அலைபாயும் மனதை கட்டுப்படுத்த சிறந்த வழிமுறைகள் 

வணக்கம் நண்பர்களே ,


மனதை ஒருமுகப்படுத்த சிறந்த வழி அது தினமும் முறையான தியானப் பயிற்சி செய்வதுதான் , அதேபோல மஹான்களின் புத்தகங்களை படித்திட்டு வாருங்கள் , அவர்கள் மனதை கட்டுப்படுத்த அருமையான நிறைய விஷயங்களை சொல்லிட்டு போயிருக்காங்க உறுதியாக உங்களுக்கு உதவியாக இருக்கும்.முக்கியமான விஷயம் தியானம் செய்தவுடன் குறைந்தபட்சம் அரை  மணிநேரமாவது அமைதியாக இருங்கள் , உடனே தூங்கச்செல்வதோ அல்லது செல்போன் பார்ப்பதை தவிர்க்கவும்.
ஏன் என்றால் சிலருக்கு அல்லது சில நேரத்தில் தியானம் பண்ணும்போது அதற்கான பலன் அப்போது கிடைக்காமல் சிறிது நேரத்தில் கிடைக்கும்.எனவே தியானம் செய்தவுடன் மனதை உலக விஷயத்தில் ஈடுபடுத்தவேண்டாம், அப்பறம் செய்த தியானத்திற்கு அர்த்தம் இல்லாமல் போகும் , எனவே தியானத்திற்குப் பின் அமைதியாக இருந்தால் மனம் ஒருமுகப்படுவதை உணரலாம்.


➧ மந்திரம் ஜெபிப்பது மற்றும் தியானம் போன்றவை மனதிற்கான உணவுகள் அதனால் தினமும் மறவாமல் மனதிற்கு உணவு கொடுத்து வாருங்கள்.


வீட்டில் உங்களுக்கான தனி அறை இருந்தால் தினமும் சிலநேரம் மௌனமாக இருந்து பழகிட்டு வாருங்கள் அங்கே செல்போன் கொண்டு போகவேண்டாம் சிலநேரம் அமைதியாக இருங்கள்.


மனம் ஒருமுகப்பட இறைவனின் திருநாமத்தை ஜபித்தல் மிகவும் நல்லது இதனால் உறுதியாக உள்ளம் தூய்மை அடையும், கடவுளின் நாமத்தை ஜெபிக்கும்போது இறைவனையும் மனதளவில் ஒன்றாக நினைத்து செய்துவந்தால் அது மிகவும் நன்மையை கொடுக்கும்.


இது எல்லாமே பயிற்சியை பொறுத்து தான் அமையும் , தினமும் இடைவிடாமல் தியானமோ அல்லது மந்திரத்தை சொல்லுங்கள் ,இதனால் கொஞ்சம் கொஞ்சமாக நம்முடைய மனம் இறைவனை நோக்கியே ஒருமுகப்படும்.

மனம் ஒன்றுமில்லாமல் இருப்பதற்கு பதிலாக இறைவனை நோக்கி சென்றால் சிறப்புதானே.

மனம் ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்கு வர மற்றும் எப்போதும் இறை சிந்தனையில் இருக்க சில மாதங்கள் மற்றும் வருடங்கள் ஆகலாம் உடனே எதையும் எதிர்பார்க்கவேண்டாம் ஆனால் உங்கள் பயிற்சியில் மட்டும் உறுதியாக இருங்கள்.        தினமும் இதை சிலமுறை சொல்லுங்கள் 
" என் மனம் என் கட்டுக்குள் வருகிறது தேவை இல்லாத சிந்தனைகள்
என்னை விட்டு விலகி செல்கிறது "
இப்படி அடிக்கடி சொல்லும்போது அதன்படியே நடக்கும் ஏற்கனவே ஆழ்மனம் பற்றி சொன்ன பதிவில் நீங்கள் பார்த்திருப்பீங்க.


நன்றி நண்பர்களே,

மனம் ஓரளவுக்கு கட்டுப்படும் வரை பயிற்சியை விடாமல் செய்யுங்கள் 

உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கமெண்ட் பண்ணுங்கள்

------------------------

Post a Comment

Previous Post Next Post