ஆன்மீகத்திற்கு அசைவ உணவு ஏற்றதா ?

வணக்கம் நண்பர்களே ,

ஆன்மீகத்தில் பயணம் செய்யும் அனைத்து நண்பர்களுக்கும்  இந்த சந்தேகம் இருக்கலாம் அதாவது நாம் அசைவம் சாப்பிட்டு தியானம் மற்றும் யோக பயிற்சிகள் செய்யலாமா ? இறைவனை அடைய அசைவ உணவு தடையா இருக்குமா ? ஏன் அசைவம் சாப்பிட்டு தியானம் செய்யக்கூடாது என்று தான் இந்த பதிவில் பார்க்கப்போறோம் சரி வாங்க பார்ப்போம்.
முதலில் உடல் ரீதியாக பார்த்தால் அசைவ உணவுக்கும் சைவ உணவு உண்பதால் நிறைய மாற்றங்கள் வரும் என்பதை நாம் தெளிவாக உணரலாம் அதாவது அசைவம் அதிக சாப்பிட்டால் கோபம் , காமம் , மற்றும் உணர்ச்சிகள் அதிகம் வரும் ஆனால் இதோடு compare பண்ணி சைவ உணவை பார்த்தால் இந்த உணர்ச்சிகள் எல்லாமே சற்று குறைந்தே காணப்படும் சைவ உணவை மட்டுமே உண்ணும் நபர்களுக்கு கோபம் மிக குறைவாகவே இருக்கும்.

அடுத்து ஆன்மீக ரீதியாக எந்த உயிரையும் கொள்ளக்கூடாது அனைத்து உயிரிலும் இறைவனை காணவேண்டும் என்று நோக்கத்தின் படி நாம் உயிர்களை கொன்று சாப்பிடக்கூடாது என்று சொல்வார்கள்.அதேமாதிரி ஆன்மீகத்தில் பயணம் செய்யும்போது தியானம் மற்றும் யோகப்பயிற்சிகள் செய்வதால் உடல் லேசாகும் மற்றும் அப்படி இருந்தால் தான் நாம் இறைநிலையை அடையவும் முடியும், 

மஹாவதார் பாபாஜி மற்றும் வள்ளலார் போன்ற மஹான்கள் அடைந்த அந்த இறை நிலையை அடைய சரியான மூச்சு பயிற்சி செய்து உடலை லேசாக மாற்றுவார்கள் அப்படி இருக்கும் போது நாம் அசைவ உணவு எடுத்தால் அது நமது எலும்புகளில் போய் சேர்ந்துவிடும் மற்றும் அப்படியே எலும்புகள் மிகவும் உறுதியாக இருப்பதால் நம்மால் என்னதான் மூச்சி பயிற்சி அதாவது வாசி யோகம் மற்றும் கிரியா யோகம் செய்தாலும் உடலில் யோகிக்கான மாற்றத்தை கொண்டுவரமுடியாது .


இன்னும் ஒன்றை தெளிவாக உணரவேண்டும் எந்த ஒரு சித்தரும் அசைவ உணவு சாப்பிடவேண்டாம் என்று சொன்னதில்லை , அவர்கள் சொல்வது நீங்கள் அசைவம் சாப்பிட்டே இறைவனை வணங்கலாம் மற்றும் தியானம் செய்யலாம் ஆனால் அசைவம் இறைவனை வணங்க தடையாக இருந்தால் உடனே விட்டுவிடுங்கள் என்று தான் முன்னோர்கள் சொல்வது , அவர்கள் பிறரின் ஆசைக்கு என்றும் தடையாக இருந்ததில்லை. இதை புரிந்துகொள்ளவேண்டும், அதேமாதிரி அதை மட்டும் சொல்லவில்லை இறைவனை அடைய தடையாக எது இருந்தாலும் அதை விடவேண்டும் என்றுதான் சொல்லுறாங்க அது புகைப்பழக்கம் , கெட்ட எண்ணங்கள் , உணவு முறை இப்படி எதுவாக இருந்தாலும்.


அதேமாதிரி தியானம் செய்யும் நண்பர்கள் நீங்கள் அசைவம் சாப்பிட்டும் தியானம் செய்யுங்கள் சைவம் சாப்பிடும் தியானம் செய்யுங்கள் உங்கள் மனம் மற்றும் உடல் எதற்கு சரியாக இருக்கிறதோ அதையே கடைபிடியுங்கள் யாருக்கும் எந்த கட்டுப்பாடும் இல்லை. ஆனால் இறைவனை அடைந்த மஹான்கள் மற்றும் யோகிகள் அவர்கள் அனுபவத்தால் சொன்னது அசைவம் யோக பயிற்சிகளுக்கு சரியானது அல்ல என்றுதான் அனைவருமே சொல்லுறாங்க . 

அவ்வளவுதான் நண்பர்களே 

நான் அசைவம் சாப்பிட்டவன் இறைவனை வணங்க மாட்டேன் சைவம் சாப்பிட்டு தான் வணங்குவேன் என்று காலத்தை வீணாக்காமல் அசைவம் சாப்பிட்டே தியானம் மற்றும் தாளாரமாக இறைவனை வணங்குங்கள் சரியான காலம் வந்ததும் எது உங்கள் இறை தேடலுக்கு சரியாக இருக்கோ அதை எடுத்து தடையாக இருப்பதை விட்டுவிடுங்கள் ஆனால் இதை காரணமாக வைத்து இறைவனை தேடாமல் விட்டுவிடவேண்டாம்.

இந்த உடல் கோவிலுக்கு சமம் அதை முடிந்தவரையில் புனிதமாக வைப்போம்.

குறிப்பு  : இது ஆன்மீகத்தில் பயணம் செய்யும் நண்பர்களுத்தான் மற்றவர்கள் உங்கள் விருப்பம் போல பிடித்ததை சாப்பிடுங்கள்.

இந்த பதிவை ஆன்மீகத்தில் இருக்கும் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள் 


நன்றி

-----------------

Post a Comment

أحدث أقدم