யாரை கர்வம் கொண்டவர்கள் என சாணக்கியர் சொல்கிறார் 


வணக்கம் நண்பர்களே,

சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம் என்னும் நூல் ராஜ நீதி மட்டுமல்லாமல் குடும்பநீதி பற்றியும் கூறும் மிக உயர்ந்த நூல் என்பது நமக்கு தெரியும் 
அதில் சாணக்கியர் ஒருசில செயல்களை செய்யும் நபர்களை கர்வம் பிடித்த பிரிவினர் என்று கூறுகிறார் சரி யார் அவர்கள் என்று பார்ப்போம் வாங்க.
1) தன்னை உயர்ந்தவனாக எண்ணிக்கொள்பவன் - அதாவது நமக்குத்தான் அனைத்தும் தெரியும் என்று நினைத்து எப்போதும் தன்னை பிறருடன் ஒப்பிட்டு பார்ப்பவன், இப்படிப்பட்ட நபர்கள் நாம் எந்த ஒரு நல்ல விஷயம் சொன்னாலும் எனக்கு எல்லாமே தெரியும் நீ ஒன்றும் சொல்லவேண்டாம் என்ற எண்ணத்திலே இருப்பார்கள் . அப்படி உயர்ந்தவனாக இருந்தாலும் நாம் தான் பெரியவர் என்ற எண்ணம் இருக்கக்கூடாது.


2) மற்றவர்கள் தன்னை கௌரவப்படுத்தவேண்டும் என்று விரும்புபவன் , ஒரு செயலை செய்யும்போதே அதற்கு பலனை எதிர்பார்த்து செய்வான் , இப்படிப்பட்டவர்களும் கர்வம் பிடித்தவர்கள்தான் என்கிறார்.


3) மூன்றாவது விசயமாக அருமையாக சொல்கிறார் , தன் எதிரிகளை பாராட்டுபவர்கள் மீது கோபப்படுவது,  மற்றும் நாம் அவர்களின் எதிர்களிடம் பேசினாலே அவர்களுக்கு நம்மீதும் கோபம் வரும் , இவர்கள் தனக்கு எதிரி என்றால் அனைவர்க்கும் எதிரியாகத்தான் இருக்கவேண்டும் என்று விரும்புவார்கள். அவர்களின் எதிரியை பற்றி எப்போதும் நம்மிடம் தவறான கருத்துகளை மட்டுமே பரப்புவார்கள் இப்படி கர்வம் பிடித்தவர்களிடம் சற்று தள்ளியே இருங்கள். ஒருநாள் உங்களை பற்றியும் தவறாகவே பேசுவார்கள்.


4) கிடைத்த ஊதியத்தில் திருப்தியுறாதவன் , இவர்கள் எவ்வளவுதான் சம்பளம் தந்தாலும் மீண்டும் மீண்டும் அதிகமான சம்பளத்தை எதிர்நோக்கியே இருப்பார்கள், கிடைக்கும் வருமானம் போதும் இதை வைத்து நம்மால் சிறப்பாக வாழமுடியும் என்ற எண்ணம் ஒருபோதும் இருக்காது. வருமானத்திற்கு ஏற்ற ஆசைகளை வைக்காமல் அடுத்தவரை பார்த்து வாழவேண்டும் என்ற போட்டிகாரணமாத்தான் இவர்களுக்கு இப்படிப்பட்ட வருமானம் ஆசைவருகிறது, இவர்களையும் சாணக்கியர் கர்வம் பிடித்தவர்கள் என்கிறார்.


5) பதவியை தவறாக பயன்படுத்துபவன்- தன்னுடைய பதவியை வைத்து மற்றவர்களை அடிமைப்படுத்துவான், தனக்கு நிகராக யாரையும் வரவிடமாட்டான் , தனக்கு அடுத்து தன் வாரிசுதான் வரவேண்டும் என்று விரும்புவான், அதேபோல மற்றவரின் வளர்ச்சியை தடுப்பதே அவர்களின் நோக்கமாக இருக்கும்.


இந்த 5 வகையான நபர்களை தான் கர்வம் பிடித்தவர்கள் என்கிறார் இதில் நீங்கள் ஏதும் இல்லை என்று நம்புகிறோம் அப்படி இருந்தாலும் தயவுசெய்து மாற்றிக்கொள்ளுங்கள் அப்போதுதான் சிறப்பான உண்மையான வாழ்க்கை அமையும்.

இந்த பதிவை யாருக்கு ஷேர் பண்ணவேண்டும் என்று உங்களுக்கே தெரியும் so அவர்களுக்கு ஷேர் பண்ணுங்கள் அல்லது இந்த விஷயத்தை பற்றி எடுத்து சொல்லி உங்கள் எதிரி நண்பர்களை சரி செய்யுங்கள்.

நன்றி.
------------------------------------

Post a Comment

Previous Post Next Post