வாழ்வை மாற்றும் சிந்தனை துளிகள் 
➤ இப்பவே செயல்படத்தொடங்கு ஏனென்றால் சிலநேரத்தில் நாளை என்பது வராமல்கூட போகலாம்.


➤ எதற்கெடுத்தாலும் காரணம் சொல்லாமல் வலியை தாங்கி முன்னேற பழகு


➤ மனதை ஆளத்தெரிந்தவனுக்கு உடலை ஆள்வது எளிது

 ➤ இப்பொழுது நீங்கள் அனுபவிக்கும் வலியானது நாளை உனக்கு வலிமையை தரும் என்று மறக்காதே.

➤ உங்கள் உடலை சரியாக பாத்துக்கொள்ளுங்கள் ஏனென்றால் அதை வைத்துதான் வாழப்போரிங்க .

➤ ஒவ்வொரு நாளும் உங்கள் முன்னேற்றத்திற்கு வாய்ப்பாக எண்ணிக்கொள்ளுங்கள் எனவே காலத்தை வீணாக்காமல் சரியாக இந்த நாளை பயன்படுத்துங்கள்.


➤ கடினமாக உழைக்க யாருக்கும் விருப்பம் இல்லை ஆனால் பலனை மட்டும் எதிர்பார்க்கிறோம் எனவே உனது உழைப்பை அதிகபடுத்தி பலனை எடுத்துக்கொள்.

➤ உன் வாழ்வில் முன்னேற்றம் வேண்டுமென்றால் உன்னை நீ அதிகமாக அர்பணிக்கவேண்டும்.

➤ எதுவுமே செய்யாமல் இருப்பதற்கு பதிலாக  மெதுவாக செய்வதுகூட சிறந்த ஒன்றுதான்.


➤ ஒருசெயலை கைவிடும்முன் ஒன்றை நினைவில் வை அது என்னவென்றால் நீ எந்த லட்சியத்திற்காக ஆரம்பித்தாய் என்று.

➤ முடியாது என்றபோது உங்கள் லட்சியத்தை குறைக்காமல் உங்கள் முயற்சியை அதிகப்படுத்துங்கள் வெற்றி நிச்சயம்.


➤உன்னால் முடியாது என்று சொன்ன அந்த நபர்களுக்காகவே  இப்போதே செயல்படத்தொடங்கு அதேபோல் ஜெயித்துக்காட்டு.


 நன்றி நண்பர்களே ,

இதை பின்பற்றினால் வெற்றி நிச்சயம் , அனைவர்க்கும் வெற்றிக்கான வாழ்த்துக்கள்.

-----------------------------------------

Post a Comment

أحدث أقدم