இறைவனை நம்பினால் எதுவும் சரி ஆகும் 


வணக்கம் நண்பர்களே,

இறைவன் மீது எந்த அளவுக்கு நம்பிக்கை வேண்டும் மற்றும் அந்த நம்பிக்கை எப்படி நமது துன்பங்களை போக்குகிறது என்று தான் இந்த பதிவு உறுதியாக இறைவன் மீது முழு நம்பிக்கை வைத்திருக்கும் அனைவர்க்கும் ஒரு ஊக்கமாக இருக்கும் என்று நம்புகிறோம்.

முதலில் மஹான் லாஹிரி மஹாசயர் சொன்ன ஒரு அருமையான விஷயம் 

" அந்த சர்வ வல்லமை உள்ள இறைவனால் மருத்துவர் இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும் எவரையும் குணப்படுத்தமுடியும் என்பதை அறிந்துகொள் என்கிறார். இது முற்றிலும் உண்மை இறைவன் மீது அசைக்க முடியாத உண்மையான நம்பிக்கை இருந்தால் எந்த நோய் நொடி இருந்தாலும் அதை உடனே சரி செய்யமுடியும் மற்றும் நமக்கு எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் அவை ஒவ்வொன்றாக சரி ஆகிக்கொண்டே இருக்கும்.

உங்களுக்கு இறைவன் மீது முழு நம்பிக்கை இருக்கிறது என்றால் உண்மையாக சொல்கிறேன் நீங்கள் எப்போதும் கவலை படவேண்டிய அவசியமில்லை, ஆனால் தயவுசெய்து சந்தேகம் மட்டும் வேண்டாம் , குழந்தையின் உண்மை இயல்பை இறைவனால் அறியமுடியும் எனவே தான் முழு நம்பிக்கை வேண்டும்.


அதேபோல துன்பங்கள் உடனடியாக குணமடைய மிகசிறந்த முறை இறைவனிடத்தில் முழுமையாக , கேள்விகளற்ற விசுவாசம் கொள்வதாகும். நீங்கள் நம்புவதற்கு விருப்பப்படலாம் , நீங்கள் நம்புவதாக நினைக்ககூட செய்யலாம், ஆனால் நிஜமாகவே நம்பினால் பலன் உடனடியாக இருக்கும்.

சிலருக்கு சந்தேகம் இருக்கலாம் இறைவன் எப்படி நம்மை காத்துக்கொண்டிருக்கிறார் என்று நமது எண்ணங்கள் , பிராத்தனைகள் , திடமான நம்பிக்கைக்கு பின்னால் இறைவன்தான் இருக்கிறார் , நாம் செய்யும் நல்ல செயல்கள் , நமக்கு கிடைக்கும் பலன்கள் , வெற்றி , நினைத்த காரியம் கைகூடுவது இது எல்லாமே நீங்கள் இறைவன் மீது  வைத்த அசைக்கமுடியாத நம்பிக்கையால் வந்ததுதான் . 


அதேமாதிரி நமக்குள் இருக்கும் அந்த மாபெரும் சக்தியை எழுப்பமுடியும் , இடைவிடாத பிரார்த்தனையும் , தொடர்ந்த நம்பிக்கையும் அந்த மாபெரும் சக்தியை எழுப்பும்.நாம் சரியான முறையில் உணவு உட்கொண்டு உடலுக்கு தேவையானதை செய்தாலும், இடைவிடாது இறைவனிடம் இந்த மாதிரி பிரார்த்தனை செய்யவேண்டும். அதாவது 

" இறைவா உங்களால் மட்டுமே என்னை குணப்படுத்த முடியும் ஏனென்றால் மருத்துவர்கள் மருந்துகளினால் எட்ட முடியாத ஜீவ அணுக்களையும் உடலின் சூட்சுமமான நிலைகளையும் நீங்கள் தான் கட்டுப்படுத்துறீங்க " எனவே தான் நான் உங்கள் மேல் முழு நம்பிக்கை வைத்துள்ளேன் என்று தினமும் வேண்டுங்கள் அது உறுதியாக செயல்படும்.

என் நண்பர்களே  கடினமான காலம் வரும் போகும் ,ஆனால் எப்போதும் இறைவனிடம் உங்களுக்கு இருக்கும் அசைக்கமுடியாத நம்பிக்கையை விடவேண்டாம் , எதற்கும் பயம்வேண்டாம் இந்த உடலுக்குள் இருப்பது இறைவன்..  எந்த நிலை வந்தாலும் உங்கள் நம்பிக்கை தான் என்றும் வாழவைக்கும். எனவே எதை நம்பினாலும் அதை சந்தேகம் இல்லாமல் முழுமையாக கடைசிவரை நம்புங்கள் உங்களுக்கு எந்த துன்பமும் வரவிடாமல் இறைவன் காப்பார்.

சிறிய பதிவாக இருந்தாலும் இந்த பதிவின் மூலமாக இறைவனை நான் தினமும் வணங்குகிறேன் அதனால் எனக்கு எந்த துன்பமும் வராது என்று திடமான நம்பிக்கை வந்திருக்கும் .

இந்த பதிவை இறைவனைத்தேடும் அனைத்து நண்பர்களுக்கும் பகிருங்கள் உதவியாக இருக்கும் .

நன்றி 
----------------------------------------------

Post a Comment

Previous Post Next Post