மனமே சிறந்த குரு 

வணக்கம் நண்பர்களே,

அமைதியான வாழ்க்கை வாழவும் மற்றும் மனதை வலிமைப்படுத்துவது எப்படி என்று தான் இந்த பதிவு.மனதை விட மேலான குரு வேறில்லை , அதாவது தியானத்தால் மனம் நிலை நிறுத்தப்பட்டால் நாம் எந்த வழியை பின்பற்றவேண்டும் , அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதை உள்ளிருந்து அது நமக்கு காட்டும்.

அதேபோல நம்முடைய தினசரி வாழ்க்கையிலும் மனம் நம்மை வழிநடத்தும்,இந்த மாதிரி நம்முடைய குறிக்கோளை அடையும் வரையில் உதவும் , அது ஆன்மீகமாக இருந்தாலும் சரி மற்றும் தொழில் வெற்றி, படிப்பு , இப்படி எதுவாக இருந்தாலும் மனமே குருவாக இருந்து வழிநடத்தும்.


மனதை நிலைநிறுத்துவது எப்படி: 

மனதை இரண்டு முறைகளில் நாம் நிலை நிறுத்தலாம் , முதலாவது ஒரு தனிமையான இடத்திற்கு சென்று தியானம் செய்து மனதை வேற எந்த ஒரு கீழான நிலைக்கும் செல்லவிடாமல் காக்க பழகவேண்டும்.

இரண்டாவது மனதை இடைவிடாமல் நல்ல சிந்தனைகளில் செலுத்தவேண்டும் அதாவது எப்போதும் மனதை இறைவன் பற்றிய சிந்தனையில் வைத்து அன்பும் பக்தியும் உண்டாக பழகுதல்.

உதாரணமாக , ஒரு கறவைப் பசுக்கு நல்ல தீனி வைத்தால் அது எப்படி அதிகப் பால் தருகிறதோ ,அது போன்றதுதான் மனமும். மனதிற்கு அதிக உணவை கொடுக்கவேண்டும் அதனால் மனம் நமக்கு நன்றாக சேவை செய்வதை காணலாம். 

மனதிற்கு உணவு எப்படி கொடுப்பது ? என்ற சந்தேகம் வேண்டாம், தியானம் ,ஜபம் ,பூஜை ,பிரார்த்தனை போன்றவை தான் மனத்திற்குரிய உணவுகள்.

நாம் அன்றாடம் உடலை கவனிப்பது போல மனதிற்கும் உணவு கொடுத்து கவனிக்கவேண்டும் .


மேலும் படிக்கவும் : 
நாம் மனதை காத்துவந்தால் மனம் நம்மை காக்கும் இது உண்மையான விசயம், எனவே உங்களுடைய மனதின் போக்கையும் அதன் செயல்களையும் எப்போதும் அதிக கவனத்துடன் இடைவிடாது ஆராய்ந்து வரவேண்டும், அப்போதுதான் நம்முடைய மனதின் வலிமையை பற்றி நமக்கு தெரியும், சிலபேருக்கு மனதால் மிகவும் பாதிப்பு வரலாம் அவர்களுக்கு வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் இருக்கும் ,அப்படி பட்டவர்கள் உறுதியாக மேலே சொன்ன அந்த இரண்டு முறைகளில் உங்களுக்கு ஏற்ற ஒன்றை இப்போதே கடைபிடுங்கள்.


அதேபோல மனதை ஆராய்ந்து பார்க்க தனிமையான இடத்தை விட சிறந்த ஒன்று இல்லை, எல்லாம் சிலநாட்களுக்கு தான் உங்கள் மனதின் வலிமையை பற்றி உணர்ந்த பின் தனிமையான இடம் அவசியமில்லை ஆனால் அதுவரை தனிமையும் அமைதியான ஒரு இடமும் அவசியம்.


நாம் அனைவருமே அமைதியை விரும்புகிறோம் ஆனால் அதற்கு இறைவனை நாம் சொந்தமாக்கிக் கொள்ளவேண்டும் இதற்கு தடையாக தான் மனம் இருக்கிறது அதை நமக்கு சாதகமாக மாற்றவேண்டும் அப்போது தான் இறைவனை உணர்ந்து அமைதியான வாழ்க்கையை வாழமுடியும்.


மனதை மட்டும் நமக்கு சாதகமாக மாற்றினால் பின் எல்லாத்திலும் வெற்றியே வந்து சேரும் , அதற்கு மனதை அறிந்து அதை தினமும் வலிமைப்படுத்துங்கள் , எல்லாருக்கும் அருமையான வாழ்க்கை அமையும்.

நன்றி நண்பர்களே,

உங்கள் சந்தேகங்களை கீழே கமெண்ட் செய்யுங்கள்

இந்த பதிவை உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்.

---------------------------

Post a Comment

Previous Post Next Post