வள்ளலார் கடைபிடிக்கச் சொல்லும் 10                                  அருமையான கொள்கைகள்  


வணக்கம் நண்பர்களே,

வள்ளலார் சுவாமிகள் இறைவனை அனைவருமே அடைய சில அருமையான கொள்கைகளை சொல்லிட்டு போயிருக்காங்க , அதாவது இந்த பத்து விசயங்களை கடைபிடிப்பது சற்று கடிமானதாக இருந்தாலும் கூட ஒரு சில கொள்கைகளை கடைபிடித்தாலும் நாம் இறைவனை உறுதியாக அடையாலம் . இது சும்மா பொழுதுபோக்கிற்காக வள்ளலார் சொல்லிட்டு போகவில்லை எனவே சரியாக கடைபிடிப்போம்.
1) இறைவன் ஒருவனே , நாம் எந்த மதத்தை கடைபிடித்தாலும் சரி இறைவன் ஒருவனே என்பதை உணர்ந்து தெளிவு அடையவேண்டும்.அதேபோல இறைவனை ஒளி வடிவில் வணங்கவேண்டும் 


2) சிறு தெய்வங்களின் வழிபாடு கூடாது , அதேபோல சிறு தெய்வங்களின் பெயரைச்சொல்லி உயிர்பலிகளும் தரக்கூடாது.


3) இறைவனை அடைய விரும்பும் ஒருவர் புலால் உணவை தவிர்க்கவேண்டும் மற்றும் மரக்கறி உணவே மனித உடலுக்கு ஏற்றது , இதனால் உள்ளம் மற்றும் உடல் தூய்மை அடையும்.


Read this also


4) சாதி , சமயம் ,இனம் ,மொழி , நாடு போன்ற  வேறுபாடுகள் கூடாது அனைத்து மக்களையும் சகோதர நோக்குடன் நேசிக்கவேண்டும், ஏனென்றால் அனைவரிலும் இறைவனே வசிக்கிறார்.


5) மக்களை மட்டுமில்லாமல் அனைத்து உயிர்களையும் தன்னுயிராக எண்ணி அன்பு காட்டவேண்டும். இது ஆன்ம நேய ஒருமைப்பாட்டின் அடிப்படை. மற்ற உயிர்களை துன்புறுத்தும் ஒருவனுக்கு இறைவனின் அன்பு   ஒருபோதும் கிடைக்காது.


6) மக்கள் அனைவரும் ஏழைகளின் பசிப்பிணியை அகற்றப் பாடுபடவேண்டும் , ஒரு ஏழையை சந்தோசப்படுத்தினால் அது இறைவனையே போய் சேரும்.


7) புராணங்களும் சாத்திரங்களும் முடிவான உண்மைகளை நமக்குத் தெரிவிக்காது , இதை உணரவேண்டும் , அதற்கு தினசரி ஆன்மீக பயிற்சிகள் மிக அவசியம்.


8) இறந்தவர்களை எரிக்கக்கூடாது , அதற்கு பதிலாக புதைக்கவேண்டும் .

9) கருமாதி , திதி , போன்ற சடங்குகளைச் செய்யக்கூடாது.

10) எந்தச் செயலைச் செய்தாலும் அது மக்களின் நன்மையைக் கருத்தில் கொண்டே செய்யப்படவேண்டும். இவைகளே சன்மார்க்க கொள்கைகள்.


அவ்வளவுதான் நண்பர்களே, இதில் கூறிய அனைத்தையும் கடைபிடிக்க முடிகிறதோ இல்லையோ , பாதியை கடைபிடித்தாலும் கூட நாம் இறைவனின் அன்பை பெறலாம்.

நம்முடைய முன்னோர்கள் சொல்வது இறைவனை அடையத்தான். எனவே இறைவனை உறுதியாக அடையவேண்டும் என்று விரும்பும் நபர்கள் மட்டும் இதை கடைபிடியுங்கள்.

நன்றி நண்பர்களே.

  ---------------------------------------------------------------------

Post a Comment

Previous Post Next Post