செய்யும் நண்பர்கள் உங்களுக்கு புருவ மத்தியில் கவனம் செய்து எந்த பிரச்சனையும் வரவில்லை என்றால் தாராளமாக தியானம் செய்யுங்கள் ஆனால் உண்மையாக பண்ணுங்கள் ஒரு குரு கிடைக்கவேண்டும் இறைவா எனக்கு உங்களை காணவேண்டும்,  உண்மையை நான் அறிந்துகொள்ளவேண்டும் என்று ஆழ்ந்து தியானம் செய்யுங்கள் .. அதற்குத்தான் நாம் இத்தனை தியானம் செய்யும் பதிவுகளை போடுகிறோம்.

அதேபோல தலை வலி மற்றும் தலைசுற்றும் பிரச்சனை இருந்தால் உடனே புருவமத்தி தியானத்தை நிறுத்திவிட்டு விளக்கு ஏற்றி தியானம் செய்யுங்கள் இதை பற்றி ஏற்கனவே நாம் வீடியோ upload செய்ஞ்சிருக்கோம் அதை பார்த்து தியானம் செய்யுங்கள் அதுவும் சிறந்த ஒன்றுதான் . எப்போதும் கடினமாக உடல் மற்றும் தலை வலியோடு தியானம் செய்யவேண்டாம்.

இறைவனை நினைத்து அமைதியான தியானம் மேற்கொள்வதே சிறந்தது,

புருவமத்தி ரகசியம் பற்றி உங்கள் குரு உறுதியாக சொல்வார் அதனால் கவலை வேண்டாம். சிலர் சொல்லுவாங்க புருவமத்தி தியானம் செய்யும்போது சக்கரங்கள்  மேலே எழும்புவது போல இருக்கு எங்கள் குரு அப்படித்தான் பயிற்சி தந்தார் மற்றும் தலை சுற்றுவது போல இருக்கு இதுவும் ஒரு அனுபவம் என்று தயவுசெய்து ஏமாறவேண்டாம்.இது உண்மையான தியானம் இல்லை. அதனால் விளக்கு ஏற்றி குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 20 முதல் 30 நிமிடம்  வரை பயிற்சி பண்ணுங்கள் இது சத்தியமாக சொல்கிறேன் சிறப்பான தியானப்பயிற்சி முறை,நீங்கள் சித்தர்கள் சமாதி மற்றும் கோவில்களில் பார்த்தால் மஹான்கள் முன்பு விளக்கு ஏற்றி வைத்திருப்பார்கள் எனவே இதை கடைபிடியுங்கள்.

அடுத்து போலி குருக்களிடம் பணம் கொடுத்து உங்கள் காலத்தையும் பணத்தையும் வீணடிக்கவேண்டாம், எனக்கு தெரிந்த ஒரு சில உண்மையான குருக்களை சொல்கிறேன் அவர்களை தியானத்தில் நினைத்து ஈசனிடம் கேட்டு குருவாக கேளுங்கள் யார் குருவாக வந்தாலும் உங்கள் ஆன்மீக பயணம் சிறப்பாக இருக்கும். இது உறுதி.


அவர்கள் 

சீர்காழி பாட்டுசித்தர் ஐயா , அடுத்து சாய் தர்மா டிவியில் வரும் ஐயா இவர்களை சென்று பாருங்கள் உங்களுக்கு உண்மையான தியானம் பற்றி உபதேசம் கிடைக்கலாம்.இவர்களின் முகவரி youtube மற்றும் கூகிளில் பார்த்தால் கூட வரும்.  இது எனக்கு தெரிந்ததுதான் நீங்கள் இன்னும் ஆழ்ந்து தியானம் செய்யும்போது இன்னும் சில உண்மையான குருக்கள் வருவார்கள். எனவே நீங்கள் நம்பிக்கையாக இருங்கள்.

இறைவனை காண எத்தனையோ நண்பர்கள் தினமும் உண்மையாக தியானம் பண்ணுறீங்க இருந்தாலும் தவறான வழிக்கு போகக்கூடாது என்பதற்கு தான் இந்த பதிவு,  இனிமேல் சரியாக தியானம் செய்யுங்கள் .

விளக்கு தியானப்பயிற்சி பற்றி விடியோவோட link description ல இருக்கு சோ அதை பாருங்கள் 

இந்த பதிவை ஆன்மீகத்தில் இருக்கும் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள் அவர்களுக்கும் உதவியாக இருக்கும்.

------------------

2 تعليقات

إرسال تعليق

أحدث أقدم