தியானம் செய்ய சரியான நேரம் எது ?


வணக்கம் நண்பர்களே ,

நிறைய நபர்கள் கேட்டீங்க தியானம் எந்த  நேரத்தில் பண்ணலாம் மற்றும் மனம் அமைதியாக இருக்க எந்த நேரம் சிறந்தது என்று , சரி அதை  பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போறோம் 


➧ முதலில் உங்களுக்குள் ஒரு கேள்வியை கேளுங்கள் அதாவது சிலருக்கு ஏதாவது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மனம் அமைதியாக இருப்பதை உணர்த்திருப்பிங்க , அப்படி உங்களுக்கு எந்த நேரம் சரியாக இருக்கிறதோ அந்த நேரத்தில் தியானம் செய்தால் நல்லது .


சில நண்பர்கள் இரவில் வேலைக்கு போய்விட்டு வருவதால் அதிகாலையில் தியானம் செய்ய இயலாது அப்படி பட்ட நண்பர்கள் மாலை நேரத்தை ஒதுக்கிக்கொள்ளுங்கள் .

➧ இருந்தாலும் எல்லாருக்கும் பொதுவான நேரம் மற்றும் தியானம் சரியாக கைகூடும் நேரம் எது என்று பார்த்தால் அது அருமையான அதிகாலை நேரம் தான், அந்த நேரத்தில் கிடைக்கும் அமைதிக்கு எந்த நேரமும் சரியாக வராது , அதற்காக காலை வேளையில் தியானம் செய்யமுடியவில்லை என்று ஒரேடியாக தியானம் செய்யும் பழக்கத்தை விடவேண்டாம் ...


அந்த அருமையான காலை வேளையில் நாம் புதியதாக தொடங்குவோம் , அதாவது முந்தைய நாள் கவலைகள் , நினைவுகள் , கஷ்டங்கள் இப்படி ஏதும் இல்லாமல் உங்கள் மனம் ஒரு அமைதியான நிலையை அடையும் , அதைவிட்டு மற்ற நேரத்தில் தியானம் செய்யும்போது நாம் பல நபர்களை சந்திப்போம் , அதுமட்டுமில்லாமல் கவலைகள் , கஷ்டங்கள் நம்முடைய நினைவுக்கு வந்திரும் அப்போது தியானம் சரியாக செய்யமுடியாது .

இன்னும் சிலருக்கு காலையில் நிறைய நேரங்கள் இருக்கும் இருந்தாலும் அவர்கள் மாலை வேளையில் தியானம் செய்திட்டு , எனக்கு தியானம் சரியாக கைகூடல என்று புலம்புவார்கள் , அப்படி பட்ட நபர்கள் காலை வேலையே சிறந்தது , அதவாது உங்களுக்கு தியானம் சரியாக செய்யமுடிந்தால் நீங்கள் எந்த நேரத்திலும் தியானம் புரியலாம் .
ஆனால் ஆரம்ப நிலையில் இருக்கும் நபர்களுக்கு அதிகாலை நேரமே சிறந்தது .


இன்னும் சொல்லப்போனால் அந்த காலை வேளையில் தியானம் மற்றும் பிராணாயாமம் செய்யவும் உகந்தது , சுத்தமான காற்று கிடைக்கும் மற்றும் இறைவனின் அருள் முழுவதும் கிடைக்கும்.


தியானத்திற்கு முன்பு :

⧫ காலை கடன்களை கழித்த பிறகே தியானம் செய்யவேண்டும் , அப்போது தான் தியானம் சரியாக கைகூடும் , உடலில் பாரத்தை வைத்து தியானம் செய்யும்போது உங்களுக்கு ஒரே தொந்தரவாக இருக்கும் .


⧫ மனம் அமைதியாக இருக்க உங்களுக்கு பிடித்த இஷ்டதெய்வத்தின் மந்திரத்தை ஜெபியுங்கள் , அதனால் சில நேரத்தில் மனம் அமைதியாகும் .அதன்பின் தியானம் செய்ய தொடங்குங்கள் .


⧫ அதேபோல குளித்த பின்பே தியானத்தில் அமருங்கள் , இந்த உடலில் இறைவன் குடிவரவேண்டும் எனவே முடிந்தவரை சுத்தமாக இருத்தல் அவசியம் .

அவ்வளவு தான் நண்பர்களே ,

முடிந்தால் தினமும் காலை  4 மணி முதல் 6 மணிக்குள் தியானம் செய்ய பழகுங்கள்.


இந்த பதிவை உங்கள் நண்பர்களுக்கு Whatsapp மற்றும் facebook இல் பகிரலாம் 

---------------------------------

1 Comments

Post a comment

Previous Post Next Post