அதிகப்படியான கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி ?


வணக்கம் நண்பர்களே ,

திடீரென்று உண்டாகும் கோபத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்று தான் இந்த பதிவு , 


முதலில் இந்த உலகத்தில் எதுவுமே நிரந்தரம் இல்லை என்பதை நாம் தெளிவாக உணரவேண்டும் , அதாவது இதுவும் கடந்து போகும் என்ற தாரக மந்திரத்தை நினைவில் வைத்தால் நமக்கு தேவை இல்லாத பிரச்சனைகள் வராது.
அடுத்து உங்களுக்கு அதிகப்படியான கோபம் வரும்போது ஒரு 10 secs உங்கள் மூச்சை கவனியுங்கள் உறுதியாக கோபம் குறையும, மற்றும் அந்த மாதிரியான நேரத்தில் அந்த இடத்தை விட்டு நகன்று செல்லுங்கள்.


தினமும் 10 நிமிடம் மூச்சை கவனிக்கும் பயிற்சியை செய்து வாருங்கள் இதனால் கோபம் உண்டாகும் முன்பே அதை தடுக்கும் சக்தி உங்களுக்கு உண்டாகும்.

இன்னும் சிலர் இருப்பாங்க நம்மேல் எந்த தவறும் இருக்காது அப்படி இருந்தும் நம் நண்பனோ அல்லது வீட்டில் உள்ளவர்கள் கோபத்தை தூண்டினால் அதற்கு நீங்கள் பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை உங்கள் மேல் தவறில்லை என்றபோது நீங்கள் ஏன் கோபப்படவேண்டும்.


இந்த விஷயங்கள் எல்லாமே ஏற்கனவே மஹான்கள் மற்றும் யோகிகளால் சொல்லப்பட்டவை தான் நாம் தான் கடைபிடிக்காமல் இருப்போம் , 


>  குழந்தைகள் எப்படி  ஏதாவது விலங்கினை பார்த்தால் உடனே  அவர்களுடைய தாயிடம் அல்லது தந்தையிடமோ தஞ்சம் புகும் , அல்லது சத்தம் போட்டு அவர்களை உதவிக்கு கூப்பிடும் , அதேபோலவே நாமும் இந்த மாதிரியான நேரத்தில் கடவுளிடம் செல்லவேண்டும் அல்லது இறைவனை அழைக்கவேண்டும் . 

பிராத்தனையால் கோபங்கள் கட்டுப்படுத்தப்படும் .


>  அடுத்து உறுதியான மனதை வைக்கவேண்டும் அதற்கு தினமும் சிலநேரம் நான் உறுதியான மனம் படைத்தவன் , என்னை எதுவும் துன்பத்துக்கு ஆளாக்கமுடியாது என்று சிலமுறைகள் தொடர்ந்து கூறும்போது மனம் பலமடையும் .> அதேபோல நம்மால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கோபங்கள் உண்டாகலாம் , நான் என்ன செய்தாலும் இதிலிருந்து வெளிவரவே முடியல என்று எண்ணம் இருக்கும் , அந்த நேரத்தில் இறைவனிடம் விட்டுவிடுங்கள் .


ஒரு விஷயம் தீய செயல் என்றும் தெரிந்தும் நம்மால் கட்டுப்படுத்த முடியவில்லையென்றால் நம்முடைய குரு அல்லது பெரியவங்க கிட்ட நம்முடைய பாதிப்புகளை மனம் திறந்து கூறுவது தான் சிறந்த ஒன்று ..சும்மா நமக்குள் வைப்பதால் ஒருநாளும் இதுக்கு முடிவு கிடைக்காது .தத்துவ ரீதியாக இந்த மாதிரியான நேரங்களில் நாம் செய்யவேண்டிய முதல் காரியம் மனதில் ஏற்பட்டுள்ள தீய எண்ணங்களை அமைதிப்படுத்துவது தான் , சிலநேரம் பொறுமையாக அதை பற்றி யோசித்தால் அனைத்துக்கும் விடைகிடைக்கும் . கடைசியாக இடைவிடாது  இறைவனை அழைப்பதாலோ அல்லது குரு சொல்லி தந்திருக்கும் மந்திர ஜெபம் செய்வதாலும் அல்லது ஏதாவது தெய்வத்தின் நாமத்தை உச்சரிப்பதாலும்
நமக்குள் ஒருவித உயர்ந்த எண்ண அலைகள் உண்டாகி இந்த மாதிரி நெருக்கடியான சமயத்தில் நம்மை பாதுகாக்கும் .

நன்றி நண்பர்களே ,

உறுதியாக இதை கடைபிடித்தால் காரணமின்றி வரும் அதிகப்படியான கோபத்தை கட்டுப்படுத்தலாம் 


உங்கள் கருத்துக்களை கீழே பதிவிடவும் .

--------------------------------------------------------------------------------------------------------------------------

Post a Comment

Previous Post Next Post