இந்த பாவங்களுக்கு மன்னிப்பே இல்லை 


வணக்கம் நண்பர்களே,


சிவனால் மன்னிக்கவே முடியாத பாவங்கள் சில உள்ளது அதை பற்றித்தான் இந்த பதிவு .நாம் இன்று அனுபவிக்கும் துன்பங்களுக்கு காரணம் நாம் தெரிந்தோ அல்லது தெரியாமல் செய்த பாவங்கள் தான் . முன் ஜென்மத்தில் செய்த பாவங்கள் இந்த நாளில் நிறைய கஷ்டங்களை கொடுத்துட்டு இருக்கிறது , அதில் நாம் சொல்லும் சில விஷயங்களும் அடங்கும் அதாவது நமக்கு தெரிந்தே மனசாட்சியை தாண்டி செய்யும் பாவத்திற்கு பதில் சிவபெருமானிடம் கிடைக்கும் , சரி மன்னிக்கமுடியாத அந்த பாவங்களை பார்ப்போம் .

➧ நமக்கு உடல் கொடுத்த பெற்றோர்களை தகாத வார்த்தைகளால் திட்டுவது மற்றும் அதையும் மீறி அவர்களை துன்புறுத்துவது மிகவும் கொடிய செயல் . சிலநபர்கள் நம்மேல் தவறுகளை வைத்துக்கொண்டு அவர்களை அசிங்கமாக நடத்தினால் ஈசன் சும்மா விடமாட்டார் .

➧ மற்ற உயிர்களின்மீது அன்பு செலுத்தாமல் அவைகளை துன்புறுத்துவது மகா பாவத்தில் அடங்கும் . அதாவது அன்பு செலுத்துறோமோ இல்லையோ துன்புறுத்தாமல் இருக்கவேண்டும்.

➧அரிதாக கிடைத்திருக்கும் இந்த மனித பிறவியை சரியாக பயன்படுத்தாமல் தேவை இல்லாமல் அழிப்பது சிவனுக்கு ஆத்திரத்தை வரவைக்கும் செயல்.

➧ அடுத்தவரின் சொத்துக்கு ஆசைப்பட்டு அவர்களின் சொத்துக்களை அபகரிக்க நினைப்பது மகா பாவத்தில் அடங்கும் , சிலர் கஷ்டப்பட்டு சொத்துக்களை வைத்திருப்பாங்க அதை சிலர் கஷ்டப்படாமல் எளிதாக அபகரிக்க நினைப்பாங்க இதெல்லாம் பெரிய பாவத்தில் அடங்கும் .
➧ கர்ப்பிணி பெண்களிடம் மிக மோசமாக நடந்து கொள்வதும் அவர்களை தீய வார்த்தைகளால் திட்டுவதும் , அதே போல மாதவிலக்கின் போது தவறாக நடத்துவதும் சிவனால் பொறுக்கமுடியாத பாவச்செயல் ஆகும் .


➧ அடுத்தவரின் மனைவி மீதோ அல்லது கணவன் மீது ஆசைப்படுவது மிகப்பெரிய பாவத்தில் அடங்கும் , இதனால் அவர்களின் வாழ்க்கை சீரழிகிறது .


➧ நம்முடைய சுயநலத்திருக்காக எளியவர்களின் கனவை அழிப்பது மற்றும் நாம் தவறு செய்து மற்றவர்களின் மீது பழியை சுமத்துவது போன்றது சிவனின் பார்வையில் மன்னிக்கமுடியாத பாவங்கள் ஆகும் . அதேபோல விலங்குகளை நாம் தெய்வமாக வழிபடும்போது அந்த விலங்கினை உண்பது பாவ செயலில் அடங்கும் .


➧ குழந்தைகளுக்கும் , பெண்களுக்கும் எதிராக செய்யும் வன்முறை சம்பவங்கள் மன்னிக்கமுடியாத பாவத்தில் அடங்கும் , தவறு செய்தவன் அவனுடைய முன்ஜென்ம புண்ணியத்தால் சந்தோசமாக இருப்பார்கள் , ஆனால் விரைவில் இந்த பாவங்களுக்கு சிவனால் தண்டிக்கப்படுவார்கள் . அதனின் விளைவு தப்பிக்க முடியாத அளவுக்கு மோசமாக இருக்கும் .


➧ வயதானவர்களை சரியாக கவனிக்காமல் நடுரோட்டில் விடுவது மற்றும் வரம்புமீறி நடப்பது போன்றவை சிவனுக்கு ஆத்திரத்தை வரவைக்கும் 


நன்றி நண்பர்களே ,

முடிந்தவரை இந்த மாதிரியான தவறுகளை வெளிப்படையாவோ அல்லது நினைப்பால் கூட செய்யவேண்டாம் .


இந்த பதிவை உங்கள் நண்பர்களுக்கு பகிரவும் ( Share to your friends )


--------------------------------------------------

Post a Comment

Previous Post Next Post