லாஹிரி மகாசயரின் அற்புத உபதேசங்கள் 


மஹாவதார பாபாஜியின் முதன்மை சீடர்களில் ஒருவர்தான் இந்த மகான் , இல்லறத்தில் இருந்தாலும் யோகத்தில் இருந்து இறைவனை அடைய முடியும் என்பதற்காக இவரை பாபாஜி தேர்ந்தெடுத்து அவருக்கு கிரியா யோகத்தை அருளி சாதாரண மக்களுக்கும் இந்த கிரியா யோகம் போய் சேரவேண்டும் என்று இவரை தேர்ந்தெடுத்தார் .


அதேபோல லாஹிரி மகாசயரும் இறைவன் தமக்கு கொடுத்த பணியை அற்புதமாக செய்தார்  என்பது நாம் அறிந்த ஒன்றே .லாஹிரி மகாசயர் மகான் தமது சீடர்கள் மற்றும் மக்களுக்கு அருளிய சில அருமையான அமுதமொழிகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் , உறுதியாக இதை நாம் உணர்ந்தால் போதும் இறைவனின் ஆசியை பெறலாம் .


>  நீ யாருக்கும் சொந்தமில்லை அதேபோல இந்த உலகில் யாரும் உனக்கும் சொந்தமில்லை என்பதை நன்றாக நினைவில் வை , எல்லாவற்றையும் ஒருநாள் நீ திடீரென்று விட்டுவிட வேண்டுமென்பதை நினைத்துப்பார் ஆதலால் இறைவனிடம் இப்போதே உன்னை அறிமுகப்படுத்திக்கொள் .


>  மாயையினால் நீ உன்னை  சதையும் எலும்பும் கூடிய ஒரு கட்டான உடலாக காண்கிறாய் , அது ஒரு துன்ப கூடே தவிர வேற ஒன்றுமில்லை ,  தினமும் தியானம் செய் அதனால் சீக்கிரமே உன்னை நீ எல்லாவிதமான துக்கத்திலிருந்தும் விடுபட்ட எல்லையற்ற ஒரு சாரமாக உணர்வாய் .


>  உடலின் கைதியாக இருந்துகொண்டிருப்பதை நிறுத்து ( ஆன்மா இந்த கூட்டில் இருப்பதை நினைவுபடுத்துகிறார் ) யோகம் - ( வாசி யோகம் மற்றும் கிரியா யோகம் )  என்னும் ரகசிய திறவுகோளின் மூலம் பரம்பொருளில் திளைக்க கற்றுக்கொள் .                                      அற்புத கருவி தான் யோகம்


அதேபோல " ஒரு முஸ்லீம் தினமும் ஐந்து தடவைகள் நமாஸ் ( தொழுகை ) செய்யவேண்டும் .

     ஒரு இந்து தினமும் அனேக தடவைகள் தியானத்தில் அமரவேண்டும் 

ஒரு கிறிஸ்துவன் பைபிளை வாசிப்பதுடன் தினமும் பல தடவைகள் மண்டியிட்டு பிரார்த்தனை செய்யவேண்டும் " 


என்று அந்த மகான் இல்லறத்தில் இருந்தாலும் இறைவனை அடைய முடியும் என்பதற்காக இந்த வழிமுறைகளை நமக்கு சொல்கிறார் .
>  அதேபோல வெறும் புத்தகங்களை படிக்கவோ உபதேசங்களை கேட்பதால் மட்டுமே இறைவனை அடைய முடியாது , கருத்துகளை நன்கு உணர்ந்து அதன்படி செயல்படுபவன்தான் விவேகி . 

>  உன்னுடைய எல்லா பிரச்சனைகளையும் தியானத்தின் மூலமாக தீர்த்துக்கொள் , தேவையற்ற உத்தேசங்களை தவிர்த்து அதற்கு பதிலாக கடவுளுடன் உண்மையான ஒன்றுதலை மேற்கோள் .


>  உன்னுடைய மனதிலிருந்து தேவையில்லாத குப்பைகளை களைந்தெறி , இறைவனின் நேரடி அனுபவம் எனும் தெளிந்த அறிவை பெறு .இந்த மாதுரி பல அருமையான உபதேசங்களை லாஹிரி மகாசயர் சொல்லிட்டு போயிருக்காங்க , எனவே இதை கடைபிடிப்போம் இன்றே இறைவனிடம் சரணடைவோம் .


நன்றி நண்பர்களே ,

உங்கள் கருத்துக்கள் மற்றும் சந்தேகங்களை கீழே பதிவிடவும் 

--------------------------------------------------------------------------------------------------------------------------

Post a Comment

Previous Post Next Post