ஈசன் இருக்கும்போது கவலை ஏன் 

வணக்கம் நண்பர்களே , வாழ்வில் பண கஷ்டம் மற்றும் மன கஷ்டத்தால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கீங்களா அப்படியென்றால் உறுதியாக இந்த பதிவு உங்களுக்கு ஒரு ஊக்கத்தை தந்து வாழ்க்கையை சிறப்போடு வாழ வைக்கும் .முதலில் எந்த வேலையாக இருந்தாலும் அதை ஈசனுக்கு செய்வதாக நினைத்து சிறப்புடன் அதை செய்யவேண்டும் . அதாவது நாம் செய்யும் வேலையில் ஒருவருக்கு சந்தோஷம் ஏற்படவேண்டும் . அந்த ஒருவர் சந்தோஷப்பட்டால் ஈசனே ஆனந்தம் அடைந்ததற்கு அர்த்தம் ஆகும் .


அதேபோல முழு முயற்சியுடன் ஈசனை நம்பி நம்மால் முடிந்தவரை போராடவேண்டும் , அதற்கு அப்பறம் ஈசனிடம் அனைத்தையும் விட்டுவிடுங்கள் , சிவன் நம்மிடம் குழந்தை எந்த அளவுக்கு முயற்சி செய்கிறது என்பதை உறுதியாக பார்ப்பார் . 


நாம் செய்யும் வேலையால் வருமானம் மற்றும் வாழ்க்கை ரொம்ப கஷ்டமாக இருக்கிறது என்று வருத்தம் வேண்டாம் நண்பர்களே, நான் என் வேலையை ஈசனுக்காக தானே செய்கிறேன் அதனால் எல்லாத்தையுமே என் அப்பன் ஈசன் அறிவார் என்று கஷ்டம் வரும்போது அவரிடம் விட்டுவிடுங்கள் 

                               ஈசன் உறுதியாக நமக்கும் படி அளப்பார் .➧ எறும்பு ஊரும் சத்தத்தைக்கூட அறியும் ஈசன் தன் குழந்தையின் கதறலை அறியாமலா இருப்பார் . எனவே நம்பிக்கையுடன் எப்போதுமே இருங்கள். உங்கள் கஷ்டத்தை விரைவில் ஈசன் போக்குவார் .
எந்த சூழ்நிலை வந்தாலும் இறைவனை வணங்குவதை நிறுத்தவேண்டாம் , நாம் எல்லாருமே கஷ்டம் வரும்போது மட்டுமே இறைவனை வணங்குவோம் , கொஞ்சம் பணம் வந்தால் போதும் இறைவனை பற்றி சற்றும் சிந்திக்கமாட்டோம் , எனவே இந்த மாதுரி இல்லாமல் எப்போதுமே இறை நினைப்பு வேண்டும் , இதையும் இறைவன் அறிவாரல்லவா.

அதேபோல கஷ்டத்தில் மட்டுமே நாம் இறைவனை வணங்குகிறோம் அதனால் உங்களுக்கு வரும் கஷ்டத்தையும் ஏற்றுக்கொள்ளுங்கள் .


நமக்கு எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அதற்கு பின்னால் நம்மை சரி செய்யும் ஏதோ ஒரு நல்ல விஷயத்தை ஈசன் நடத்துவார் , அதை அறியாமல் ஒருபோதும் ஈசனை திட்டி தீர்க்கவேண்டாம் . 

                    

இனிமேல் உங்களுக்கு தனிமை வேதனை , பண கஷ்டம் , தற்கொலை எண்ணம் , வீட்டு பிரச்சனை , இப்படி எந்த சூழ்நிலை வந்தாலும் , அப்பா இதையெல்லாம் நான் தாங்கிக்கொள்கிறேன் என்று ஈசனை முழுமையாக நம்புங்கள் . இப்போது நமக்கு இருக்கும் துன்பங்கள் அனைத்துமே நிரந்தரமில்லாத ஒன்று தான் எனவே கவலை வேண்டாம் . 

  

                   விரைவில் இறைவன் உங்கள் துக்கத்தை போக்குவார் .                         "அனைத்து உயிருக்கும் படி அளக்கும் ஈசன் 
                                                நமக்கும் படி அளப்பார் "


--------------------------------------------------------------------------------------------------------------------------

Post a Comment

Previous Post Next Post