வணக்கம் நண்பர்களே ,


ஆன்மீகத்தில் இருக்கும் நண்பர்கள் மற்றும் ஆன்மீகம் என்றால் என்ன இறைவனை உணர்வது எப்படி ? தியானம் செய்வது மற்றும் யோகம் பற்றிய நிறைய தகவல்கள் அறிய சிறந்த புத்தகங்கள் மஹான்கள் மற்றும் ஆன்மீகத்தில் நல்ல நிலையை அடைந்த யோகிகளால் எழுதப்பட்டுள்ளது . அதில் நமக்கு தெரிந்த சிறந்த 5 புத்தங்களை பற்றி தான் இந்த பதிவு 

உறுதியாக அனைவர்க்கும் இருக்கும் சந்தேகங்களை தீர்த்து வைக்கும் 


1 ) யோகியின் சுயசரிதை   👈 Link  உலகத்தில் நிறைய நபர்களால் வாசிக்கப்பட்ட சிறந்த புத்தகம் இது , மற்றும் வாழ்வில் வெற்றி பெற்ற அனைத்து சாதனையாளர்களுமே இந்த புத்தகத்தை படிக்க நமக்கு பரிந்துரை செய்கிறார்கள் , ஏனென்றால் ஆன்மீகத்தில் நம்மை உறுதியாக இழுக்கும் சக்தி வாய்ந்த புத்தகம் என்றே சொல்லலாம் .
ஸ்ரீ பரமஹம்ச யோகானந்தரின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவர் தனது குருவை சந்தித்த நிகழ்வுகள் மற்றும் ஆன்மீக தூண்டல்கள் எப்படி இருக்கும் மற்றும் இன்னும் பல யோகிகளின் வாழ்க்கை வரலாறு இருக்கும். அவர்களை யோகானந்தர் சந்தித்து பெற்ற அற்புதமான ஆன்மீக நிகழ்வுகள் இப்படி இன்னும் நிறைய மனதை நெகிழவைக்கும் விஷயங்கள் நிறைந்த இந்த புத்தகத்தை தவறவிடவேண்டாம் . இதை எழுதியவரும் இவரே . அதனால் மிக அருமையாக இருக்கும் .


2 ) சித்தர் பாடல்கள் மூலமும் உரையும்     👈 Link இந்த புத்தகத்தில் 18  சித்தர்களின் பாடல்கள் மற்றும் விளக்கம் மிக அருமையாக தரப்பட்டுள்ளது . குருவிடம் தீட்சை வாங்கி இருந்தாலும் மாயையின் காரணமாக ஆன்மீகத்தில் குழப்பங்கள் இருந்துகொண்டே இருக்கலாம் , அப்படிப்பட்ட சந்தேகங்களை தீர்க்கும் விதமாக சித்தர்களின் பாடல்கள் அமைத்திருக்கும் . இன்னும் குண்டலினி மற்றும் யோகத்தில் உள்ள சூட்சமங்கள் அருமையாக விளக்கம் தரப்பட்டுள்ளது . முதலில் ஒன்றும் புரியாதது போல தான் இருக்கும் மீண்டும் மீண்டும் படிக்கும்போது அனைத்து உண்மைகளும் விளங்கும் .3 ) ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்    👈 Link 

பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் கடவுளை கண்டவர் , காளி தேவியை பூஜித்து அவளருளாலே ஆன்மீக அனுபவங்கள் அடைய பெற்றவர் . ஆன்மீக உண்மைகளை அறிந்தவர் , அனைத்து மதங்களையும் ஆராய்ந்து எல்லா மதமும் ஒன்றேயான இறைவனை தான் வணங்குகின்றன என்று ஆராய்ந்தவர் .

அவரது வார்த்தைகள் அனுபவ வார்த்தைகள் , இது இந்த நூலின் தனிச்சிறப்பாகும் . சீடர்களுக்கு உண்மையை உணர்த்திய விஷயங்கள், இல்லறத்தில் இருந்தாலும் இறைவனை அடைய முடியுமா ? என்ற பெரும் சந்தேகளுக்கும் அருமையாக விளக்கியுள்ளார் .இன்னும் அருமையாக ஒவ்வொரு விஷயங்களையும் சிறு சிறு கதைகளின் மூலமாகவும் நமக்கு விளக்கம் கொடுத்துள்ளார் . 

4 ) ஒளி உள்ள இடத்தில்   👈 Link 


இந்த புத்தகமும் ஸ்ரீ பரமஹம்ச யோகானந்தரால் எழுதப்பட்டது தான் .

தியானம் செய்வது எப்படி மற்றும் தியானம் செய்வதால் ஒருவர் வாழ்க்கையில் எந்த ஒரு சூழ்நிலைகளையும் சமாளிக்கமுடியும் என்று அருமையாக எழுதியுள்ளார் , இன்னும் ஒரு மர்ம ரகசியம் இந்த புத்தகத்தில் உள்ளது , அதை தான் இந்த உலகமே தேடிக்கொண்டிருக்கிறது , ஆனால் அந்த ரகசியத்தையும் சொல்லியுள்ளார்  ,  குருவிடம் தீட்சை பெற்ற நண்பர்களுக்கு உடனே புரியும் . அப்படி இல்லாத நபர்கள் ஒரு சில முறைகள் படிக்கும் போது தங்களுடைய ஆன்மீக அறிவுக்கு ஏற்றபடி புரிந்துகொள்ளலாம் . 

இன்னும் இறைவன் யார் ? இறைவனை உணர்வது கடினமா ? இறைவன் பற்றிய பல அருமையான விஷயங்களை எழுதியுள்ளார் .

உறுதியாக இந்த புத்தகத்தை படிக்க தவறவிடவேண்டாம் நண்பர்களே .

இந்த பிறவியில் இந்த புத்தகம் படிக்க கொடுத்துவைத்திருக்கணும் அந்த அளவுக்கு ரகசியம் நிறைந்த புத்தகம் .


5 ) ஞான ஒளியுடல்     👈 Link 


அமைதியான வாழ்வுக்கு தியானம் செய்வது மற்றும் மன குழப்பத்திலிருந்து வெளிவர வழிமுறைகள் மற்றும் தியானத்தின் கிடைக்கும் நன்மைகள் பற்றிய அருமையான புத்தகம் .

ஆரம்ப நிலை தியானம் செய்யும் நண்பர்கள் வாங்கி படியுங்கள் .


நன்றி நண்பர்களே ,

உறுதியாக இந்த இந்த புத்தகங்களை வாங்கி படியுங்கள் , இறைவனை அடையவும் அறியவும் உதவும் .

நீங்கள் படிக்கும் புத்தகம் எது ? கீழே பதிவிடவும் 

--------------------------------------------------------------------------------------------------------------------------

Post a Comment

Previous Post Next Post