தியானம் செய்வதால் கிடைக்கும் பல நன்மைகள் 


வணக்கம் நண்பர்களே ,

தினசரி குறைந்தபட்சம் 10 முதல் 20 நிமிடம் தியானம் செய்வதால் நமக்கு அற்புதமான பல நன்மைகள் கிடைக்கிறது இதை விங்ஞான ரீதியாகவே நிரூபிக்கப்பட்டுள்ளது , தியானம் செய்வதை மத ரீதியாக பலர் பார்க்குறாங்க அதை அவ்வாறு பார்க்காமல் அனைவருமே தியானம் செய்து அதன் பலனை அனுபவிக்கவேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுதல் .
தியானம் செய்வதால் முதலில் நம்முடைய மனம் கட்டுக்குள் வருகிறது மற்றும் மனதை பற்றி ஒரு தெளிவான புரிதல் வருகிறது . நம்முடைய பல துன்பங்களுக்கு காரணம் மனம் சரியில்லாமல் தெளிவான ஒரு முடிவு எடுக்கமுடியாமல் போனது தான் ஆனால் தியானம் அதை தீர்த்து வைக்கிறது. எப்போது என்ன செய்யவேண்டும் செய்யக்கூடாது என்பதை நமக்கு தெளிவாக மனம் காட்டும் மற்றும் அதன்படி செயல்படுவதால் நமக்கு துன்பத்திலிருந்து விடுதலை கிடைக்கிறது.


அடுத்து முதுகுத்தண்டை நேராக வைத்து தியானம் புரிவதால் நமக்கு பிரபஞ்ச சக்தி அதிகம் கிடைக்கிறது , இதனால் சிந்திக்கும் திறன் , எப்போதும் இளமை தோற்றம் , சுறுசுறுப்பாக இயங்குவது , நீண்ட ஆயுள் , நியாபக சக்தி அதிகரிக்கும் இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். 


 அதேபோல மன அழுத்தத்தை குறைக்கிறது , சோம்பலை நீக்குகிறது , நிம்மதி கிடைக்கும் , உங்களுக்கு தேவையான வெற்றியை பெற்று தந்து இந்த சமுதாயத்தில் நல்ல நிலைக்கு கொண்டு செல்லும். நீங்கள் நினைக்கும் எந்த காரியத்திலும் உங்களுக்கு வெற்றி உறுதி என்றே சொல்லலாம்.

முன்பே சொன்னதுபோல மன அழுத்தம் குறைவதால் தூக்கம் நன்றாக வரும் ,கோபம் குறையும் , தனிமை போன்ற பிரச்சனைகளும் தீரும் , மற்றவர் மீது வரும் வெறுப்பு நீங்கி எல்லோர் மீது அன்பு செலுத்தும் தன்மை வரும் , தலை வலி , உடலில் ஏற்படும் தேவை இல்லாத வலிகள் குறையும். நான் உறுதியாக சொல்லமுடியும் நான் தொடர்ந்து தியானம் செய்த நாட்களில் எனக்கு தலை வலி வந்ததே இல்லை இது உண்மை.

அடுத்து மனப்பதட்டம் , பயம் , உடலில் ஏற்படும் நடுக்கம் , திடீர் மனஅழுத்தம் குறையும் , பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் இந்த மாதிரியான பிரச்சனைகள் வரும்போது அவர்கள் செய்யும் தியானம் பிரச்சனைகளை தீர்த்துவைக்கும். பெரியோர்களுக்கு மாரடைப்பு , ரத்தக்கொதிப்பு போன்ற பிரச்சனைகளும் வராது. நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.


தொடர்ந்து தியானம் செய்வதால் மூளை சுறுசுறுப்படையும் , இதனால் மூளையில் ஆரோக்கியம் வலுப்பெறுகிறது , இதைவைத்து உங்களுக்கு ஏதேனும் தீயபழக்கங்கள் இருந்தால்கூட சரி செய்யமுடியும் , குறிப்பாக தவறான வழிக்கு சென்ற இளைஞர்கள் மீண்டு வர தியானம் உறுதியாக உதவி செய்யும். சுயகட்டுப்பாடு அதிகரிப்பதால் உங்களால் எதையும் சரி செய்யமுடியும்.

அவ்வளவு தான் நண்பர்களே,

தினசரி 20 நிமிடம் வரை செய்யும் தியானத்தால் , மனம் , உடல் , மூளை ஆரோக்கியம் பெற்று உங்கள் வாழ்க்கையை சிறப்பாக மாற்றும் என்பது நிச்சயம் எனவே நாம் எப்போதும் சொல்வது தான் உங்களுக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் தியானம் செய்யுங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழுங்கள்.


நன்றி .

-----------------------

3 Comments

  1. But start pannumpothu yentha thoughts um illaama oru 2mints kuda Panna mudiyala.. yethavathu oru thought varuthu so first atha control pandra maathiri oru solution sollunga..

    ReplyDelete

Post a comment

Previous Post Next Post